விமர்சனம் என்ற பெயரில் ...

 


அல்லாஹ்வின் திருப்பெயரால் ...


விமர்சனம் என்ற பெயரில் ...


இன்று மக்கள்களை ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் சமூக வலைத்தளங்கள் என்று கூறினால் மிகையாகாது !  நம்மில் நிறைய பேர்கள் அதிலேயே மூழ்கி இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது! பசி இருக்கோ இல்லையோ , தாகம் இருக்கோ இல்லையோ ஆனால், இந்த சமூக வலைத்தளத்தின் மீது மிகப் பெரிய மோகம் இருக்கு என்று சொல்வதாக இருந்தால் சரியாக இருக்கும்!  


இன்று சமூக வலைத்தளங்களில் பதிவுகளை படித்து விட்டு  விமர்சனம் செய்வது, காணொளியை பார்த்து விட்டு விமர்சனம் வைப்பது!    விமர்சனம் என்ற பெயரில் சிலர் கண்ணியம் இல்லாமல், ஒழுக்கம் இல்லாமல் , மரியாதை இல்லாமல் , கடுமையாக விமர்சனம் செய்வது  , திட்டி , சாபம் இட்டு  , தரைகுறைவாக ஏசி , பேசி வரைமுறையின்றி விமர்சனம் செய்கின்றவரைகளைப் பற்றி தான் இந்த பதிவு ...


உதாரணத்துக்கு : ஒரு முஸ்லீம் பெண்  டிவி செனல்களிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு மேடையிலியோ  பாடினாலோ (சினிமா பாட்டு) அல்லது ஆடினாலோ நியா நானா என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினாலோ , அவளை குறித்து வரும் விமர்சனம் ரொம்ப கடுமையாக இருக்கும். 


'' நீயெல்லாம் ஒரு முஸ்லீம் பெண்ணா ? இப்படி செய்யலாமா ? அப்படி செய்யலாமா ? உனக்கு மன்னிப்பு கிடைக்காது! நீர் நரகம் தான் போவாய் ! அப்படி இப்படி என்று வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள் !  இந்த விமர்சனம் செய்பவர்கள் உத்தமர்கள் போல ,   இஸ்லாம் மார்க்கத்தை பேணக்கூடியவர்கள்  போல , மற்றவர்களை தரைகுறைவாக விமர்சனம் செய்வார்கள்!  இப்படி சிலர் மற்றவர்கள் மீது குப்பைகளை அள்ளி வீசுவார்கள் . எப்படி சமூக வலைத்தளங்களில் நடந்துகொள்வது என்று கூட தெரியாதவர்கள் ! ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லிமை சாபம் இடக்கூடாது!   நீயெல்லாம் ஒரு முஸ்லீம் இல்லை என்று கூறக்கூடாது!   ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லிமை கண்ணியம் குறைவாக பேசக்கூடாது!  இன்று சர்வசாதாரணமாக ஆகிவிட்டது சமூக வலைத்தளங்களில் ஆடி , பாடி , கேலி கூத்தாடி , வெட்கம் இல்லாமல் தான் செய்த செயல்களை பதிவிடுவது , பரப்புவது! நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது! இதிலே நம்மில் சிலர் கடுமையாக அவர்களை விமர்சனம் மூலம் தாக்குவது எந்தளவுக்கு   சரியானதாக இருக்கும்! ?  ஒருவரை நாம் விமர்சனம் செய்யும்போது அந்த விமர்சனம் அவரை மனதை காயப்படுத்தாமல் , அவர் மனதை சிந்திக்கும் நிலைக்கு ஆளாக்க வேண்டும் ! அவரை அழகான முறையில் மார்க்கம் கற்றுக்கொடுத்த வழிமுறையில் நாம் கையாள வேண்டும்! நாம் யாரையும் , அவர்களின் செயல்களை குறித்து தீர்ப்பு கூறமுடியாது! அவர்களின் நிலையை குறித்து மோசமாக எண்ணிவமுடியாது ! அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான் ! அவன் தான் நீதிபதி ! அவன்தான் எல்லாத்தையும் அறிந்தவன் ! அவன்தான் எல்லாருடைய உள்ளத்தையும் நுட்பமாக அறிந்தவன்! அவன்தான் நேர்வழி காட்டுபவன் !  அவன்தான் உள்ளத்தை மாற்றுபவன்! புரட்டுபவன் !  மறுமைநாளில் அவன்தான் அதிபதி ! அவன் ஒருவனுக்கு மட்டும்தான் தெரியும் ! ''யார் நேர்வழியில் இருக்கிறார்கள்! வழி தவறியிருக்கிறார்கள்  !  சுவன் போவது யார் ? நரகம் போவது யார் ? எல்லாமே அல்லாஹ் ஒருவன் அறிந்தவன்! ஒரு உண்மையான  முஸ்லீம் இன்னொரு முஸ்லிமை பார்த்து ''இப்படி கூறமாட்டேன் ! ''  நீர் நரகம் போவாய் ! உன்னை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்  என்று கூறமாட்டேன்! இது ஒரு உண்மையான விசுவாசியின் பண்பு ! நம் நிலையை கொஞ்சம் சிந்தித்து பார்ப்போம்! மற்றவர்களை பற்றியே எப்பொழுது தவறாக விமர்சனம் செய்யக்கூடாது! அல்லாஹ் அவர்களுக்கு எப்பொழுதுவேண்டுமானாலும் நேர்வழி காட்டமுடியும்! மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள் ! அவர்களின் தவறுகளை குறித்து அவர்களிடமே அழகான முறையில் சொல்லி , அவர்களுக்கு  மாற்றத்தை ஏற்படுத்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும்! தவிர , அவர்களை இன்னும் மீண்டும் மீண்டும் தவறு செய்ய  நாம் துணையாக இருக்கக்கூடாது என்பது தான் ஒரு உண்மையான முஸ்லிமின் எண்ணம் இருக்கவேண்டும்!




