Italian Trulli

பெற்றோர் மனம் புண்படச் செய்வது பெரும் பாவமாகும்:

 


பெற்றோர் மனம் புண்படச் செய்வது பெரும் பாவமாகும்:


"பெரும்பாவங்களிலும் மிகப் பெரிய பாவங்களை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை வினவினார்கள். "நல்லது யாரஸூலுல்லாஹ்!" என்று (நபித் தோழர்கள்) கூறினார்கள். "அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோர்கள் மனம் புண்படச் செய்தல்" என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து உட்கார்ந்து, "அறிந்து கொள்! பொய் சாட்சியம் கூறல்" என்று கூறினார்கள். அதன் பின்னர், அதனை திரும்பத் திரும்பக் கூறுவதை அன்னார் விடமாட்டார்களா என்று நாங்கள் கூறும்வரை. அதனை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


"அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. பெற்றோரைப் புண்படுத்துவது, கொலை செய்வது மற்றும் பொய் பேசுவது ஆகியவை பெரும் பாவங்களில் அடங்கும்" என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


பிறருடைய தாய் தந்தையரை திட்டாதீர்கள்:


"பெரிதினும் பெரிது தன்னுடைய இரு பெற்றோர்களையும்


மனிதன் சபிப்பது" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி


வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "இறைத்தூதர் அவர்களே, மனிதன்


தன் இரு பெற்றோர்களையும் சபிப்பது எப்படி?" என்று கேட்கப்பட்டது.


"(வேறு) ஒரு மனிதனின் தந்தையை இந்த மனிதன் திட்டுவான்.


இவனுடைய தந்தையை அவன் திட்டுவான். அவனுடைய தாயை இவன்


திட்டுவான். உடனே, இவனுடைய தாயை அவன் திட்டுவான்" என்று


அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்


கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்


ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


பெற்றோர் இறந்த பிறகும் ஆற்ற வேண்டிய காரியங்கள்:


"ஒரு மனிதன் இறந்துவிட்டால், மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்கள் துண்டிக்கப்பட்டுவிடும். (1) நிரந்தரமாக நன்மை பெற்றுத் தரும் தர்மம் (2) பயன் பெறப்படும் கல்வி (3 அவருக்காக துஆச் செய்யும் அவரின் நல்ல பிள்ளைகள்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹு அவர்கள், ஆதாரம்: முஸ்லிம்.


ஹழரத் கத்தாதா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், ஹழரத்


அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அறிவிக்கிறார்கள்: "ஏழு விஷயங்கள் மனிதன் இறந்த பிறகும் அதன் நன்மைகள் அவனுக்கு அவனின் கபரில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. அவை 1.அவன் கற்றுக் கொடுத்த கல்வி. 2.ஓடை அல்லது கால்வாய் ஏற்படுத்துவது. 3.அல்லது கிணறு வெட்டுவது. 4.(நிழல் தரும்) மரங்களை நடுவது. 5.அல்லது மஸ்ஜித் கட்டுவது. 6.(வழிவழியாக மக்கள் ஓதும் விதமாக) குர்ஆனை விட்டுச் செல்வது. 7.அவருக்காக துஆ செய்யக்கூடிய நல்ல பிள்ளைகள்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (பைஹகீ, அபூ நுஐம்)


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருச் சமுகத்தில் ஒருவர் ஆஜராகி, "இறைத்தூதர் அவர்களே! எனது பெற்றோர் இறந்த பிறகும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து ஆற்ற வேண்டிய செயல்கள் ஏதேனும் உள்ளனவா?" என்று கேட்டார். அதற்கு, "ஆம், நான்கு செயல்கள் உள்ளன. 1.அவர்களின் (மறுமைக்காக) துஆ செய்வதும், அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்பதும் ஆகும். 2.பெற்றோர் செய்த ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் நிறைவேற்றுவது. 3.பெற்றோரின் நண்பர்களுடன் வள்ளல் தன்மையுடன் நடத்தல். 4.பெற்றோர்களின் உறவினர்களுடன் சமாதானமாகவும், அன்பாகவும் நடப்பது" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபீ ஷைபா)


அல்லாஹ் ரப்புல் இஜ்ஜத் நன்மை செய்தோரின் அந்தஸ்துகளை சுவனத்தில் உயர்த்திக் கொண்டே இருக்கிறான்! அப்பொழுது நன்மையாளர்கள், "இறைவனே! நான் அடைந்துள்ள இந்த அந்தஸ்துகள் எனக்கு எங்கிருந்து, யார் மூலமாக கிடைத்தது?" என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் ரப்புல் இஜ்ஜத் "உமக்காக உமது பிள்ளைகள் கேட்ட துஆ மற்றும் பாவமன்னிப்பின் காரணமாக கிடைத்தது" என்று கூறுவான். (அஹ்மது, தப்ரானி)


