ஒரு தந்தையின் ஆதங்கம் !
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
சமீபத்தில் ஒரு செய்தி வாட்ஸ் அப் மூலம் அறிந்தேன் ! அந்த செய்தி , ஒரு தந்தை அவருக்கு மூன்று அல்லது இரண்டு (சரியாக நினைவு இல்லை அல்லாஹ் மிக்க அறிந்தவன் ) மற்ற இரண்டு மகள்கள் அல்லது ஒரு மகள் திருமணம் முடித்துவிட்டார் . ஒரு மகள் மட்டும் இருக்கிறது. அவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். கடைசி மகளுக்கு ஒரு நல்ல மாப்பிளை பார்க்கிறார் . அவருடைய மகளை பெண் கேட்டு வருபவர்கள் மார்க்க படித்த ஆலிம்கள் என்று குறிப்பிட்டார் ! பெண் கேட்டு வருபவர்கள் , '' இவ்வளவு நகை போடவேண்டும் என்று நிபந்தனையோடு பெண் கேட்கிறார்கள் !
அவர் தொடர்ந்து கூறும்போது , '' என்னால் 10 சவரன் தான் போடமுடியும் , அதற்குமேல் எனக்கு சக்தி கிடையாது என்று பெண் கேட்ப்பர்வர்களிடம் கூறியுள்ளார் ! அதற்க்கு யாரும் சம்மதிக்கவில்லை ! '' இவ்வளவு நகை போட்டால் தான் என்று கட்டாயமாக சொல்லிவிட்டார்கள் ! ஒவ்வொருவரும் இப்படியே கேட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்! இதை அவர் சொல்லிமுடிகிறார் !
அவர் என்ன சொல்லவருகினறார் என்றால் : '' என் மகளை பிடிக்கவில்லை அல்லது எங்கள் குடும்பம் சரியில்லை இப்படி சொல்லியிருந்தால் , பரவாயில்லை ! அனால், அவர்கள் எல்லோரும் கேட்டது நகை இவ்வ்ளவு போடவேண்டும், அவ்வளவு தரவேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்! இதுதான் எனக்கு ஒரு மனவேதனை தருகிறது ! அதுவும் மார்க்கம் படித்த ஆலிம்கள் என்று அவர் குறிப்பிடுகிறார் ! அவர் தொடர்ந்து கூறும்போது... இவர்கள் (மார்க்க கல்வி படித்தவர்கள் , என்ன மார்க்கத்தை அறிந்து வைத்துள்ளார்கள் , என்ன மார்க்கத்தை கற்றுக்கொண்டார்கள் ) என்று அவர் அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ! இது அவருடைய சரியான ஆதங்கம்தான் ! பெற்றவர்களுக்கு தான் தெரியும் வலியும், மனவேதனையும் ! ஆனால் , அவர் வெளிப்படுத்திய விதம் , அவர் பரப்பிய முறை , இடம் , இவைகள் தான் சரியானதாக இல்லை என்று பதிவு செய்கிறேன்!
ஒருகாலத்தில் குடும்பத்தில் நடக்கும் எந்த ஒரு நல்ல விஷயமாக அல்லது மன வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் , அவர்கள் அவர்க்குள்ளே பேசி வருவார்கள். அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு கூட தெரியக்கூடாது என்று நினைத்து நான்கு சுவற்றுக்குள் பேசிக்கொண்டு இருப்பார்கள்!
இப்பொழுது அப்படியே மாற்றமாக நடக்கிறது ( அல்லாஹ் பாதுகாத்தவர்களைத் தவிர ) சமூக வலைத்தளங்கள் குப்பைகளை கொட்டும் தலமாக மாறிவிட்டது . (புறம் , ஆபாசம், அசிங்கங்கள் , அருவருப்பான வார்த்தைகள், அழுக்குகள் , தேவையில்லாத வீண் விவாதங்கள் , இன்னும் பல.)
ஒவ்வருவருக்கும் ஒரு சுயமரியாதை இருக்கிறது . அதை நாம் பாதுகாக்கவேண்டும்! யாருக்கும் அதை விட்டுக்கொடுக்கக்கூடாது! தன்மானம் இருக்கிறது , அதை யாருக்கும் விட்டுக்கொடுக்கக்கூடாது ! தன் குடும்பத்தில் என்ன நடந்தாலும் , அதை வெளிப்படையாக பொதுத்தளங்களில் வெளிப்படுத்தக்கூடாது ! '' நம்முடைய குறைகளையும் , ஆதங்கத்தை அல்லாஹ் ஒருவனிடம் முறையிடவேண்டும்! மனஆறுதலுக்காக நம்பிக்கையனான நபரிடம் கூறவேண்டும்! (நம்பிக்கையானவர்கள் யார் என்று எப்படி கண்டுபிடிக்க முடியும்! ரொம்ப கஷ்ட்டம் தான் ! நம்பிக்கையானவர்கள் யார் என்றால் , ''நம் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் ) இப்போ யாரிடமும் மனஆறுதலுக்காக கூறினாலும் , அது காட்டு தீ போல் பரவிவிடும்! (அல்லாஹ் பாதுகாத்தவரைத் தவிர )
அல்லாஹ்வின் நல்லடியார்களே! தயவு செய்து எதுவாக இருந்தாலும் உடனே சமூக வலைத்தளங்களில் பரப்பி , உங்கள் ஆதங்கத்திற்கு ஒரு ஆறுதலை தேடிக்கொள்ளாதீர்கள்! இதன்மூலம் உங்களுக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் அல்லது ஏதாவது ஒரு தீர்வு பெறலாம் என்ற நோக்கத்தில் செய்யாதீர்கள்! அல்லாஹ் நமக்கு போதுமானவன் , அவன் தான் நமக்கு ஒரு நல்ல தீர்வு கொடுக்கக்கூடியவன்! அவன் தான் நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பவன் ! அவனிடம் தான் முறையிடவேண்டும்!
அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான், மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.(அல்குரான் )
வரதட்சணை கேட்பதில் கூட பல ரகம் உள்ளது. பெண்வீட்டில் என்ன தருவீர்கள் என்றுதான் ஆரம்பிப்பார்கள். பெண்ணின் படிப்பு என்ன? குணம் என்ன? மார்க்கப் பற்று என்ன? எதையும் கேட்கமாட்டார்கள். என்ன போடுவீர்கள்? என்று தான் கேட்பார்கள். பணமாக, ரொக்கத் தொகையாக வாங்குவது ஒருவகை. நாங்களெல்லாம் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு, கல்யாணத்திற்கு என்ன போடுவீர்கள் என்று பெண்வீட்டாரிடம் கேட்பார்கள். அப்படியெனில் நகைநட்டுகள் என்று பொருள்.
இன்னும் சில ஊர்களில் நடக்கும் கொடுமை, அதுவும் அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை, நாகூர் போன்ற ஊர்களில் ஒரு பெண்ணைப் பெற்றால் திருமணத்தின் போது வீடு கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். இந்த ஊர்களிலெல்லாம் ஆண்கள், மனைவியரின் வீட்டில்தான் இருப்பார்கள். விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அதிகமானவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!