‘பணம் பண்ணும் மனம்’

 













‘பணம் பற்றிய உளவியல்’ என்று சொல்லாமல் ‘பணம் பண்ணும் மனம்’ என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது?



பணம் நம் மனத்தைப் (மனப்போக்கைப்) பண்ணுகிறது (செய்கிறது / வடிவமைக்கிறது) என்பது ஒரு பொருள். 'பணம் வந்தவுடன் ஆள் மாறிவிட்டான்' என்றும் 'எல்லாம் பணம் பண்ற வேலை' என்றும் 'பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்' என்றும் 'பணம் பாதாளம் வரை பாயும்' என்றும் 'காசில்லை என்றால் கணவனே ஆனாலும் கதவைச் சாத்தாடி பெண்ணே' என்றும் உள்ள சொற்றொடர் வழக்குகள் இதைத் தான் குறிக்கின்றன.






The Psychology Of Money பணம் பண்ணும் மனம்





‘பணம் பற்றிய உளவியல்’ என்று சொல்லாமல் ‘பணம் பண்ணும் மனம்’ என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது?



பணம் நம் மனத்தைப் (மனப்போக்கைப்) பண்ணுகிறது (செய்கிறது / வடிவமைக்கிறது) என்பது ஒரு பொருள். 'பணம் வந்தவுடன் ஆள் மாறிவிட்டான்' என்றும் 'எல்லாம் பணம் பண்ற வேலை' என்றும் 'பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்' என்றும் 'பணம் பாதாளம் வரை பாயும்' என்றும் 'காசில்லை என்றால் கணவனே ஆனாலும் கதவைச் சாத்தாடி பெண்ணே' என்றும் உள்ள சொற்றொடர் வழக்குகள் இதைத் தான் குறிக்கின்றன.



பணம் பண்ணுவதற்கு (சாம்பதிப்பதற்கு / சேர்ப்பதற்கு / காப்பாற்றுவதற்கு) எத்தகைய மனம் வேண்டும் என்பதைக் குறிப்பது மற்றொரு பொருள். 



சரி, தமிழ்த் தலைப்பைப் பற்றிய தம்பட்டம் போதும். பதிவை   பற்றிய நம் கருத்துகளை நூற்போம்!









தத்துவம் என்று சொன்னால் வறட்டுத் தனமாக ஒலிக்கலாம். அதற்குப் பதிலாக உளவியல் உத்திகள் (psychological tips) என்று சொல்லலாம்; கருத்துக் கண்ணாடிகள் (conceptual lens) என்றும் சொல்லலாம்.









சிக்கனமாக இரு.



சேமித்து வை.



அடுத்தவர்கள் மதிப்புக்காகப் பகட்டில் பாழாகாதே.



வருமானத்திற்குள் வாழ்.



ஆசைகளைக் கட்டுப்படுத்து.



உலகம் பெரிது. நீயோ ஒரு தூசு. உன் வாழ்க்கையோ ஒரு நீர்குமிழி. எனவே உன் புரிதல் கடுகளவு.



இன்பம் துன்பம் / ஏற்றம் இறக்கம் எதுவும் நிலைக்காது.



பணத்தை விட உறவு, நட்பு அவர்களிடம் உள்ள ஒத்திசைவு முக்கியம். அதுவே நீடித்த மகிழ்ச்சிக்கு அடிப்படை.



வாழ்க்கையில் / எதிர்காலத்தில் எதுவும் (ஆக்கம் / அழிவு) நடக்கலாம். எனவே அதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொள்.



உன்னுடைய முயற்சிக்கு ஒரு பங்கு உள்ளது. அதைத் தவிர பிற எதுவும் உன் கட்டுப்பாட்டில் இல்லை.



வெற்றி / நல்லது / இன்பம் நேரும் போது எல்லாம் உன்னால் என்று மயங்காதே. அதே போல் தோல்வி / தீயது / துன்பம் நேரும் போது எல்லாம் உன் தவறு என்று துவளாதே.


பணத்துக்காக சிலர் படும்பாடு சொல்லிமாளாது . பணத்தை சம்பாதிப்பது ரொம்ப கஷ்ட்டம் , ஆனால் 

அதை செலவு செய்வது ரொம்ப எளிது .

