தவளை எடுக்கும் பாடம்...

 


தவளை எடுக்கும் பாடம்...


மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின. அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் 'இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவு தான்' என்றார். உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது. சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் 'மேலே செல்லும் போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன என்றார். உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது. ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் 'உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது' என்று கேட்டார். அதற்கு அந்தத் தவளை 'எனக்குக் காது கேட்காது என்றது. நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.

🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான். ஒரு நாள் தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்' என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்' என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், "அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது" என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?' என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், "என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில் லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்" என்றாள். "இது எப்போது நடந்தது?" என்று கேட்டான். "அந்தக் காசு கிடைத்த மறுநாளே" என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த


நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.' என நினைத்தான். முன்பைவிட


உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்!

🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚


அந்த ஜென் குருவிடம் நான்கு மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தார்கள். ஒரு நாள் அவர்கள் ஏழு நாள் மௌனம் கடைபிடிப்பதென தீர்மானித்தார்கள். முதலிரண்டு நாளும் மௌனமாகவே போயிற்று. மூன்றாம் நாள் இரவு தூங்கப் போயினர். விளக்குகள் அணைக்கப்படவில்லை. யாராவது விளைக்கை அணையுங்களேன் என்றான் முதலாமவன். அவன் இப்படிச் சொன்னதால் அவனின் மௌனம் கலைந்தது. நாம் மௌனம் காக்கிறோம் பேசக்கூடாது என்றான் இரண்டாமவன். அவன் இவ்வாறு சொன்னதால் அவன் மௌனமும் கலைந்தது. நீ என்ன செய்கிறாய்? நீயும் பேசுகிறாயே என்றான் மூன்றாமவன். இப்போது இவன் மெளனமும் கலைந்தது. நான் ஒருத்தன் தான் இன்னும் பேசவில்லை என்றான் நான்காமவன். அதன் காரணமாய் அவன் மௌனமும் கலைந்தது. இதிலிருக்கும் நகைச்சுவையை மீறி இருக்கும் நீதி ஒன்றை நாம் பார்க்கவேண்டும். விளக்கு எரிவதைக் கண்ட முதலாமவன் தானே எழுந்து சென்று விளக்கை அணைத்திருந்தால், அவன் மட்டுமல்ல மற்ற நூல்வரும் கூட பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.


நாலாவது ஆள் வரை யாருமே சென்று விளக்கை அணைக்கவில்லை. சில நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடிய வேலையை செய்யாமல் இருந்ததற்கு பதினைந்து நிமிடங்களுக்கு விளக்கம் தருவது மனித இயல்பு. ஒரு வேலையைச் செய்து முடிக்கக் காரணமே சொல்லவேண்டாம். ஆனால் செய்யாமலிருக்கத் தேவையான காரணங்களைச் சிரமப்பட்டுத் தேடிக் கொண்டிருப்போம்.

🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜

கருத்துகள்