அல்லாஹ்வின் அருட்கொடைகள் !

 


அல்லாஹ்வின் அருட்கொடைகள் ! 

 அல்லாஹ்வின் திருப்பெயரால் ....

 அல்லாஹ்வின் அருட்கொடைகளை நன்றி செலுத்தும் நன்மக்களாக நம்மை ஆக்கி அருள் புரியவேண்டும் என்ற துஆவுடன் இந்த பதிவை தொடங்குகிறேன் ...

 அல்லாஹ் தலா தனது திருமறையில் கூறுகின்றான் : 

(16:112.அல்குரான்  )ஓர் ஊரை அல்லாஹ்


முன்னுதாரணமாகக் கூறுகிறான். அது


நிம்மதியுடனும், அமைதியுடனும் இருந்தது.


ஒவ்வொரு


இடத்திலிருந்தும்


அவ்வூருக்குரிய உணவு தாராளமாக வந்து


சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின்


அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது.


எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததன்


காரணமாக பசி மற்றும் பயம் எனும்


ஆடையை அல்லாஹ் அவ்வூருக்கு


அணிவித்தான்.


ஒரு மனிதனுக்கு தேவையான வசதிகளில் முக்கியமான ஒன்று உணவு . பிறகு ஆடை , இருப்பிடம் . மன அமைதி , பயம் இல்லாத சூழ்நிலை.  நாம் அல்லாஹ்வுக்கு குறைவாகத்தான் நன்றி செலுத்துகிறோம் !  இந்த உலகத்தில் நிறைய பேர்கள் இருக்க இருப்பிடம் இல்லாமல் , உண்ண உணவு இல்லாமல் , உடுத்த உடைகள் இல்லாமல் மக்கள்கள் இருக்கிறார்கள். ஆனால் , நாம் அல்லாஹ்வின் அருளால் நல்ல வசதியாக இருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ் ! 


 சூரா யூசூப்  அதில் நமக்கு நிறைய பாடமும் , படிப்பினையும் இருக்கிறது . 


என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் வழங்கியிருக்கிறாய். (சிறிது) (பல்வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! . வானங்களையும்,  பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும்   எனது பாதுகாவலன்.  என்னை    முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக!  நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!" (என்றும் கூறினார்)


நபி யூசுப் (அலை )அவர்கள் அல்லாஹ்விடத்தில் எவ்வளவு அழகாக பிரார்த்தனை செய்துயிருக்கிறார் . அல்லாஹ்வுக்கு அழகான முறையில் நன்றி தெரிவித்து . முஸ்லிமாக மரணிக்க வேண்டும் என்றும் , நல்லோர்களின் சேர்க்க அனைத்தையும் அழகாக அல்லாஹ்விடம் கேட்டு பிரார்த்தித்தார்கள் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

இது நமக்கு ஒரு அழகான பாடமும் , படிப்பினையும் அல்லவா ! நாம் சிந்தித்து உணர்வு பெறவேண்டாமா ! நாமும் வாழ்க்கையில் இப்படி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டாமா ! 


இறுதியாக ஒன்று கூறி முடிவு செய்கிறேன். அல்லாஹ்விடம் நிறைய வசதிகளை , செல்வங்களை கொடு என்று  கேட்பதைவிட , போதுமென்ற ஒரு நிறைவான உள்ளத்தையும் , மன அமைதியும் , நல்ல ஆரோக்கியமும் மற்றும் இரண அபிவிருத்தி  கொடு என்று அல்லாஹ்விடம் தினமும் கேட்போம் . கொடுத்துக்கு அல்லாஹ்வுக்கு அதிகம் , அதிகம் நன்றி கூறி வருவோம். இறுதியாக ஒரு நபிமொழி :


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.


( புகாரி-6446 )


எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ! 

கருத்துகள்