சின்ன சின்ன கருத்துள்ள கதைகள் !
தாத்தாவுக்கு சொர்க்கம் பிடிக்க்கும் !
ஒரு முதியவர் தனது பேரனிடம் பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும். பேரன் : அது எப்படி தாத்தா? முதியவர் : சூதாட்டத்திற்கு பணம் வேண்டும். மது அருந்த பணம் வேண்டும். சிகரெட் புகைக்க பணம் வேண்டும். கூடாத இசை கேட்க பணம் வேண்டும். பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும், ஆனால் மகனே! அன்பு காட்ட பணம் தேவையில்லை கடவுளை வணங்க பணம் தேவையில்லை, சேவை செய்ய பணம் தேவையில்லை. விரதம் இருக்க பணம் தேவையில்லை. மன்னிப்பு கோர பணம் தேவையில்லை பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை. நம் உரிமையை நிலை நாட்ட பணம் தேவையில்லை. இத்தனைக்கும் மேலாக இறைவன் 'நாமம் சொல்ல வேறெதுவும் தேவையில்லை பேரனே! நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா? இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா? முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.
🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱
வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தது. ஒரு மாணவன் , 'எதிர்ப்பு, வெறுப்பு, துன்பம், வறுமை, சபலம், தோல்வி, கோபம், சோம்பல் இவை ஒரு மனிதனுக்கு வந்தால் இதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? என்று ஆசிரியரிடம் கேட்டான்.. 'எதிர்ப்பு வந்தால் அது உன் துணிவுக்கு வந்த சோதனை. வெறுப்பு வந்தால் அது உன் பிடிப்புக்கு வந்த சோதனை. துன்பம் வந்தால் அது உன் திறமைக்கு வந்த சோதனை. வறுமை வந்தால் அது உன் நேர்மைக்கு வந்த சோதனை. சபலம் வந்தால் அது உன் மன உறுதிக்கு வந்த சோதனை. தோல்வி வந்தால் அது உன் வலிமைக்கு வந்த சோதனை. கோபம் வந்தால் அது உன் பொறுமைக்கு வந்த சோதனை. சோம்பல் வந்தால் அது உன் சுறுசுறுப்புக்கு வந்த சோதனை. மனிதர்களுள் 'வெற்றியாளன் யார்?' என்று கேட்டால், இது போன்ற வேகத்தடைகளை விவேகமென்னும் விழிப்பு உணர்வினால் களைந்து சாதனை படைப்பவன் தான்' ! என்றார் ஆசிரியர் ..
ஆசிரியரின் இந்த விளக்கத்தைக் கேட்டு மாணவர்கள் தெளிவு பெற்றனர்..
🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱
ஒரு தாயும் மகனும் மட்டும் வசித்த வீடு அது. ஏழைக்குடும்பம்.
வீட்டுத்தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இப்போது தாய்க்கும் உடல் நிலை சரியில்லை. மரணத்தருவாயில்
இருந்த தாயிடம் அம்மா நீயும் என்னைவிட்டுப் போய்விடாதே. நீயும் போய்விட்டால் நான் அனாதையாக ஆகிவிடுவேனே? என அவளது கையைப் பிடித்து அழுதான் அவளது பதினைந்து வயது மகன். தாய் சொன்னாள். மகனே, எந்தச் சூழ்நிலையிலும் கலக்கம் கூடாது. ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவும் நாகசாகியும் எத்தனை அனாதைகளை உருவாக்கியது தெரியுமா? அவர்களெல்லாம் வாழாமல் போய்விட்டார்களா? ஒன்றை மட்டும் புரிந்துகொள். உன் தந்தை அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தை சொல்வார். அதையே உனக்கு சொல்கிறேன் என்ற தாயிடம் அந்த துயரமான சூழ்நிலையையும் மறந்து அவள் சொல்வதைக் கேட்க ஆர்வமானான் மகன். மகனே நீ ஒரு கலைஞனாகி விடு பிழைத்துக் கொள்வாய். அதற்காக பெரிய கலைஞன் ஆக வேண்டும் என சொல்லவில்லை. உனக்கு கழிவறை சுத்தம் செய்யும் பணி கிடைத்தால் கூட அதையும் பாக்கியமாக கருதி ரசித்து செய். நீ சுத்தம் செய்வது போல வேறு யாரும் அதை சுத்தம் செய்ய முடியாதபடி இருக்கவேண்டும். உன் வேலையில் ஒரு தனித்துவம் வெளிப்பட வேண்டும் என்றாள். ஆம் உங்கள் வேலையை ரசித்து செய்யுங்கள். ரசித்து செய்யும் வேலையில் தான் சுகமும் திருப்தியும் இருக்கிறது.
🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱🧱
நமக்கு வரும் கஷ்டமே நமக்கு அளிக்கப்பட்ட உதவி..!! அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன். யாருக்கும் உதவும் உள்ளம் கொண்டவன். அன்று வீட்டின் முற்றத்தில் மறந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். வீட்டு முன் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை எதேச்சையாகப் பார்த்த போது, ஒரு குட்டி வண்ணத்து பூச்சி அவன் கண்ணில் பட்டது . மகரயாழ் அந்த வண்ணத்து பூச்சி தனது கூட்டுப்புழு கூட்டிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இந்த சின்ன வண்ணத்து பூச்சிக்கு பறந்து வர எவ்வளவு ஆசை இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அதற்கு உதவ நினைத்தான் . ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்தான், வண்ணத்து பூச்சிக்கு சுற்றி உள்ள கூட்டை ஆங்காங்கே வெட்டி விட்டான். அவன் மனதில் ஒரு பரம ஆனந்தம், வண்ணத்து பூச்சிக்கு விடுதலை அளித்ததற்காக ! நேரம் கடந்த்தது, ஆனால் மகரயாழ் வண்ணத்துப்பூச்சி வெளியே வந்தபாடில்லை ! சிறிது நேரத்தில் எறும்புகள் அதை மொற்றியது . வண்ணத்துப் பூச்சி இறந்து விட்டிருந்தது ! அவன் திகைத்து நின்றான். கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளிவரும் போது வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளுக்கு பறப்பதற்குத் தேவையான சக்தியும் சில சுரப்பிகளும் சுரக்கும். அதற்கு உதவும் நோக்கத்தில் வெட்டி விடப்பட்ட கூடு அதற்கு எமனாகி விட்டது ! நமக்கு வரும் கஷ்டங்கள், நம்மை வாழ்விப்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி . அதனால் அதை ஏற்றுக் கொண்டு பயிலுவோம் எனக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே, அந்த கஷ்டமே உனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட உதவி.🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
உங்களுக்கு இந்த நான்கு கருத்துள்ள கதைகள் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!