படித்ததில் பிடித்தது ! 💫👌
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
ஒரு இந்து சகோதரர் ஒரு கமெண்ட் போட்டிருக்கிறார் . பிறகு அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டேன் என்று கடைசியாக குறிப்பிட்டுள்ளார் . (அல்ஹம்துலில்லாஹ் ) அதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் . அதை நீங்களே படியுங்கள் !
நான் ரஞ்சித் குமார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்களின் வரலாறு படித்தேன் அவர் தனி மனிதராக இருந்து இஸ்லாமிய ஆட்சி வரை செய்ததை படித்து வியந்து கொண்டேன் உலக வரலாற்று இப்படி எந்த ஒரு மனிதரும் வாழ்ந்திருக்க மாட்டார் ஆனால் இந்த இஸ்லாமியர்கள் ஒரு தவறு செய்து விட்டார்கள் இப்படிப்பட்ட தூதருடைய வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கையில் இவர்கள் செயல் படுத்தாததால் இந்த மக்களுக்கு தெரியவில்லை தெரியாமல் புரியாமல் பேசுகிறார்கள் நிச்சயமாக இவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் அதை நான் மனமார ஏற்றுக்
கொள்கிறேன் நான் ஒன்றை கூறுகிறேன்
உங்கள் கையில் ஒரு புத்தகம் உள்ளது
அந்த புத்தகம் உங்களுடைய வாழ்க்கை
நெறி அதில் நீங்கள் முழுமையாக
நுழைந்து விடுங்கள் இறைத்தூதர் செய்த
அந்த ஆட்சி இந்த பூமிக்கு வந்தால் பூமி
செம்மை அடைந்து விடும் ஆனால் இந்த
இஸ்லாமியர்களுக்கு தெரிவதில்லை
வெறும் தொழுகை அல்லாஹ்வை
நினைவு கூறுவது நோன்பு வைப்பது
ஜக்காத் கொடுப்பது ஹஜ் செய்வது இது
மட்டும் இல்லை இந்த இஸ்லாம் அறிந்து
கொள்ளுங்கள் அதன்படி செயல்படுங்கள்.
நான் இஸ்லாத்தை ஏற்று விட்டேன் என்
உயிரிலும் மேலானவர் நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
அவர் என்ன சொல்லவருகிறார் என்றால்
: இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் , அல்குரானை பின்பற்றுங்கள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின் வாழ்க்கை முறைகளை செயல்படுத்துங்கள் ! இஸ்லாம் வெறும் தொழுகை , நோன்பு , ஹஜ் இவைகள் மட்டும் இஸ்லாம் இல்லை . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் நம்முடைய வாழ்க்கையில் அல்குரானும் , அண்ணல் நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதலும் அவசியம் பின்பற்றவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் . அவருடைய ஆதங்கம் என்னவென்றால் , நம்மில் நிறையபேர் பெயரளவில் முஸ்லிமாக இருக்கிறார்கள் . ஒரு அழகான சத்திய மார்க்கம் . ஒரு அருமையான உத்தம தூதர் . சிறந்த வழிகாட்டி ! இப்படி சத்திய மார்க்கத்தில் இருக்கும் நீங்கள் ! முஸ்லிமாக வாழாமல் , இஸ்லாத்தில் முழுமையாக நுழையாமல் , ஒரு அருமையான அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றாமல் இருப்பது , சில முஸ்லிம்களுக்கு தெரியவில்லை , புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் . நிச்சயமாக நம்மில் சிலருக்கு ஒரு பாடம் இதில் இருக்கிறது .
நம்மில் சிலர் இந்த இஸ்லாம் மார்க்கத்தை ஒரு சிறந்த வாழ்வின் நெறியாக எடுத்துக்கொள்ளாமல். , ஒரு சடங்காக தான் எடுத்துக்கொள்கிறோம் . நாம் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்திருந்தால் அல்லாஹ்வின் நாட்டப்படி இந்தியாவில் நிறைய முஸ்லிம்களாக மாறியிருந்திருப்பார்கள் . ஈர்க்கப்பட்டு இஸ்லாத்திற்கு வந்திருப்பார்கள் !
சஹாபாக்களை பார்த்து , அவர்களின் வியாபார நேர்மை , ஒழுக்கம் , உண்மை மற்றும் இன்னும் பல நல்ல பழக்க வழக்கங்களை பார்த்து ஈர்க்கப்பட்டு தான் நன் முன்னோர்கள் முஸ்லிமாக ஆனார்கள். இன்னும் நல்லோர்கள் , இறைநேசர்கள் இவர்களின் மூலம் அல்லாஹ் சிலருக்கு நேர்வழி காட்டியிருக்கலாம் . அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இந்த பதிவு மூலம் என்ன சொல்லவருகின்றேன் என்றால் : நாம் வீட்டிலேயும் , குறிப்பாக வெளியிலும் பொதுமக்கள் இருக்கும் இடத்திலும் , வேலை பார்க்கும் இடத்திலும் , கல்லூரிகளிலும் , கடை வீதிகளிலும் சுருக்கமாக சொன்னால் ... எங்கும் , எதிலும் எப்பொழுதும் குரான் மற்றும் சுன்னாவை கடைபிடிக்கவேண்டும் ! நம் மூலம் மாற்றுமத மக்கள்கள் ஈர்க்கப்படவேண்டும். இன்ஷாஅல்லாஹ் இஸ்லாத்தின் பக்கம் வரவேண்டும் . இன்ஷாஅல்லாஹ் நாமும் சுவனத்தில் நுழையவேண்டும் , இன்ஷாஅல்லாஹ் அவர்களும் சுவனத்தை அடையவேண்டும் என்ற ஒரு ஆசையும், ஆவலும் , எண்ணமும் வரவேண்டும் என்று கூறி முடிக்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ் ! ஆமீன் .....
சத்திய பாதை இஸ்லாம் ☪️
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!