RECENT POSTS

சிந்தனை துளிகள்

சிந்தனை துளிகள்
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
[நபியே!] சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்கள்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.
அல்குர்ஆன்.. 20..131]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும் எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும். இவ்வுலகத்துக்கும் உள்ளது எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.


அல்லாஹ் உங்களுக்கு ஒரு சோதனையைத் தருகின்றான் என்றால் அத்துடன் சேர்த்து ஒரு தீர்வையும் வைத்திருப்பான். மற்றவர்களின் செல்வதை பார்த்து பொறாமை படாதீர்கள் ! ''அல்லாஹ் நமக்கு கொடுக்கவில்லையே என்று ஏங்காதீர்கள்! '' நீ முழு உலகையுமே  இழந்து விட்டாய், ஆனால், அல்லாஹ் உன்னுடன் இருக்கின்றான் என்றால் நீ எதனையும் இழந்து விடவில்லை. உனக்கு முழு உலகமும் கிடைத்திருக்கிறது, ஆனால், அல்லாஹ் விட்டும் நீ தூரமானவனாக இருக்கின்றாய் என்றால் நீ அனைத்தையும் இழந்து விட்டாய் என்று அர்த்தம்!

மற்றவர்களிடம் அளவுக்கதிகமாக உதவி கேட்டு நேரத்தை விரயமாக்கிட வேண்டாம். அல்லாஹ்விடம் மட்டும் உதவியை எதிர்பாருங்கள்!
உங்களுக்காக பிரார்த்திப்பது போன்று மற்றவர்களுக்காகவும் பிரார்த்தியுங்கள்! சுயநலமிகளாக இருந்துவிட வேண்டாம். உங்களுக்காக கேட்பவற்றை மற்றவர்களுக்காகவும் கேளுங்கள்! உள்ளத்தில் அன்பு வளர்வதை உணர்வீர்கள்!

ஒரு ஹதீஸின் கருத்து .. அண்ணல் நபி [ஸல்] எது ஆரம்பித்தாலும் அவர்கள் , வலது கையால்தான் தொடங்குவார்கள். ஆடை அணியும்போது , தலை வாரும்போது இன்னும் பல காரியங்கள் செய்யும்போது!  இடது கையால் வாங்காதீர்கள்! இடது கையால் கொடுக்காதீர்கள்! அறிவிப்பவர்,, அப்துல்லாஹ் இப்னு உமர் [ரலி] நூல் .. முஸ்லிம் ]

நாம் வீட்டைவிட்டு வெளிச்செல்லும்போது  இடது காலை வைத்து செல்லவும் .வீட்டுக்குள் நுழையும்போது வலது கால் வைத்து உள்ளே வரவேண்டும். [சுன்னத்தான துஆக்கள் இருக்கிறது! அதை மனனம் செய்துக்க கொண்டு ஓதிவருவது நன்மையான விடயம்! டோஇலேட் போகும்போது இடது கால் வைத்து, வெளியே வரும்போது வலது கால் வைத்து வரவேண்டும்.  சுன்னத்தான துஆக்கள் உள்ளன., அதை மனனம் செய்து கொள்வது நன்று! இப்படி நாம் ஒவ்வொரு விடயத்திலும் அண்ணல் நபி  [ஸல்] அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி வந்தால்  , எண்ணற்ற நன்மைகள் கிட்டும் !

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன! 

கருத்துகள்