அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர் !
பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்லாஹ் நமக்கு எவ்வளவு அழகாக அருமையாக இந்த வசனத்தின் மூலம் பயபக்தியார்கள் எப்படி இருப்பார்கள் . எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறான் .
இந்த மேலே உள்ள வசனத்தை பாமரமக்கள்கள் எளிதாக புரிந்துகொள்ள முடியும் !
உம்மிடம் வசதியில்லாது) உமது இறைவனின் அருளைத் தேடி எதிர்பார்த்திருக்கும் நிலையில் (ஏதும் கொடுக்காமல்) அவர்களைப் புறக்கணிப்பதாக இருந்தால் கடினமில்லாத சொல்லையே அவர்களுக்குக் கூறுவீராக!(அல்குரான் 17:28 )
இஸ்லாம் மார்க்கம் நமக்கு எவ்வளவு
அழகாக பாடம் கற்றுக்கொடுக்கிறது !
நம்மில் சிலர் வசதி இல்லாமல் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்து
கொண்டு இருக்கும் நிலையில் கூட , கொடுக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் . எப்படி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு எவ்வளவு அழகாக உபதேசம் செய்கிறான் .
உமது கையைக் கழுத்தில் கட்டப்பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்! (அவ்வாறு விரித்தால்) இழிவடைந்தவராக வறுமைப்பட்டு அமர்ந்து விடுவீர்!(அல்குரான் 17:29 )
இந்த வசனத்தின் மூலம் நமக்கு நிறைய
பாடமும் , படிப்பினையும் இருக்கிறது.
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.(அல்குரான் 17:30 )
அல்லாஹ் ஒருவனுக்கு தான் தெரியும் . யாருக்கு எவ்வளவு கொடுக்கணும் , எப்பொழுது கொடுக்கணும் , எந்தளவு கொடுக்கணும் என்பதை நன்கு அறிந்தவன் அவன் ஒருவனே ! அல்லாஹ்விடம் நாம் கேட்கலாம் ' எனக்கு நிறைய செல்வம் கொடு அதில் பறக்கத்து செய் என்று ' அல்லாஹ் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் வேறு நலவுக்காக தாமதப்படுத்தலாம் . அல்லது மறுமையில் அதற்க்கு பதிலாக நிறைய நன்மைகளை தரலாம் . எதுவாக இருந்தாலும் நிச்சயமாக அல்லாஹ் கொடுப்பான் .
யார் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்கிறார்களோ (அவ்வாறு) அழகிய செயல் செய்பவரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.(அல்குரான் 18:30 )
துஆவும் ஒரு சிறந்த வணக்கம் ! துஆ செய்து பொறுமையாக இருந்து அல்லாஹ் கொடுப்பான் , அல்லாஹ் மீது முழு நம்பிக்கை வைத்து , இப்படி செயல் புரிவதும் நல்ல அழகிய செயல் . அல்லாஹ் விசுவாசிகளின் செயல்களை வீணாக்கமாட்டான் . அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
அவர்களுக்கு நிலையான சொர்க்கச்
சோலைகள்
உள்ளன. அவற்றின்
கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக்
காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும்.
ஸுந்துஸ், இஸ்தப்ரக்
எனும் பச்சைப்
பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள்.
அதில் உள்ள இருக்கைகளில் அவர்கள்
சாய்ந்திருப்பார்கள். இதுவே சிறந்த கூலி.
அழகிய தங்குமிடம்.
இந்த உலகம் அறுப்ப சுகம் தான் ! இந்த துன்யாவை விட்டு இன்ஷாஅல்லாஹ் ஒருநாள் பிரிவோம் . நிலையான அழகான நிம்மதியான வாழ்க்கைக்கு செல்வோம் அல்லாஹ் நாடினால் .
இந்த நிலையில்லாத வாழ்க்கையில் , அது இல்லை , இது இல்லை , இன்பம் இல்லை , பணம் இல்லை. இப்படி நம்மில் யாரும் புலம்புவதை விட்டு , இன்ஷாஅல்லாஹ் மறுமையில் எல்லாம் மனம் விரும்பும் அளவுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும் . எதுவும் அங்கே மறுக்கப்படாது !
இறுதியாக ஒரு வசனம் :
(18:46. )செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
சத்திய பாதை இஸ்லாம் ⚘️
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!