நம் உள்ளம் அமைதி பெறவேண்டும் எப்படி ?
நம்மில் சிலருக்கு நிறைய வசதிகள் , செல்வங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன . ஆனால் , அவர்களுக்கு உள்ளத்தில் அமைதி இல்லை . எல்லாம் இருந்தும் மன அமைதி இல்லையே என்று புலம்பும் நிறைய வசதி உள்ளவர்கள் இருக்கிறார்கள். சிலதை பணம் கொடுத்து வாங்கமுடியாது, அதில் ஒன்று இந்த மன அமைதி. எங்கே தேடுவது ? எப்படி கிடைக்கும் ?
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குரான் 13:28)
அல்லாஹ்வின் நினைவால் மட்டும் உள்ளம் அமைதிபெறும் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் தெள்ள தெளிவாக கூறியுள்ளான் .
அல்லாஹ்வை நினைவுகூருவது என்பது
நிறைய விஷயங்கள் இடுக்கிறது. திருக்குர்ஆன் ஓதுவது , திக்ர் செய்வது ,
இன்னும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி செய்யும் அனைத்து நற்செயல்களும் அல்லாஹ்வை நினைவு கூறுவதுதான் !
மன அமைதியை விட மிகப்பெரிய செல்வம் இந்த உலகில் ஏதுமில்லை....!
அடுத்த செல்வம் ஆரோக்கியம் ..!
வாழ்க்கைக்கான தேடலில் தொலைக்கக் கூடாத மிகப்பெரிய புதையல் மனஅமைதி....!!
ஆணாயினும், பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) நாம் தூய (நிம்மதியான) வாழ்வு வாழச்செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோருக்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம்.”
(அல்குரான்:16:97)
இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் “நிம்மதியான வாழ்க்கை” என்று விளக்கம் தருகின்றார்கள்.
மனித வாழ்வென்பதை இரண்டு அடிப்படைகளை மையமாகக் கொண்டு அல்லாஹ் இயக்கிக் கொண்டு இருக்கின்றான்.
இன்பம், துன்பம் என்ற இரண்டு அடிப்படைகளில் மாறி, மாறி அவன் வாழ்க்கையை கழிக்க வேண்டியிருக்கின்றது.
இவ்விரண்டு நிலைகளிலும் ஓர் இறை நம்பிக்கையாளனால் மட்டுமே நிம்மதியாக வாழமுடியும் என்று சர்தார் நபி {ஸல்} அவர்கள் சான்று பகர்கின்றார்கள்.
ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஓர் இறை நம்பிக்கையாளனின் நிலை குறித்து நான் வியப்படைகின்றேன். அவனுடைய அனைத்துக் காரியங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைகின்றது.
இந்த நிலை ஓர் இறைநம்பிக்கையாளனைத் தவிர வேறெவருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை!
அவனுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் தருகிற நிலை வந்தால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகின்றது!
அவனுக்கு துக்கமும், கஷ்டமும் தருகிற நிலை வந்தால் பொறுமையை மேற் கொள்கின்றான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றது!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம், ரியாளுஸ் ஸாலிஹீன் )
ஆக, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் உலக மனித சமூகத்தின் முற்றத்தில் போட்டுடைக்கிற மிகப்பெரிய உண்மை இது தான் “இந்த உலகத்தில் ஈமானும், நல்லறங்களும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிற பண்பும், சோதனையின் போது பொறுமையை மேற்கொள்கிற பண்பும் கொண்டிருக்கிற அல்லாஹ்வையும், அவன் தூதரையும் உண்மையாக நம்பிக்கை கொண்டிருக்கிற ஓர் இறைவிசுவாசியால் மட்டுமே உலகத்தில் நிம்மதியாக வாழமுடியும்” என்று.
நிம்மதியைத் தருகிற அம்சங்கள் எவைகள் என்று இஸ்லாம் இனம் காட்டியது போன்று நிம்மதியை இழக்கச் செய்கிற அம்சங்களையும் இஸ்லாம் இனம் காட்டி இருக்கின்றது.
“தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போது “நிச்சயமாக, நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!” ( அல்குர்ஆன்: 2:156,157 )
அல்லாஹ் கூறுகின்ற இந்த நான்கு அடிப்படைத் தத்துவங்களைப் பின்பற்றுகிற ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையே நிச்சயம் நிம்மதியும், அமைதியும் தவழ்வதாய் அமைந்திருக்கும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
நிம்மதியை இழக்க செய்யக்கூடிய அபாயகரமான காரியங்கள்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிவில் அந்த
இரண்டு கெட்டகுணத்தையும் பார்ப்போம். ஒன்று :பேராசை .இரண்டாவது : பொறாமை.😡👻👎
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!