RECENT POSTS

எதிர்பாரத விஷயங்களை எதிர்கொள்

 


எதிர்பாரத விஷயங்களை எதிர்கொள்


ஒரு காட்டுக்குள்ள இரண்டு அணில்கள் நண்பர்களாக வாழ்ந்து  வந்துச்சாம், ஒன்னு பேரு புத்தி, இன்னொன்னு பேரு மத்தி, புத்தி எப்போதும் கடவுள் பக்தியோட இருப்பானாம், மத்தி அதுக்கு அப்படியே எதிர்மறையான எண்ணம் உள்ளவன், அதாங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.


எப்போதும் புத்தி கடவுளுக்கு நன்றி சொல்லிகிட்டே இருப்பான், எதாவது நன்மை நடத்​தா​லும் தீமை நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே-ன்னு  கடவுளுக்கு நன்றி சொல்வானாம்,​எதோ ஒரு நன்மை நமக்கு இருக்குன்னு  சொல்லிட்டு தனக்கு தானே சமாதானம் செய்துகொண்டு போய்விடுவானாம், நம்மையும் மீறி ஏதோன்னு நடக்குத்துன்னு புத்தி எப்போ​தும் நம்புவான்​, ​அதை பார்த்து மத்தி கேலி பண்ணி  ஏளனமாய் சிரிப்பானாம்.  உன்னை மீறி வாழ்க்கையில  என்னடா ​நடக்கப்போவுது, நீ என்ன நினைக்கிறியோ அதுதான் வாழக்கையி​லும் ​நடக்கும்-ன்னு  மத்தி சொல்லிகிட்டே இருப்பானாம்.  


ஒரு நாள் ரெண்டுபேரும் ஒரு அழகான காட்டுக்குள்ள பழங்களை பறித்து  தின்ன போனார்களாம், இங்கேயும் அங்கேயும் ஓடியாடி அந்த மரத்துல விளையாடி கொண்டிருந்தார்களாம், எதிர்பாராத விதமா புத்தி கீழே விழுந்துவிட்டான், முதுகில் பலத்த அடி, சின்னதா ஒரு காய​மும் கூட, வலி தாங்காம முதுகுல தேய்ச்சுகிட்டு, எதோ ஒரு நல்லதுக்கு தான் நாம கீழே விழுந்துட்டோம், நல்லவேளை நமக்கு பெருசா எதுவும் ​அடி படலை... எல்லாம் நமைக்கே-ன்னு சொல்லிட்டு அடிபட்ட இடத்துல தேய்த்து கொண்டு-​டிருந்தான்​, நன்றி கடவுளே தலைக்கு வந்தது தலை பாகையோட போச்சுன்னு சொல்லிட்டு மேல பார்த்தானாம்...... புத்தி  விழுந்ததை பார்த்து மத்தி  ​கெக்கே.... கெக்கே ன்னு ​சிரித்து கொண்டு ஏளனமாய் கேலி செய்தானாம் , நீ ஒழுங்கா மரத்தை பிடிக்காம கவனக்குறைவா விழுந்ததுக்கு ஏன்டா கடவுளுக்கு நன்றி சொல்றே.... னுக்கு கேலி செய்தானாம்......


டேய் மத்தி நான் கீழே விழுந்தவுடன் செத்து போய் இருக்கலாம், ஆனா சின்னதா அடிபட்டத்தோட தப்பிச்சுகிட்டேன், இதிலிருந்து நம்மள சுத்தி எது நடக்குதோ எல்லாம் நன்மைக்கே​,​ நம்மளையும் மீறி ஏதோ நம்மளை இயக்குதுன்னு நான் முழுமையா நம்புறேன்.... இதைவிட சிறந்த உதாரணம் நான் உனக்கு காட்டமுடியாதுன்னு சொல்லிட்டு மத்தியை மேல நிமிந்து பார்க்குது..... அவோலோதான்.... ஒரு வினாடி தலையே சுத்திருச்சு.....


மத்தி அணிலோட பக்கத்துல ஆவோலை பெரிய பாம்பு வாயை ஆ...ன்னு ​பிடிக்க ஆயத்தமா இருக்கு... டேய் மத்தி  மத்தி  ​கிழே வாடா ன்னு ​கத்துறதுக்குள்ள லபக்குன்னு அந்த பாம்பு மத்தியை முழுங்கிடுச்சு....... ஒரு நிமிடத்துக்குள்ள எல்லாம் மாயமாய் நடந்து முடிந்தது,


​அதை பார்த்​த ​புத்திக்கு​ ​கால் எல்லாம் வெட வெட-ன்னு ஆட ஆரம்பிச்சுடுது..... என் நண்பன் என் கண் முன்னாடி இப்படி போய்ட்டேனே....ன்னு பயங்கரமா அழுக ஆரம்பிச்து புத்தி.... இவோல பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி ​சொன்னான்​. நம்மை  சுற்றி நடக்குற எல்லா இன்ப துன்பங்களுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கும், எல்லாம் நமைக்கே  சொல்லிட்டு மத்தி​​யை நினைத்து சோகத்துடன் காட்டுக்குள் சென்று விட்டது. இதுபோல தான் நம்ம வாழக்கையும், திட்டமிடல் எப்போதும் இருக்கணும், அதே போல ரொம்ப கவனமாகவும் இருக்கணும், அதையும் மீறி ஏதோ  ஒன்னு நம்மளை இயக்குது, எப்போவும் முன்னெச்செரிக்கையா இருக்கணும்... எதிர்பாராத விஷயங்களை கண்டிப்பா நாம எதிர்கொண்டுதான் ஆகணும். இப்படி நடந்து போச்சேன்னு உட்கார்ந்து வருத்தபடுவதை விட தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுன்னு எல்லாம் நன்மைக்கென்னு நமபிக்கையோட நகர்தல் நலம்.


எதிர்பாரத விஷயங்களை எதிர்கொண்டு வாழ்ந்துதான் பார்ப்போமே...... வளையும் தன்மையுள்ள ஒரு மரம் புயலில் சிக்கினாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. அதேபோல், உங்களை மீறி சில மாற்றங்கள் நடக்கும்போது உங்களாலும் அதற்கு “வளைந்து” கொடுக்க கற்றுக்கொள்ள முடியும்.   எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே கெட்டதாக இருக்கும் என்று சொல்லமுடியாது.  நாம் நினைக்கும் விதத்தில்தான் நம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நாம் எல்லாரும் ஆசைப்படுவோம். ஆனால், அப்படி நடக்கவே நடக்காது. “மன உறுதியோடு இருக்குறது நம்ம கையிலதான் இருக்கு. இப்போ இருக்குற சூழ்நிலைமையில என்ன நல்ல விஷயங்கள் இருக்குதுனு பாருங்க”


 


கருத்துகள்