நிம்மதியை இழக்கச் செய்யும் அபாயகரமான ஆற்றல் பேராசைக்கும், பொறாமைக்கும் உண்டு.
நிம்மதியை இழக்கச் செய்கிற அம்சங்களையும் இஸ்லாம் இனம் காட்டி இருக்கின்றது.
நிம்மதியை இழக்கச் செய்யும் அபாயகரமான ஆற்றல் பேராசைக்கும், பொறாமைக்கும் உண்டு.
பேராசை….
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ
”அல்லாஹ் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்”.
அல்லாமா நைஸாபூரி (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னுல் அஃராபீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய முஃஜம் எனும் நூலில் பதிவு செய்திருக்கிற ஒரு செய்தி..
ஈஸா (அலை) அவர்கள் ஒரு நாள் வெளியூருக்கு பயணமானார்கள். பயணத்தின் இடையே ஒரு மனிதர் ஈஸா (அலை) அவர்களோடு இணைந்து பயணம் செய்ய அனுமதி வேண்டினார். ஈஸா (அலை) அவர்கள் அதற்கு இசைவு தந்தார்கள்.
இருவரும் நீண்ட தூரம் பயணம் செய்துவிட்டு ஓரிடத்தில் இளைப்பார அமர்ந்தார்கள். ஈஸா (அலை) அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்து இரு ரொட்டிகளை எடுத்து தங்களுக்கு ஒன்று எடுத்து விட்டு, அவருக்கு ஒன்றைக் கொடுத்தார்கள். உணவுப் பொட்டலத்தில் மீதம் ஒரு ரொட்டி இருந்தது.
ஈஸா (அலை) அவர்கள் சாப்பிட்டு முடிந்து, கைகழுவி விட்டு வருவதற்குள் அந்த ஒரு ரொட்டியை எடுத்து அவர் சாப்பிட்டு விட்டார். ஈஸா (அலை) அவர்கள் வந்து பார்க்கின்றார்கள். உணவுப் பொட்டலத்தில் இருந்த ஒரு ரொட்டியைக் காணவில்லை. ஈஸா (அலை) அவர்கள் அவரிடம் “இங்கிருந்த ஒரு ரொட்டியை எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கவர் “எனக்குத் தெரியாது” என்றார்.
உடனடியாக, அங்கிருந்து இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் ஒரு மான் கூட்டம் நின்று கொண்டிருந்தது. அதன் அழகை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஈஸா (அலை) அவர்கள் அவரிடம் “உமக்கு மான் இறைச்சி சாப்பிட ஆசை இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்” என்றார்.
உடனே, ஈஸா (அலை) அவர்கள் அங்கிருந்த மான்களில் ஒரு கொழுத்த மானை அழைத்தார்கள். அது ஈஸா (அலை) அவர்களின் அருகே வந்ததும் அந்த மானிடம் ஈஸா (அலை) அவர்கள் ஏதோ பேசினார்கள்.
பின்னர், அந்த மானை அறுத்து, அதன் இறைச்சியை சுட்டு இருவரும் உணவாக உட்கொண்டனர். பின்னர் அங்கு அவர்கள் இருவரும் கடித்துப் போட்ட எழும்புகளை ஈஸா (அலை) அவர்கள் ஒன்றிணைத்து வைத்து “அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நீ மானாக மாறி இங்கிருந்து பழைய படி எழுந்து போ” என்று கூறினார்கள். அது மானாக மாறி உடலை ஒரு உலுக்கு உலுக்கி அங்கிருந்து சென்று தன் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது.
ஈஸா (அலை) அவர்கள் அந்த மனிதரை நோக்கி “அல்லாஹ் எவ்வளவு பெரிய ஆற்றல் கொண்டவன் என்பதை நீ அறிந்து கொண்டாயா? உண்மையில் அல்லாஹ் தன் ஆற்றலின் மூலம் நமக்கு பேருபகாரம் செய்திருக்கின்றான்” என்று கூறி விட்டு இப்போது சொல்லும்! அந்த ஒரு ரொட்டியை யார் எடுத்தது” என்று கேட்டார்கள்.
அதற்கவர், “எனக்குத் தெரியாது” என்று கூறினார். பின்னர் இருவரும் அங்கிருந்து மீண்டும் பயணத்தைத் துவங்கினார்கள்.