பணத்தை கொண்டு எல்லாம் வாங்கலாம் 

என்று சொல்வது தவறு . வாங்கமுடியாத சில விஷயங்கள் உள்ளன . மனஅமைதி ,நிம்மதி , தூக்கம் , பாசம் , ஒழுக்கம் , தூய அன்பு , இப்படி இன்னும் சில விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

பணத்தினால் சிலருக்கு தூக்கம் இல்லை.  பணம் இல்லாமல் சிலருக்கு தூக்கம் இல்லை.  சிலர் பணத்துக்காக எதையும் இழக்கிறார்கள் . சிலர் பணத்தை கொண்டு  வாழ்க்கையை இழக்கிறார்கள்.  சிலருக்கு பணத்தின் மதிப்பு தெரியாது , குணத்தின் சிறப்பும் புரியாது . பணமே வாழ்க்கை என்று வாழும் சிலர் ,   வாழ்க்கையில்  பணம் போதுமென்ற மனம் உடையவர்கள் மிக குறைவு என்றுதான் சொல்லவேண்டும். பணத்துக்கு பின்னால் ஓடும் ஒரு கூட்டம் , அவர்களை அந்த பணம் ஒருபோதும் மன நிறைவு தராது என்பது ஒருபோதும் அவர்கள் உணரமாட்டார்கள் !  பணத்துக்கு பின்னால் ஓடிகொண்டியிருப்பவர்கள் , ஓடிக்கொண்டே இருப்பார்கள் . இறுதியில் அவர்களுக்கு மரணம் அவர்களின்  பின்னால் ஓடிவருவது , அவர்களுக்கு தெரியாமலே வாழ்க்கையை பணத்துக்காக  ஓடி ஓடி உழைத்து , இறுதியில் எதுவுமே நிலை இல்லை என்ற உணர்வை. இறுதியில் உணர்வது ரொம்ப ரொம்ப தாமதம்.


வரவுக்கேற்ற செலவு செய்வது சிறந்தது மட்டும் இல்லாமல் , அது நம்மை கடன் பக்கம் கொண்டு செல்லாமல் இருக்கும் என்பது எதார்த்த உண்மை ! கடனுக்கு பொருள்களை வாங்கும் பழக்கம் உடையவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறார்கள் . கடனிலிருந்து மீளமுடியாமல் , என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறார்கள் . 

பெருமைக்காக ஏதாவது வாங்குவது , வாங்கியதை பிறருக்கு தம்பட்டம் அடிப்பது. பிறகு   கடனை சரியாக கட்டமுடியாமல் தவிப்பது , இதெல்லாம் சராசரி குடும்பத்தில் நடக்கிறது. பொருள்களின் மோகம் , பணத்தின் மீது பேராசை , கண்கள் பார்க்கின்ற பொருள்களை 'எப்படியாவது வாங்கவேண்டும் என்று ஆசை '  இப்படி பெரும்பாலர்களின் வாழ்க்கை ஓடிகொண்டுயிருக்கிறது !  


என்னதான் தீர்வு என்றால் : நம் மனதை கட்டுப்படுத்தவேண்டும் ! வாங்குவதற்குமுன் பலதடவை யோசிக்கவேண்டும் ! தேவையாக இருந்தால் மட்டும் வாங்கவேண்டும் ! வரவுக்கேற்ற செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் ! சிக்கனமாக 

இருக்கவேண்டும் , கஞ்சத்தனம் கூடாது , சேமிப்பு அவசியம் ! எப்போதாவது ஹோட்டல்களில் ஆரோக்கியமான உணவுகளை வாங்கி சாப்பிடலாம். எப்பொழுதும் இதேவெளையாக இடுக்கக்கூடாது.  பணம் நமக்கு ஊழியனாக இருக்கவேண்டும் ஒழிய எஜமானாக இருக்கக்கூடாது !  போதும் என்ற உள்ளம் இடுக்கவேண்டும் !  பிறருக்கு தர்மமும் செய்ய வேண்டும் ! பணத்தை இருக்க பிடித்துக்கொள்ள கூடாது , அதேவேளையில் அதிகமாக கொடுத்துவிட்டு ஒரேடியாக கைகளை விரித்து வைக்க கூடாது . நடுநிலையாக உங்கள் வாழ்க்கை பயணத்தை கவனமாக செய்யவேண்டும் ! 

  வாழ்க்கையில் பணமும் தேவை ! மனஅமைதியும் தேவை ! இவைகள் இரண்டும் , இரண்டு வண்டி சக்கரம் போல் , ஒன்று குட்டையாக இருந்தாலும் , வாழ்க்கை என்னும் வண்டி ஓடாது ! அதுவே ஒரு சக்கரம் நெட்டையாகவும் இருந்தாலும் அதுவும் சிரமம் தான் ! இரண்டு சக்கரமும் சரியாக இருந்தால் மட்டும் வாழ்க்கை என்னும் பயணம் சிறப்பாக இருக்கும் என்று இந்த பதிவை நிறைவுசெய்கிறேன் . அஸ்ஸலாமு 

அலைக்கும்  (வரஹ்  ).

அல்லாஹ் மிக்க அறிந்தவன் ! 

கருத்துகள்