RECENT POSTS

தூக்கனாங்குருவி


 தூக்கனாங்குருவி


இக்குருவியின் உச்சந்தலை, மார்பு ஆகியவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெண் குருவிகள் பொதுவாக மரவண்ண நிறத்தில் இருக்கும். முட்டையிடும் பருவத்தில் ஆண், பெண் குருவிகள் இரண்டும் அடர்த்தியான பிரகாசமான மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும்.


இனப்பெருக்கம் இல்லாத காலங்களில் இவை கூடு கட்டுவதில்லை. அக்காலங்களில் இவை மரப்பொந்துகள் போன்ற அடைவிடங்களில் கூடி இரவைக் கழிக்கும்.


இப்பறவைகள் முட்கள் இருக்கக்கூடிய மரங்களில் கூடுகளைக் கட்டும்.


இவை மழைக்காலத்தின் தொடக்கத்தில் கூடமைக்கத் தொடங்குகின்றன. ஆண் மட்டுமே கூடு கட்டும் பணியில் ஈடுபடும்.


கூட்டினுள் இருக்கும் முட்டைகள் வேகமாக வீசும் காற்றில் கீழே விழாமல் இருக்கும் வண்ணம், காற்றடிக்கும் திசைக்கேற்ப கூட்டின் நுழைவுவாயிலை தூக்கணாங்குருவி அமைக்கும்.


வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட தூக்கணாங்குருவியின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும், கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்நோக்கி இருக்கும்.


கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன.


இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால், வைக்கோலையும், புல்லையும் முடிச்சு போட்டு கட்டப்படும்


இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை. காற்றினால் கீழே விழுவதில்லை.


ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றன.


ஆண் பறவைகள் நிறைய கூடுகளை கட்டி முடிக்காமலே வைத்திருக்கும். பெண் துணை உறுதியானதும் பின் கூடு முழுமையடையும்.


கூட்டின் உட்பகுதிகளில் பெண் குருவிகளின் விரும்பத்திற்கு ஏற்றார்போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. சில நேரங்களில் உட்கட்ட அமைப்புகளில் திருப்தியுறாத பெண் பறவைகள், தாங்களே தன் விருப்பத்திற்கு ஏற்றது போல கட்டிக்கொள்கின்றன.


ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் தூக்கணாங்குருவி ஒளியேற்றிக் கொள்கிறது.



மரங்கொத்தி


ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மரத்தை கொத்தும். இரண்டு அல்லது மூன்று நொடிகளில் 3843 முறை ஒரு மரத்தைக் கொத்துகிறது.


இதற்க்கு நடக்க தெரியாது.


நாக்கு அதன் அலகைவிட ஐந்து மடங்கு நீண்டதாகும்.


நாக்கு நீளமாகவும், பசைத் தன்மையும் கொண்டிருப்பதால் தன் அலகு செல்ல முடியாத மரப் பொந்துகளில் நாக்கை நுழையச் செய்து, அங்குள்ள பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.


இதற்க்கு தனித்த குரல் கிடையாது. அதன் கொத்தும் திறனை வைத்து தான் ஓசையை எழுப்புகிறது.


ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மரத்தை கொத்துவதால், மரத்திலிருந்து ஏராளமான தூசிகள் வெளிப்பட்டு அதன் நாசி வழியே செல்கிறது. அதில் இருந்து பாதுகாக்க, இவைகளின் மூக்கின் மீது அதிகமான ரோமங்கள் வளர்ந்து இருக்கிறது.


இவற்றின் மூலம் காற்றை மற்றும் சுவாசித்துக்கொண்டு மரத்துகளை வெளியேற்றுகிறது. இயற்கையான வடிகட்டி போல தகவமைப்பு பெற்றிருப்பது ஆச்சரியம் தான். அதனுடைய கண்கள், எலும்பு திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றிற்கு எவ்வித பாதிப்போ, அதிர்வோ ஏற்படுவதில்லை.


அனேகமான பறவைகள் மரப் பொந்துகளில் கூடுகளை அமைக்கும்போது ஒரு நுழை வாயிலை மாத்திரமே அமைக்கின்றன ஆனால் இவை தமது தற்பாதுகாப்பிற்காக இரண்டு வாயில்களை அமைத்துக் கொள்கின்றன. ஒரு வாயிலால் ஏதும் எதிரி விலங்குகள் வந்தால் இரண்டாவது வாயிலால் அது தப்பிததுவிடும்.


