வீண் செலவு வேண்டாமே
நாலு ஏக்கர் தென்னந்தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே....' என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.
இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் 'பே ஷன்' என்றோ 'டிரன்ட்' என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது.
உங்களுக்கு எதிரே செல்லும் இளைஞனின் கையிலிருக்கும் செல்போனின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்பதுதான் பதறடிக்கும் உண்மை! நண்பனிண்டம் ஒரு ஐபோன் இருந்தால் தானும் ஒரு ஐபோன் வாங்கிவிட வேண்டும் என பலர் துடிக்கிறார்கள். புதிதாக என்ன மாடலில் செல்போன் வந்தாலும் அதை வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பு இன்றைய இளைஞனிடம் காணப்படுகிறது.
' தாங்கள் பட்ட கஷ்டத்தைத் தங்கள் பிள்ளைகள் படக் கூடாது ' என பெற்றோர் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். வரப்பில் படுத்து வேலை செய்தாலும் பிள்ளைகளுக்கு வியர்வை அரும்பக் கூடாது என சாமரம் வீசுவார்கள். பணத்தின் அருமை பிள்ளைகளுக்குப் புரியாமல் போவதற்கு இதுவே கூட காரணமாகி விடுகிறது.
இளம்பெண்களிடம் இருக்கும் ஒரு பழக்கம், ஏகப்பட்ட மேக்கப் பொருட்களை வாங்கிக் குவிப்பது உடல் ஆரோகியத்துக்கு ஆபத்தானது, தோலுக்குத் துரோகம் இழைப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் கரடியாய் கத்தினாலும் பலரும் பொருட்படுத்தாமல்
இருப்பது வேதனை தான்.
இப்போது ஒன்லைன் மூலம் நிறைய
பொருள்களை வாங்கி குவிப்பது ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பொருள்களின் மீது உள்ள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வரவுக்கு மேல் செலவு , பிறகு கடன் சுமைதான் ! பார்ப்பதெல்லாம் கண்ணை கவருகிறது , மனதை ஈர்க்கிறது "என்ன செய்வது' ?என்று சிலரின் வாதம் , பிடிவாதம். கடைசியில் கணவன்மார்கள் நிலை பரிதாப நிலை !
சிந்தியுங்கள் ! நமக்கு ஒரு பொருள் தேவையாக இருந்தால் , அதை வாங்கணும். தேவை இல்லை என்றால். வாங்க தேவையில்லை . செலவு செய்வது எளிது ஆனால், பணம் சம்பாதிப்பது கஷ்ட்டம் @
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!