நீண்ட தூர பயணத்திற்குப் பின்னர் குறுக்கே காட்டாற்று வெள்ளத்தால் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆற்றைக் கண்டார்கள். அதைக் கடந்து அக்கரைக்குச் செல்லவேண்டும்.
இப்போது ஈஸா (அலை) அவர்கள் தம் கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறு அந்த மனிதரிடம் கூறினார்கள்.
பின்னர் அவரை அழைத்துக் கொண்டு ஈஸா (அலை) அவர்கள் அந்த ஆற்றின் மீது சாதரணமாக தரையில் நடந்து செல்வது போன்று சென்றார்கள். அக்கரைக்கும் வந்து விட்டார்கள்.
ஈஸா (அலை) அவர்கள் அந்த மனிதரை நோக்கி “அல்லாஹ் எவ்வளவு பெரிய ஆற்றல் கொண்டவன் என்பதை நீ அறிந்து கொண்டாயா? உண்மையில் அல்லாஹ் தன் ஆற்றலின் மூலம் நமக்கு பேருபகாரம் செய்திருக்கின்றான், இல்லையெனில் நாம் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்போம்” என்று கூறி விட்டு இப்போது சொல்லும்! அந்த ஒரு ரொட்டியை யார் எடுத்தது” என்று கேட்டார்கள்.
அதற்கவர், “எனக்குத் தெரியாது” என்று கூறினார். பின்னர் இருவரும் அங்கிருந்து மீண்டும் பயணத்தைத் துவங்கினார்கள்.
நீண்ட தூர பயணத்திற்குப் பின்னர் மணற்பாங்கான ஓர் பெரும் திடலை அடைந்தார்கள். அங்கு ஓரிடத்தில் சிறிது நேரம் இளைப்பாறினார்கள்.
அப்போது, ஈஸா (அலை) அவர்கள் அங்கிருந்த மணலை மூன்று பெரும் குவியலாக அமைத்து “அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நீ தங்கமாக மாறி விடு” என்றார்கள். அது தங்கமாகவே மாறியது.
அருகே இருந்த அந்த மனிதரின் முகம் அதைக் கண்டதும் தங்கத்தை விட மேலாக இலங்கியது.
ஈஸா (அலை) அவர்கள் ஒரு குவியல் தங்களுக்கு என்றும், இன்னொரு குவியல் அந்த மனிதருக்கு என்றும், மூன்றாம் குவியல் ”உமக்குத் தான் தெரியாது என்று சொல்லி விட்டீரே?” அந்த மூன்றாவது ரொட்டியை எடுத்தவருக்கு” என்றும் கூறினார்கள்.
உடனே, நபியே! நான் தான் அந்த மூன்றாவது ரொட்டியை எடுத்தேன்” என்று அந்த மனிதர் கூறினார்.
அப்போது, ஈஸா (அலை) அவர்கள் “உலகத்தின் மீதும், உலகப் பொருட்களின் மீதும் பேராசை கொண்ட ஒரு மனிதனோடு தொடர்பு வைப்பதென்பது ஒரு இறைத்தூதருக்கு அழகல்ல! இம்மூன்று குவியல்களையும் நீயே எடுத்துக்கொள்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றார்கள்.
ஆள் அரவரமற்ற திடலில் மூன்று பொற்குவியல்களோடு என்ன செய்வதென்று திகைத்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில் அங்கே இன்னொரு இரண்டு பேர் வந்து சேர்கின்றார்கள்.
வந்த இருவருக்கும் அந்த பொற்குவியலின் மீது ஆசை பிறக்கிறது. மூவரும் பேசி ஒரு முடிவுக்கு வருகின்றார்கள். ஆளுக்கு ஒரு குவியலை எடுத்துக் கொள்வோம்.
மூவருக்கும் பசி எடுக்கவே அந்த இருவரில் ஒருவர் தன்னோடு வந்த மற்றவரிடம் “அருகில் இருக்கிற ஊருக்கு சென்று ஏதாவது உணவு வாங்கிவா, நாம் சாப்பிட்டு விட்டு இங்கிருந்து இதை எடுத்துச் செல்வோம்” என்றார்.
அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், ”நாம் ஏன் இதை மூன்றாக பங்கு வைக்க வேண்டும். பேசாமல் ஆளுக்கு ஒன்றைக்குவியலை எடுத்துக் கொள்வோம். அவன் உணவு வாங்கி வந்ததும் நாம் இருவரும் சேர்ந்து அவனைக் கொன்றுவிடுவோம்” என்று உணவு வாங்கச் செல்பவனோடு வந்தவன் சொன்னான்.
ஈஸா (அலை) அவர்களோடு வந்தவனும் அதை ஆமோதித்தான். உணவு வாங்கச் சென்றவன் “நாம் ஏன் தங்கக்குவியலை மூன்றாக ஆக்கவேண்டும். இருவரையும் கொன்று விட்டு நாமே முழு தங்கக்குவியலையும் எடுத்துக் கொள்வோம்” என்று திட்டம் தீட்டி வாங்கிய உணவில் விஷம் கலந்தான். பின்னர் உணவுப் பொட்டலத்தோடு அங்கு வந்து சேர்ந்தான்.
முன்னரே திட்டமிட்டபடி அவன் உணவுப் பொட்டலத்தைக் கொண்டு தந்ததும் இருவரும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டனர்.
பின்னர் மகிழ்ச்சியோடு உண்வு உண்டனர். ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் அவர்களும் கொல்லப்பட இருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை. உண்ட சிறிது நேரத்தில் விஷம் தலைக்கேறி இருவரும் மாண்டனர்.
மூவரின் பேராசையும் மூர்ச்சையைப் பெற்றுத்தந்தது. சில நாட்கள் கழித்து ஈஸா (அலை) அவர்கள் தங்கள் சீடர்களோடு அந்த இடத்தைக் கடந்து சென்ற போது “மூன்று தங்கக்குவியலும் அப்படியே இருந்தது. ஆனால், சின்ன மாற்றம், அருகே மூன்று பிணங்கள் கிடந்தன.
சீடர்கள் விளக்கம் கேட்ட போது, தங்களோடு பயணம் செய்தவனைப் பற்றி சொல்லி விட்டு, மற்ற இரண்டு பேர்களின் செய்தியை இறைச்செய்தியைப் பெற்று சீடர்களுக்கு விளக்கினார்கள்.
பின்னர், ஈஸா (அலை) அவர்கள் தங்களின் சீடர்களை நோக்கி “சீடர்களே! உலகில் வாழும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் உலக மோகங்களின் மீது கொண்ட பேராசையால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.
எதற்காக சண்டையிட்டுக் கொண்டு இருந்தார்களோ அது அவர்களின் கைகளுக்கு வந்து சேர்கிற போது அதை அனுபவிக்க அவர்களுக்கு அவகாசம் இருப்பதில்லை. அதை அனுபவிக்காமலேயே போய்ச் சேர்ந்து விடுகின்றனர்.
இந்த உலகில் தன் தாயின் வயிற்றில் இருந்து எப்படி ஒன்றுமில்லாமல் வந்தார்களோ அப்படித்தான் இந்த உலகை விட்டும் ஒன்றுமில்லாமல் செல்வார்கள். ஆனால், இதை உணர்பவர்கள் எவரும் இல்லை” என்று கூறினார்கள்.
( நூல்: அல் முஃஜம் லி இமாமி இப்னுல் அஃராபீ (ரஹ்)…. )
பேராசை கொண்டிருக்கிற மனிதர்களால் நிம்மதியாக வாழ இயலாது. இறுதியில் அவர்கள் சேர்த்து வைத்த அனைத்தும் அவர்களால் அனுபவிக்க முடியாமல் போவதை மேற்கூறிய நிகச்சி நமக்கு உணர்த்துகின்றது.
பொறாமை….
அல்லாமா அபுல்லைஸ் ஸமர்கந்தீ (ரஹ்) அவர்கள் தமது நூலான தம்பீஹூல் ஃகாஃபிலீனில் இப்படிக் குறிப்பிடுவார்கள்..
வானத்திலே நடந்த முதல் பாவமும், பூமியில் நடந்த முதல் பாவமும் பொறாமை எனும் தீயகுணத்தால் தான்.
ஷைத்தான் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸஜ்தாச் செய்ய மறுத்ததும் பொறாமையால் தான்.
قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ ()
ஷைத்தான் இறைவனிடம் “ நான் அவரை விட உயர்ந்தவன் என்னை நெருப்பால் படைத்தாய், (ஆதமை) அவரை களிமண்ணால் படைத்தாய்” என்றான். ( அல்குர்ஆன்: 7:12 )
ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளில் காபீல் ஹாபீலைக் கொன்றதும் பொறாமையால் தான்.
فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ ()
“இறுதியில் தன்னுடைய சகோதரனைக் கொலை செய்யும்படி அவனுடைய மனம் அவனைத் தூண்டியது. அதனால் அவரை அவன் கொலை செய்தான். ஆதலால் அவன் பேரிழப்பிற்கு ஆளாகிவிட்டான்.” ( அல்குர்ஆன்: 5:30 )
இந்த பொறாமை தான் உயர்ந்த நிலையில் இருந்த ஒருவனை மிகவும் கேவலமானவனாக மாற்றியது,
சகோதரத்துவத்தோடும், வாஞ்சையோடும் வாழவேண்டிய ஒருவனை கொலைக் குற்றவாளியாகவும் மாற்றியது.
ஆதலால் தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ”அருட்கொடைகள் நிரப்பமாக வழங்கப்பட்டிருப்பவரை பார்க்காதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார்கள்.
இன்று பெரும்பாலானவர்கள் பிறரின் வளங்களையும், நிஃமத்களையும் கண்டு பொறாமை கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு மனநிம்மதி கிடைப்பதில்லை.
عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: (انظروا إلى من هو أسفل منكم، ولا تنظروا إلى من هو فوقكم، فهو أجدر أن لا تزدروا نعمة الله عليكم) متفق عليه .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “(செல்வம், உலக வசதி வாய்ப்புகள், செல்வாக்கு ஆகியவற்றில்) உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். (உலகாதாய நோக்கங்களின் அடிப்படையில் பார்க்கும் போது) உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்களுக்கு அருளியிருக்கிற அருட்கொடைகள் உங்களுடைய பார்வையில் மதிப்பிழந்து போய் விடாமல் இருப்பதற்கு இந்த நடத்தையே அதிகப் பொருத்தமானதாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
பிறரின் வளங்களப் பொறாமைக் கண் கொண்டு பார்ப்பதால் இறைவனுக்கு நன்றி செலுத்துகிற உணர்வு போய், மனக்குறைகளும், மனக்கசப்புகளும் ஏற்பட்டு மனநிம்மதியும், மனஅமைதியும் பறிபோய்விடும்.
இந்த மாதிரி தருணங்களில் அல்லாஹ் நமக்கு ஒரேயொரு வாய்ப்பைத் தந்திருக்கின்றான்.
وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ
“அல்லாஹ்விடம் அவனுடைய அருள்வளங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்”. ( அல்குர்ஆன்: 4:32 )
நபித்தோழர்களின் வாழ்க்கையை வாசித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்போர் வாசித்துப் பார்த்து விட்டு வியப்பின் விளிம்பிற்கே வந்து விடுவார்கள்.
அவ்வளவு ஆச்சர்யமான வாழ்வை அவர்கள் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள்.
நீ வாழ… பிறரைத் துன்புறுத்தாதே…
எப்படி நாம் நிம்மதியாக வாழவேண்டும் என விரும்புகின்றோமோ, அது போன்றே பிறரின் நிம்மதியைக் கெடுக்காமல் வாழவும் வேண்டும்.
ஆனால், சமூகத்தில் இன்று ”எனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை, என் பக்கத்து வீட்டானுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும்” என்ற எண்ணம் உள்ளவர்கள் தான் அதிகம்.
இஸ்லாம் ஓர் உயரிய பண்பாட்டை இந்த உம்மத்திற்கு கற்றுக் கொடுத்து, கடைபிடிக்கவும் வலியுறுத்துகின்றது.
முகத்தால் கூட நிம்மதி இழக்கச் செய்து விடாதே…
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்... படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படக்கூடாது என்ற ஒரு காரணத்தினால். அல்ஹம்துலில்லாஹ் !
நன்றி வெளிமேடை இணையதளம் .
velimedaiplus .blogspot .com
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!