ஹழரத் இப்னு காஹில் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்: "எந்த மனிதர் தமது பெற்றோர்களுடன் அவர்கள் வாழும் போதும், அவர்கள் இறந்த பிறகும் அழகிய முறையில் நடக்கிறாரோ அவரை, அல்லாஹ் ரப்புல் இஜ்ஜத் கியாமத்து நாளில் இணக்கத்துடன் நடத்துவான்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது, "பெற்றோர் இறந்த பிறகு அவர்களுடன் எவ்விதம் அழகிய முறையில் நடப்பது?" என்று கேட்கப்பட்டது. "பெற்றோருக்காக இஸ்திஃபார் (பாவமன்னிப்பு) கோருவது. பிறருடைய தந்தையரை திட்டாமல் இருப்பது. அதன் மூலமாக தம் பெற்றோரை பிறர் திட்டாமல் இருக்க வகை செய்வது" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு ஜவ்ஸி)


ஹழரத் முஜாஹித் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், ஹழரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அறிவிக்கிறார்கள்: "இறந்து போன பெற்றோர்களுக்காக, வாழ்பவர்கள் அளிக்கும் பரிசு, அவர்களுக்காக இஸ்திஃபார் (பாவமன்னிப்பு) கோருவதாகும். சந்தேகமின்றி அல்லாஹ் ரப்புல் இஜ்ஜத் கபரில் உள்ளவர்களுக்காக (அவர் தம்) வீட்டில் உள்ளவர்கள்


கேட்கும் துஆக்களைக் கொண்டு மலைகள் அளவு நன்மைகளை அளிக்கின்றான்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு ஜவ்ஸி)


ஹழரத் அம்ரு பின் ஷுஐப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தந்தையின் வாயிலாகவும், அவர் தம் பாட்டனார் வாயிலாகவும் அறிவிக்கிறார்கள்: "ஒருவர் ஸதக்கா (தான தர்மம்) செய்ய நாடினால், தமது பெற்றோருக்காக ஸதக்கா செய்யவும். பெற்றோர்கள் முஸ்லிம்களாக இருந்தால், ஸதக்காவிற்கு ஈடான நன்மைகள் பெற்றோர்களுக்கு கிடைக்கும். மேலும், ஸதக்கா கொடுத்தவருக்கும் பெற்றோர்களுக்கு இணையான நன்மைகள் கிடைக்கும். இதனால் பெற்றோரின் நன்மைகளில் எந்த ஒரு குறைவும் ஏற்படாது" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (தப்ரானி)


ஹழரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஹழரத் ஸஅத் பின் உபாத ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்னையார் இறந்த போது அன்னார் (அவ்விடத்தில்) இருக்கவில்லை. (பிறகு அவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று) "இறைத்தூதர் அவர்களே! எனது அன்னையார் இறந்த போது நான் (அங்கு) இருக்கவில்லை. அன்னையாருக்கு பலன் தரும்படியாக எதையாவது ஸதக்கா கொடுக்கலாமா?" என்று கேட்டார். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம் (ஸதக்கா) கொடு" என்று கூறினார்கள். உடனே ஹழரத் ஸஅத் பின் உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "இறைத்தூதர் அவர்களே! நான் தங்களை முன்னிலை வைத்து எனது தோட்டத்தை எனது அன்னைக்காக ஸதக்கா கொடுக்கிறேன்" என்று கூறினார். (அப்துர் ரஸ்ஸாக்) ஹழரத் ஹஸன் பஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அறிவிப்பில், திரு மதீனாவில் ஹழரத் ஸஅத் ரலியல்லாஅஹு அன்ஹு அவர்களுக்கு சொந்தமான கிணற்றை ஸதக்காவாக கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது. (நஸாயீ)


"என்னுடைய தாய்க்கு அவளுடைய உயிர் (திடீரென) பிரிந்து விட்டது. அவளுக்கு பேச முடிந்திருந்தால், அவள் தர்மம் செய்திருப்பாள் என்று நான் எண்ணுகிறேன். அவள் சார்பாக நான் தர்மம் செய்தால், அவளுக்கு (அதன்) நற்கூலி கிடைக்குமா?" என்று ஒருவர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவினார். அதற்கு "ஆம்" என்று பதில் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹுதஆலா அன்ஹா அவர்கள், ஆதாரம்: புகாரி.


ஜூஹைனிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி


ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "என் தாய்


ஹஜ்ஜூச் செய்யாமல் இறந்து விட்டாள். அவளுக்காக நான் ஹஜ்ஜூச் செய்யலாமா?" என்று கேட்டாள். அதற்கு, "ஆம், அவளுக்காக ஹஜ்ஜூச் செய். உன் தாய் கொடுக்க வேண்டிய கடன் ஏதாவதிருந்தால் அதனை நீ நிறைவேற்றுவாய் அல்லவா? அல்லாஹ்வுக்கும் கொடு. அல்லாஹ் (தன் கடனை அடைய) அதிக உரிமையுள்ளவன்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹு அவர்கள். ஆதாரம்: புகாரி.


"நாயகமே! நான் என்னுடைய அன்னைக்கு ஒரு அடிமைப் பெண்ணை அன்பளிப்புச் செய்திருந்தேன். (இப்போது) என்னுடைய அன்னை இறந்து விட்டார்கள்" என்று ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினாள். (அதற்கு) அவர்கள், "உமக்கு (அவ்விதம் அன்பளிப்புச் செய்ததற்கான) நன்மையும் கிடைக்கும். வாரிசு என்ற முறையில் உமக்கு அந்த அடிமைப் பெண் மீண்டும் உரியவளாகி விட்டாள்" என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அது கேட்டு அப்பெண்மணி) "என் அன்னை மீது ஒரு மாதம் நோன்பு நோற்பது கடமையாக இருந்தது. அவருக்காக நான் நோன்பு நோற்கவா?"என கேட்டாள். (அதற்கு) "அவருக்காக நீர் நோன்பு நோற்பீராக!" என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மீண்டும்) அப்பெண்மணி, "அவர் ஹஜ்ஜூச் செய்யவில்லை. அவருக்காக நான் ஹஜ்ஜூச் செய்துவிடலாமா?" என்று கேட்டாள். "அவருக்காக நீர் ஹஜ்ஜூச் செய்யும்" என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா ரலியல்லாஹுதஆலா அன்ஹு அவர்கள், ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ.


"ஒருவர் தம்முடைய பெற்றோரில் ஒருவருக்காக ஹஜ்ஜூச் செய்தால், அது அவருக்குப் போதுமானதாகும். அவருடைய ஆன்மாவுக்கும் வானலோகத்தில் நன்மாராயம் கூறப்படும். மேலும், இறைவனிடம் "இவர் நன்மை செய்பவர்" என்று எழுதப்படும். அவர் பாவியாக இருப்பினும் சரியே!" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜைதுப்னு அர்கம் ரலியல்லாஹூதஆலா அன்ஹு அவர்கள், ஆதாரம்: ரஜீன்,


"நாயகமே! என் பெற்றோர் இறந்த பின்னரும் நான் அவர்களுக்கு நன்மை செய்யும்படியான கடமை யாதேனும் என்மீது உள்ளதா?" என்று ஒருவர் (நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம்) வினவினார். அதற்கு அவர்கள், "ஆம். அவர்களுக்காக (இறைவனிடம்) இறைஞ்சும். அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோரும்; அவர்களுக்குப் பின் அவர்களின் மரணசாஸனத்தை நிறைவேற்றும். (அவர்களுடைய வாக்குறுதிகளைப் பூரணமாக்கும்.) அவர்களின் உறவின் முறையார்களுடன் உறவு கொண்டாடும். அவர்களுடைய நண்பர்களைக் கண்ணியப்படுத்தும்" என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூ உஸைத் மாலிக் இப்னு ரபீ அதஸ்ஸா இதீ ரலியல்லாஹூதஆலா அன்ஹு அவர்கள், ஆதாரம்: அபூ தாவூத்.


நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அறிவிப்பில் உலக முடிவு நாளுக்கான பதினைந்து செயல்கள் பற்றி கூறியுள்ளார்கள். அவற்றில் இந்த தலைப்புடன் தொடர்புடைய இரண்டு செயல்கள் பற்றி மட்டும் இங்கே கூறப்படுகிறது. (1) கணவன் தன் மனைவிக்கு அடங்கி நடப்பான் (2) மனிதன் தன் நண்பனுக்கு நன்மை புரிந்து தன் தாய்க்கு தீங்கு செய்வான், தன் தந்தைக்கும் அநீதம் செய்வான் என்பதாகும். இந்த ஹதீஸை ஹழரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆதாரம்: திர்மிதீ. எனவே, இந்த உண்மையை உணர்ந்து, மறுமைக்கு சோதனையாக ஆகாதபடி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்!

கருத்துகள்