ஒரு பறவை மற்றப் பறவைகளுடன் தகவல்களைப் பறிமாற்றிக் கொள்ளவும் தமக்கு எதிகளிடமிருந்து ஆபத்து ஏற்படும்போது தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் மரங்களைக் கொத்துவதன் மூலம் ஓசை எழுப்புகின்றன.



இந்த இரண்டு கட்டுரைகளும் உங்கள் சிந்தனைக்காக ! இரு பறவைகள் ஒன்று தூக்கணாங்குருவி , இரண்டாவது மரங்குத்தி பறவை ! இரண்டுமே நமக்கு பாடங்கள் கற்று தருகின்றன !  நமக்கு ஆச்சிரியமாகவும், அதிசயமாகவும் இருக்கின்றன! அல்லாஹ்   ஒவ்வொன்றையும் அழகான வடிவத்தில் படைத்திருக்கிறான் !   அவன் சிறந்த படைப்பாளன்! 


 நாம் மட்டும் வீடு காட்டுகிறோமா ? இந்த சிறிய குருவி எவ்வளவு அழகாக தன்னுடைய வீட்டை அமைத்துக்கொள்கின்றன !  அதை நாம் இரண்டு கைகளால் கூட பிரிக்கமுடியாது , அந்த கூடு  (வீடு) அவ்வளவு பலமாக இருக்கும்! இந்த அறிவு அந்த குருவிக்கு எப்படி வந்தது ? சிந்திக்கவேண்டாமா ? 


எவ்வளவு காற்று  அடித்தாலும் , எவ்வளவு மழை பெய்தாலும் அது அடிகொண்டுதான் இருக்கும் தவிர கீழே விழாது !  அல்லாஹ் அக்பர் ! அல்லாஹ் சிறந்த படைப்பாளன் ! 


இந்த மரங்குத்தி பறவை இதுவும் ஒரு சிறிய பறவைதான்! இதுக்கு பலம் அல்லாஹ்  கூர்மையான மூக்கில் வைத்திருக்கின்றான்! அதைக்கொண்டு மரங்களை சர்வசாதாரணமாக கொத்தி கூடுகளை அமைத்துக்கொள்கின்றன! கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் , தொடர்ச்சியாக கொத்திக்கொண்டே இருக்கும்! மனிதராகிய நாம்  சோர்வு அடைத்துவிடுவோம்! இதுவும் அல்லாஹ்வின் படைப்பிகளில் ஒன்றுதான்!  அதிசயம்தான் !  சிந்திக்கக்கூடிய மக்கள்களுக்கு இதிலும் சில அத்தாட்சிகள் இருக்கின்றன !   இன்னும் சொல்லணும் என்றால் , இதைவிட சிறிய பூச்சி . அதான் கரையான் என்று சொல்வோம்! இதுக்கு அல்லாஹ் எவ்வளவு ஆற்றல்  தந்திருக்கிறான்!  எல்லா கரையான்களும் சேர்ந்து எவ்வளவு பெரிய பலமான அலமாரியை கூட ஒன்று இல்லாமல் செய்துவிடும்! அல்லாஹ் அக்பர்! 


இதெல்லாம் நம்முடைய சிந்தனைக்காக பதிவு செய்கின்றேன் ! அல்லாஹ்வின் படைப்புகளை நாம் அடிக்கடி சிந்திக்கவேண்டும்! அவனிடத்தில் நாம் முழுமையாக சிரம் பணியவேண்டும்!  நம்மிடத்தில் பணிவு வரவேண்டும் ! நம்மிடத்தில் பெருமையோ அல்லது ஆணவமோ அல்லது ஆங்காரமோ '' நான் தான் எல்லாம் தெரிந்தவன் '' என்று இவைகள் எதுவும் நம் உள்ளத்தில் ஒரு சிறிய அளவு கூட இருக்கக்கூடாது! நம் உள்ளம் அல்லாஹ்வின் அச்சமும் , பணிவும் , அடக்கமும், அன்பும், நல்ல பண்பும் , நல்ல குணமும் நிறைந்த உள்ளதாக இருக்கவேண்டும்!


அல்ஹம்துலில்லாஹ் !

அல்லாஹ் மிக்க அறிந்தவன்!


கருத்துகள்