உபதேசம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது!
அல்லாஹ்வின் திருப்பெயரால் .....
அல்லாஹ் தாலா தனது திருமறையில் பல இடங்களில் , மனிதர்களை பார்த்து ''' நீங்கள் சிந்திக்கமாடீர்களா ? சிந்தித்து உணரமாடீர்களா ? விளங்கிக்கொள்ள மாட்டீர்களா ? நல்லுபதேசம் பெறமாடீர்களா என்று கேட்கின்றான்.
இந்த நல்லுபதேசம் யாருக்கு பயன் தரும் !
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக. (அல்குரான் )
இன்று எங்கு பார்த்தாலும் நிறைய உபதேசங்கள் பேசப்பட்டு வருகிறது; பகிரப்பட்டு வருகிறது. சோசியல் மீடியாவில் நிறைய உபதேசங்கள் , நல்ல அறிவுரைகள் , மார்க்க சொற்பொழிவுகள் இன்னும் பல நல்ல விடயங்கள் நாம் பார்த்து வருகிறோம்! அதனால், நமக்கு நமக்குள் ஏதாவது சிறிய மாற்றங்கள் வந்ததா என்றால் . நிச்சயமாக ''இல்லை என்று தான் பதில் வரும் ''
ஏன் ? என்ன காரணம் ? சோசியல் மீடியா என்பது அது பொதுவான தளம் . அது பெரும்பாலாருக்கு பொழுதுபோக்குவதற்கான ஒரு தளம் என்று தான் சொல்லவேண்டும். அந்த இடத்தில் நமக்கு ஒரு அச்சமோ , ஒரு உணர்வோ ஏற்பட வாய்ப்பில்லை. அந்த பொது தளத்தில் நல்ல விஷயங்களுடன் , நிறைய பொழுதுபோக்கான விடயங்கள் மற்றும் பொய்யான விடயங்கள் , இன்னும் பல ஆபாசமான விஷயங்களும் கலந்து இருக்கிறது. இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்று உறுதியாக கூறமுடியும்!
இன்று நம்மில் பலர் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் போடுகிறோம் . அதில் சிலர் வேடிக்கையான விடயங்களை போடுவார்கள். இன்னும் சிலர் குரான் ஹதீஸை போடுவார்கள் . மேற்கோள்களை போடுவார்கள் (mufti ismail menk இன்னும் சிலருடைய quotes )இன்னும் சில பேர்கள் ஏதாவது ஒன்றை போடுவார்கள். இந்த பழக்கம் , ஒரு வாடிக்கையான பழக்கமாக ஆகிவிட்டது. சிலர் தூங்குவதற்கு முன்னால் ஏதாவது ஒரு ஸ்டேட்டஸ் போட்டால்தான் அவர்களுக்கு தூக்கமே வரும். இப்படி நம்முடைய வாழ்க்கை முறைகள் போயிக்கொண்டு இருக்கிறது! இதில் நான் உள்பட நிறையபேர்கள் , மறுமை நிலையை (மறுமை ஸ்டேட்டஸ் ) மறந்து . வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பைத்தியம் பிடித்து அலைகின்றோம் ! இது எதார்த்த உண்மை ! இதன்மூலம் ஏதாவது நமக்கு ஒரு பாடமோ அல்லது படிப்பினையோ கிடைத்ததா என்றால் , ''இல்லை என்றுதான் பதில் வரும்'' . இது ஒரு சடங்காக மாறிவிட்டது.
நீங்களே ஒரு அமைதியான இடத்தில் இருந்துகொண்டு , ஆழமாக சிந்த்தித்துப் பாருங்கள்! கொஞ்சம் உங்களுக்கு உண்மையின் உணர்வு எதார்த்தம் புரியும்!