இஸ்லாமிய மார்க்கம் என்பது உலகிலுள்ள அனைத்து மதங்களிலும் தனித்துவமானது, முன்மாதிரியானது. அதே போன்று, அந்த மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களும் ஒட்டுமொத்த மனித குலத்திலும் தனித்துவமானவர்கள், முன்மாதிரியானவர்கள்.

ஆனால், சமகாலத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகிறோம் என்றும், நாங்களும் முஸ்லிம்கள்தான் என்றும் கூறிக்கொள்கின்ற, குறிப்பாக இளைஞர், யுவதிகளின் நிலையை நாம் எடுத்து நோக்கினால், மிகவும் பரிதாபகரமானதாகவே காணப்படுகிறது.


அதிலும் குறிப்பாக இணைய தளங்களில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், பாத்திமா, ஆயிஷா போன்ற பரிசுத்தமிக்க பெண்களின் பெயர்களின் தங்களின் பெயர்களின் முன்னாலும், பின்னாலும் கொண்டிருக்கக்கூடிய எமது சகோதரிகளும், மிக கண்ணியமான நபித்தோழர்களின் பெயர்களை தங்களின் இயற் பெயர்களாகக் கொண்டுள்ள எமது சகோதர ஆண்களும், தெரிந்தோ, தெரியாமலோ ஏதோவொரு விதத்தில் இஸ்லாத்தையும் அதன் கண்ணியத்தையும் மாசுபடுத்தியே வருகிறார்கள்.


பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையில், எமது நண்பர்கள் பட்டியலில் அந்நிய மதத்தவர்களும் அனேகமாக இடம்பிடித்தே இருப்பார்கள். அவர்கள் நமது அண்டை வீட்டாராக இருக்கலாம். ஏன் அயல் நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

நம்மை நேரில் சந்தித்திராதவர்கள், நம்மை பற்றி அறிந்திராதவர்கள் கூட, இவ்விணைய தளத்தில் நாம் இடுகின்ற தகவல்கள், தரவுகளை வைத்தே நம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.


உதாரணமாக, ஒருவர் தன்னிடமுள்ள தொழிநுட்ப ரீதியான தகவல்களை பதிவிடுகிறார் என்றால், அவர் அவ்விடயத்தில் ஆர்வமுள்ளவர் அல்லது அத்துறையில் ஈடுபாடுள்ளவர் என்பதனை கண்டுகொள்ள முடியும்.


அதே போல் ஒருவர் மருத்துவரீதியான தரவுகளை பதிவிடுகின்ற போது, அது தொடர்பான அவரின் நிலைப்பாட்டை நாம் உணர்ந்து கொள்கிறோம்.


இவ்வாறு சமூக வலைத் தளங்களில் நம்மைப்பற்றி அறியாதவர்கள் நமது கொள்கைகள், நமது விருப்பு வெறுப்புக்கள் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் நாம் இடுகின்ற, பகிர்கின்ற விடயங்களின் பெறுமானத்தைக் கொண்டே நம்மை கணிப்பிடுகின்றனர் என்பது ஓர் யதார்த்தமான உண்மையாகும்.



அல்லாஹ்வின் நல்லடியார்களே! இறுதியாக ஒன்றை பதிவு செய்ய விரும்புகின்றேன்! நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்! குறிப்பாக மாற்றுமக்கள் நம் நல்ல செயல்கள் மூலம் ஈர்க்கப்படவேண்டும்! அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை நாம் நம் வாழ்க்கையில் பின்பற்றவேண்டும் ! வெறுமணமே மற்றவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் உபதேசம் செய்யாமல் . நாம் முதலில் சரியாக இருக்க வேண்டும்! 


 அல்லாஹ் நமக்கு அருள் புரியவேண்டும்! நன்மக்களாக வாழ உதவி செய்யவேண்டும்! ஆமீன் .

கருத்துகள்