வறுமையிலும் செம்மை

 


வறுமையிலும் செம்மை




ஓர் ஊரில் செல்வன் என்ற ஏழை வசித்து வந்தான். அவன் எப்பொழுதும் சாப்பிட அமரும் போது தன் மனைவியைப் பார்த்து " பால், பழம், சர்க்கரை, கொண்டு வந்து வை" என்பான்.


அவளும் கொண்டு வந்து வைப்பாள். அவனும் சாப்பிடுவான்.


அவன் பேசும் குரல் பக்கத்து வீட்டிற்குக் கேட்டது. 'நாள் தோறும் எவ்வளவு சுவையான உணவைச் சாப்பிடுகிறான். கொடுத்து வைத்தவன்'என்று அவர்கள் கொண்டார்கள். நினைத்துக்


இவ்வாறாக நாள்தோறும் செல்வன் சொல்வதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரன். ஒரு நாள் செல்வனைப் பார்த்து,"இந்த வறுமை நிலையிலும் உன்னால் எப்படி நாள் தோறும் பால், பழம், சர்க்கரை சாப்பிட முடிகிறது?" என்று கேட்டான்.


அதற்கு அவன் "ஒரு காலத்தில் நான் மிகவும் செல்வ நிலையில் இருந்தவன். இப்போது ஏழையாகி விட்டேன். வளமையாக இருக்கும் போது நான் பால், பழம் சாப்பிட்டேன். இப்பொழுதும் என் மனைவியைப் பார்த்து, பால், பழம், சர்க்கரை கொண்டு வா என்பேன். அவள் ஒரு பாத்திரத்தில் நீராகாரமும் இரண்டு மிளகாயும் நான்கு உப்புக் கல்லும் கொண்டு வந்து வைப்பாள். நீராகாரம் எனக்குப் பால், மிளகாய் பழம், உப்புக் கல் சர்க்கரை என்று நினைத்து மகிழ்ச்சியாகச் என்றான். சாப்பிடுவேன்"


அதனைக் கேட்ட பக்கத்து வீட்டுக் காரன் ஆச்சர்யம் அடைந்தான்


நீதி: நம்மை விடக் கீழே இருப்பவர் கோடி பேர்கள். ஆகவே இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

கருத்துகள்