இப்படி தான்... அனுபவிக்காம, தன் வாழ்க்கையை தொலைத்த புத்திசாலிகள்.
மழைக்காற்றும் மண்வாசமும் சாலை யோர மரங்களின் தாலாட்டும் தென்றலும் இன்னும் மாறவில்லை ... நாம்தான் மாறிவிட்டோம் அவைகளை கவனிக்கக்கூட நேரமின்றி மனிதராய் வாழ மறந்த கதை..! தூசி துடைக்கப்பட்ட. கண்ணாடிபோல் இப்போதுதான் தெளிவாய் தெரிகிறது.. நிரந்தமில்லாவைகளின் பின் ஓடி நிஜங்களை தொலைத்த. நம் மடமைகளை..
ஒரு காட்டில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது , அவர்களுக்கு இரவில் குளிர்காய சில மர குச்சிகள் தேவைப்படுகிறது . சில நாட்கள் இப்படியே கடந்துபோனது . குளிர்காய்வதற்கு குச்சியை போட்டு நெருப்பு மூட்டவேண்டும். குச்சிகள் தீர்ந்துவிட்டது! அவர்கள் காட்டுக்கு போய் குச்சிகளை சேகரித்துக்கொண்டு , அவர்களுடைய இருப்பிடத்துக்கு வரவேண்டும்! காட்டுக்கு போகும்வழியில் , அந்த வழியாக ஒருவர் அங்கே வந்தார். அவர் அவர்களைப் பார்த்து , ''நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார் ''. அதற்க்கு அவர்கள் '' நாங்கள் குச்சிகள் சேகரிப்பதற்காக காட்டுக்குள் செல்கிறோம் , அங்கே சென்று குச்சிகளை எடுத்துக்கொண்டு எங்கள் இருப்பிடத்துக்கு திரும்பவேண்டும் என்று அவர்கள் கூறினார்கள் '' . அதற்க்கு அவர் , இன்னொரு ஒரு பெரிய காடு இருக்கிறது. அங்கே நீங்கள் தேடுகின்ற குச்சிகள் நிறையவே இருக்கிறது, அங்கே நீங்கள் போனால் , உங்களுக்கு தேவையான அதிகமான குச்சிகளை சேகரித்து வரலாம் என்று கூறினார். அவர்களும் , அவர் சொன்னதுபோல , அவர்கள் அங்கே சென்று வந்தார்கள் . அவர்களுக்கு தேவையான நிறைய குச்சிகளை கொண்டுவந்து சேகரிக்க ஆரம்பித்தார்கள்! நாளாக நாளாக , அவர்களுக்கு அதிகமான டன் கணக்கில் குச்சிகளை சேகரித்துவிட்டார்கள். மறும்படியும் அவர்கள் காட்டுக்கு போய் இன்னும் கொண்டுவர ஆசைப்பட்டார்கள். போகும்வழியில் , ஏற்கனவே பார்த்த அந்த நபர் அந்த காட்டு வழியாக வந்தார்! அவர்களை பார்த்த அந்த நபர் , '' உங்களுக்கு அதிகமான குச்சிகள் அங்கே கிடைத்ததா? நீங்கள் நிறைய சேகரித்துவிடீர்களா? என்று கேள்வி கேட்டார். அதற்க்கு அவர்கள் '' ஆம் '' நாங்கள் அளவுக்குஅதிகமாக குச்சிகளை கொண்டுவந்து சேர்த்துவிட்டோம்! என்று பதில் சொன்னார்கள். அப்படியானால் , நீங்கள் அதைவைத்து நெருமூட்டி குளிர்காயிர்கள்தானே என்று கேட்டார் . அதற்க்கு அவர்கள் எங்களுக்கு நேரம் இல்லை , நங்கள் குச்சிகளை சேகரிப்பதிலேயே எங்களுக்கு நேரம் போதுமானதாக இருந்தது என்று பதில் கூறினார்கள்!
இப்படித்தான் நம்மில் பலபேர்கள் , வாழ்க்கையை அனுபவிக்காமல் பணம் ! பணம்! என்று ஓடி ஓடி உழைத்து , வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தெரியாமலே சிலருக்கு மரணம் வந்துவிடுகிறது. பிறகு அவர் சேமித்த நிறைய சொத்துக்களை , அவர்களின் வாரிசுகள் சொத்துக்களை அடைவதற்கு சண்டைபோட்டுக்கொண்டு கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைந்துகொண்டுயிருக்கிறார்கள்!
இந்த வாழ்க்கை சொற்பகாலம்! நாம் எவ்வளவுதான் பணத்தை சேமித்துவைத்தாலும் , அதை வாழ்க்கையில் நாமும் அனுபவிக்காமல், பிறருக்கும் தர்மமாக கொடுக்காமல் , அதை வைத்து என்ன செய்ய போகிறோம்? நாம் உழைக்கின்றோம் , பணத்தை சம்பாதிக்க படாதபாடு படுகின்றோம் . எதற்காக ? உண்ணவும் , உடுத்தவும் இந்த இரண்டு விஷயத்துக்காகத்தானே , இவ்வளவு கஷ்ட்டம்! கொஞ்சம் சிந்திக்கவேண்டாமா?
இப்படித்தான் நம்மில் நிறை பேர்கள் , வாழ்க்கையை தொலைக்கின்றோம்! வாழ்க்கையின் அர்த்தம் புரியாமல், தெரியாமல் வாழ்கிறோம்! போதும் என்ற மனம் இல்லாமல் , இன்னும் இன்னும் வேண்டும் என்று பணத்தை துரத்திக்கொண்டு ஓடுகிறோம்! நமக்குப்பின்னால் மரணம் வந்துகொண்டேயிருக்கிறது என்று மறந்து , துன்யாவுக்கு பின்னால் ஓடுகிறோம்! அல்லாஹ் தாலா அழகாக தன் திருமறையில் கூறுகின்றான்: மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வதை )த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. ( 102:1,2)
இறுதியாக ஒரு ஹதீஸை மட்டும் கூறிவிட்டு இந்த பதிவை முடிக்கிறேன்.
திருப்தி & அல்லாஹ்வின் பாதுகாப்பு
اَللّٰهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ ، وَبَارِكْ لِيْ فِيْهِ ، وَاخْلُفْ عَلَيٰ كُلِّ غَائِبَةٍ لِّيْ بِخَيْرٍ
யா அல்லாஹ், நீ எனக்கு வழங்கியவற்றில் என்னை திருப்திப்படுத்து, அதில் என்னை ஆசீர்வதிப்பாயாக மற்றும் என்னிடம் இல்லாதவற்றில் (அதாவது குடும்பம் மற்றும் செல்வம்) எனக்கு பாதுகாவலனாக இரு.
இப்னு அப்பாஸ் (ரழி அல்லாஹு அன்ஹுமா) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் [மேலே உள்ளவற்றுடன்] துஆ செய்வார்கள் என்று கூறுகிறார்கள். (ஹக்கீம் 1878)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!