Italian Trulli

பெற்றோருக்கான உபகாரம் எவ்வாறு அமையும்?

 


பெற்றோருக்கான உபகாரம் எவ்வாறு அமையும்?


"அவர்களிருவரில் ஒருவருக்காக உம்ரா செய்வது (ஏற்கெனவே உம்ரா நிறைவேற்றி யிருப்பினும்) கூடுமா?' என சங்கைக்குறிய அஷ் ஷெய்க் இப்னு உதைமீன் அவர்களிடம் கேள்வி கேட்கப் பட்டது.




அதற்கு அவர்கள் பின்வருமாறு பதில் கூறினார்கள்."பெற்றோருக்கான உபகாரம் என்பது பொருள், பணம், கண்ணியம், உடல் உழைப்பு என்பன மூலமாக செய்யப்படும் ஒரு கடமையாகும். பெற்றோரை நோவினை செய்வது பெரும் பாவங்களை சேர்ந்ததும், அவர்களின் உரிமையை மறுப்பதுமாகும். அவ்விருவரும் உயிர் வாழும் போது உபகாரம் செய்வது நியாயமானதாகும்."


மேலே கூறப்பட்டது போல் மரணத்தின் பின்


பெற்றோருக்கான உபகாரமாவது, அவர்களுக் காக பிரார்த்திப்பதும், பிழை பொறுக்கத் தேடு வதும், அவர்களது வஸிய்யத்தை நிறை வேற்று வதும், அவர்களது நண்பர்களை கண்ணியப் படுத்துவதும், அவர்கள் மூலமான இரத்த உறவுகளை சேர்ந்து நடப்பதும் ஆகிவைகளை அடக்கியது. இவ்வைந்து விடயங்களும் பெற்றோரின் மரணத்தின் பின்னர் அவர்களுக் காக செய்யும் உபகாரமாகும்.


பெற்றோருக்காக, பிறருக்கு ஸதகா கொடுப்பது ஆகுமானதே. எனினும் பிள்ளை களை ஸதகா கொடுக்கும்படி யாராலும் பணிக்க முடியாது. நீ பெற்றோர்களுக்காக ஸதகா கொடுக்காத போதிலும் அவர்களுக்காக பிரார்த்திப்பது மிகவும் மேலானது. ஏனெனில், றசூல் (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறினார் கள். "ஒரு மனிதன் மரணித்தால், மூன்று விஷயங்களை தவிர ஏனைய எல்லா செயல்களும் அவனை விட்டும் துண்டிக்கப் பட்டு விடுகின் றன. அவையாவன, நிலையான தர்மம், (ஸதகா ஜாரியா) (மக்கள்) பயன் பெரும் அறிவு, அவர்களுக்காக துஆ புரியும் ஸாலிஹான பிள்ளை."


இந்த ஹதீஸின் படி, ரசூல் (ஸல்) அவர் கள் மரணித்த பெற்றோருக்காக ஒரு பிள்ளை செய்யும் ஸதகா, உம்ரா, அல் குர்ஆன் ஓதல் ஆகிய நல்லமல்களை விட ஒரு பிள்ளை தன் பெற்றோருக்காக கேட்கும் துஆ மிகச் சிறப்பா னது என கூறியுள்ளதும், முன் குறிப்பிட்ட செயல்களுக்கு சமமான அந்தஸ்து கொடுக்கப் படா விட்டாலும் துஆ கேட்பது மிகவும் சிறப்பானது என்பதற்கு ஆதாரமாகும். அதே சமயத்தில் சயீத் இப்னு அப்பாதா (றலி) அவர்கள் றசூல் (ஸல்) அவர்களுடம் “யா ரசூலுல்லாஹ்! எனது தாயார் திடீரென வபாத்தா கிவிட்டார்கள்.


அவர்கள் பேசி யிருந்தால் கொடுத்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு பதிலாக நான் ஸதகா கொடுக்கலாமா?" எனக் கேட்டார். அதற்கு றசூல் (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார்கள்.


பெற்றோருக்கு பதிலாக உம்ரா செய்வதை விட, ஸதகா அல்லது அது போன்ற விடயங் களை செய்வதை விட, அவர்களுக்காக துஆவை அதிகரிக்குமாறு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதுவே ரசூல் (ஸல்) அவர்கள் காட்டிய வழியுமா கும். அதோடு ஒருவர் தன் பெற்றோருக்காக ஸதகா கொடுப்பதையோ, உம்ரா செய்வதை யோ, தொழுவதையோ, குர்ஆன் ஓதுவதையோ நாங்கள் மறுக்க வில்லை. அதாவது பெற்றோர் கள் இருவருமோ அல்லது ஒருவரோ உம்ரா அல்லது ஹஜ்ஜு போன்ற அமல்களை நிறை வேற்றாத நிலையில் வபாத்தாகி இருந்தால் ஒரு பர்ளை நிறைவேற்றுவது, துஆவை விடச் சிறப்பானது எனக் கூறலாம். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன் (பத்வா இஸ்லாமிய்யா)


அஷ் ஷேய்க் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். "நாங்கள் உடல் ரீதியாக


உபகாரம் செய்வதும், அல்லாஹ்விடம் பாவமற்றதும், உங்களுக்கு தீங்கு ஏற்படாதது மான அவர்களின் ஏவல்களுக்கு வழிப்படுவ தும், பாசத்துடன், கருணையுடன் அவர்களுடன் பேசுவதும், இயலாமை, நோய், முதுமை காரணமாக அவர்களை ஒதுக்காமல் இருப்ப தும், அவற்றை ஒரு சுமையாக கருதாமல் இருப்பதும் பெற்றோருக்கு செய்யும் உபகாரங்க ளாகும். ஏனெனில், நீங்களும் உங்கள் பிள்ளை களுக்கு பெற்றோராவீர்கள். உங்கள் பெற்றோர் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது போலவே நீங்களும் உங்கள் பிள்ளைகளிடமிருந்து எதிர் பார்ப்பீர்கள்.


எவர் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்தாரோ, அவரது பிள்ளைகள்அவருக்கு உபகாரம்செய்வர். எவர் பெற்றோருக்கு வேதனை செய்தாரோ அவரது பிள்ளைகள் அவரை வேதனை செய்வர். நீங்கள் எவ்வாறு கொடுக்கின்றீர்களோ அதுவே உஙகளுக்கு கிடைக்கும்.


கருத்துகள்