RECENT POSTS

குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க இதோ சில எளிய வழிமுறைகள்!

 


குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க இதோ சில எளிய வழிமுறைகள்!


"அடுத்த தலைமுறை இணையத்தில் அடிமையாகாமல் இருக்க நாமும் சேர்ந்து முயற்சி செய்வோம் அதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம்."



1. குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை பரிசாக வழங்குங்கள். இது அவர்களுக்கு புத்தகத்தின் மீது மதிப்பும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தும்.


2. பெற்றோர்கள் செல்போன் போன்றவற்றை தள்ளி வைத்துவிட்டு குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகம் படித்தால் அவர்களுக்கும் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.


3. குழந்தைக்கு கையில் புத்தகம் வைத்து கொண்டு கதை சொல்வதும். கதை சொல்லும் போது அடிக்கடி புத்தகத்தை பார்ப்பதும். அவர்களுக்கு புத்தகத்தின் மீது கவனம் உண்டாக்கும்.


4. குழந்தைகளை விடுமுறை நாட்களில் அருகில் இருக்கும் நூலகத்திற்கு அழைத்து செல்லலாம் மற்றும் உங்கள் ஊரில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு அவர்களை அழைத்து செல்லுங்கள் புத்தகத்தின் உலகம் மெல்ல அவர்களுக்கு அறிமுகம் ஆகும்.


5. சிறுவர்களுக்கு நீதிக் கதைகள், நகைச்சுவை கதைகள் என ஏராளமான புத்தகங்கள் இருக்கிறது அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை தேர்ந்தெடுத்து அவர்களாக படிப்பதற்கு நாம் சொல்லி தரலாம்.


6. குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது அடிக்கடி புத்தகத்தை விரித்து அந்த வரிகளை விரல்களில் சுட்டிக்காட்டி உணர்ச்சிவசமாக படித்தால் கதைகளின் சுவாரசியத்தினால் குழந்தைகளுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும்.


7.புத்தகம் படிக்கும் போது அதில் வரும் சுவாரசிய தகவல்களை குழந்தைகளிடம் உரையாடலாம் புதிய புதிய விசயங்களை பற்றி நாம் பேசும் போது அவர்கள் தானாகவே புத்தகத்தின் பக்கம் திரும்புவார்கள்


8.முதலில் ஒரு புத்தகத்தை வாசிக்க கொடுக்கலாம். பின்னர் அந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் பற்றி உரையாடலாம். அல்லது அந்த கதாபாத்திரம் போல் நடித்து காட்ட சொல்லலாம்.


9. குழந்தைகளுக்கு ஆர்வத்தை அதிகரிக்க ஒவ்வொரு புத்தகத்தின் சிறப்புகளை சொல்லி புத்தக அறிமுகம் செய்யலாம் இது அவர்களுக்கு எந்த புத்தகம் வாசிக்கலாம் என்னும் குழப்பம் இல்லாமல் முடிவு எடுக்க உதவியாக இருக்கும்.


10. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுக்கலாம். படங்கள் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை அவர்களாகவே வாசிக்க விடுங்கள். புத்தகங்களை குழந்தைகள் கிறுக்கினால் திட்டாமல் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுப்பது போல தாராளமாக புத்தங்களை வாங்கி கொடுக்கலாம்.


கருத்துகள்