இந்த சோசியல் மீடியா மூலம் நல்லுபதேசம் பெற்று படிப்பினை பெற்றேன் என்று சொல்லக் கூடிய நபர்கள் எத்தனை பேர்கள் என்று உறுதியாக கூறமுடியுமா ? விரலைவிட்டு எண்ணுமளவுக்கு இருக்கலாம். அல்லாஹ் மிக்க அறிந்தவன். ஆனால் , இந்த சோசியல் மீடியா மூலம் சீரழிந்தவர்கள் , சீறுகெட்டு போனவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்று உறுதியாக கூறமுடியும்! இதைவிட்டு விலகிவிடுங்கள் என்று நான் கூறவில்லை மாறாக நீங்கள் பெற்றது என்ன இழந்தது என்ன என்று கொஞ்சம் கணக்கிட்டு பாருங்கள் என்று நான் கூறுகிறேன்.
நாம் கேட்கக்கூடிய நல்லுபதேசம் அது நமக்கு ஓரளவு அல்லாஹ்வின் மீது அச்சமும் , பணிவும் , வாழ்வு முறைகள் வரவேண்டும்! நாம் மறைவாக இருக்கும் இடத்தில் அல்லாஹ்வின் அச்சம் இருக்கிறதா என்று நமக்கு நாமே சோத்தித்து பார்க்கவேண்டும்! நாம் தனியறையில் அமர்ந்துகொண்டு கைத்தொலைபேசியை வைத்துக்கொண்டு நிறைய காட்சிகள் பார்க்கின்றோம்! instagram முதல் youtube வரை நாம் நோண்டிக்கொண்டு இருக்கிறோம். அதில் நமக்கு பயன் உள்ள விஷயங்களை மட்டுமா பார்க்கிறோம் என்று ஒரு வினாடி நமக்கு நாமே சோத்தித்து பார்ப்போம்! அப்படி தவறான காட்சிகள் பார்த்தால், நமக்கு அல்லாஹ்வின் மீது பயம் ஏற்படுகிறதா அல்லது எந்த உணர்வும் இல்லாமல் இருக்கிறதா என்று நாங்களும், நீங்களும் மனசாட்சியோடு சிந்திப்போம்! உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்! முடிவு எடுப்பது நீங்கள்தான்! நீங்கள் தான் உங்களுக்கு பொறுப்பாளிகள் ! நீங்கள்தான் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறவேண்டும் !
நாம் தனியறையில் இருக்கிறோம் , நம்மை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தோம் என்றால் . நமக்கு இன்னும் நல்லுபதேசம் பெறவில்லை என்று பொருள் கொள்ளலாம்! நமக்கு இன்னும் அல்லாஹ்வின் அச்சம் உள்ளத்தில் வரவில்லை என்று புரிந்து கொள்ளலாம்!
நாம் நல்லுபதேசம் பெறக்கூடிய ஒரு சிறந்த இடம் அல்லாஹ்வின் மஸ்ஜிதுகள் . அங்கே வானவர்கள் அமர்ந்து இருப்பார்கள்! நமக்கு வேறு எந்த சிந்தனையும் வராது. அப்படி வந்தாலும் அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டு பாதுகாப்பு தேடலாம்! வீண் பேச்சும் , வீண் சிந்தனையும் , வேடிக்கையான காரியங்களும் , பொழுபோக்கான விஷயங்களும் அங்கே காணமுடியாது.
ஷைத்தானுக்கு ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் , இந்த சமூக வலைத்தளம் தான் ! இதன் மூலமாக ஷைத்தானுக்கு நம்மில் சிலர் ஷைத்தான் வழிகெடுப்பதற்கு எளிதான வழியை ஏற்படுத்திவிட்டார்கள் என்று கூறலாம்! (உதாரணத்துக்கு மறைமுகமான இணைவைப்பு முகஸ்த்தூதி )
இன்ஷாஅல்லாஹ் நாம் நல்லுபதேசம் பெறக்கூடிய நல்லடியார்களாக மாற அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக ஆமீன்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!