RECENT POSTS

உங்கள் வாழ்க்கையை மாற்றும் 3 உபதேசங்கள்!


 உங்கள் வாழ்க்கையை மாற்றும் 3 உபதேசங்கள்!


அல்லாஹ்வின் திருப்பெயரால் 


நாம் வாழ்க்கையில் நிறைய உபதேசங்களை கேட்டிருப்போம்!  இப்போவும் கேட்டுகொண்டியிருக்கலாம்! இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் கேட்கலாம்!  இந்த மூன்று உபதேசங்களும் ரொம்ப அருமையான நம் மனதை மாற்றக்கூடிய , ஈர்க்கக்கூடிய அழகிய உபதேசங்கள் என்று சொன்னால் மிகையாகாது! 


இன்ஷாஅல்லாஹ் அவைகள் எது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம் !


முதல் உபதேசம்:


அல்லாஹ்வின் திருத்தூதர் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அதாவது ஜிப்ரயில் (அலை) அவர்கள் அண்ணல் நபிகளிடம் வந்து சொன்னதாக : யா முஹம்மதே !  நீங்கள் விரும்பியபடி வாழலாம் ! ஆனால், ஒரு நாள் நீங்கள் மரணிக்கத்தான் போகிறீர்கள்! 


இரண்டாவது ;

நீங்கள் யாரைவேண்டுமானாலும் நேசிங்கள்! ஆனால், ஒருநாள் அவர்களைவிட்டு பிரிந்து ஆகவேண்டும்!


மூன்றாவது:


நீங்கள் விரும்பியதை செய்யுங்கள், அதற்காக உங்களுக்கு கூலி கொடுக்கப்படுவீர்கள் ! 


எவ்வளவு அற்புதமான உபதேசங்கள்!

ஜிப்ரயில் (அலை) அவர்கள் சொன்ன அந்த மூன்று உபதேசங்களும் , இந்த உம்மத்துக்கான உபதேசங்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்தும் , புரிந்துகொள்ளவேண்டும்!


இந்த மூன்றையும் ஒவ்வொரு முஸ்லீம் ஆண்/பெண் இருசாராரும் பின்பற்றி வாழ்க்கையில் பேணிக்கொண்டோம் என்றால் , இன்ஷாஅல்லாஹ் நமக்கு எந்த பிரச்சனையும், துன்பமும், துயரமும் , எந்த ஒரு பாரமும், கஷ்டமும், எந்த ஒரு சோதனையும் வாராது . அப்படி வந்தாலும் நமக்கு அவைகள் பெரிதாக தெரியாது! 


நாம் விரும்பியபடி வாழலாம்... ஆனால் நமக்கு ஒருநாள் மரணம் வரும் என்பதை நினைவில் வைத்தால் , நம் எந்த பாவமும் செய்ய மனம் வராது . பிறரை பற்றி தவறாக பேச வராது!  இன்னும் சில கெட்ட செயல்கள் செய்ய மனம் இடம் தராது! 


நாம் யாரையும் நேசித்தாலும் அவர்களை விட்டு ஒருநாள் பிரிந்து ஆகவேண்டும்! நாம் யாரை அதிகம் நேசிக்கவேண்டும் என்பதை இந்த உபதேசம் மூலம் புரிந்துகொள்ளலாம்!  நம் அல்லாஹ்வையும் , அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் உயிரைவிட நேசிக்கவேண்டும்! இஸ்லாத்தை நேசிக்கவேண்டும், மறுமையை நேசிக்கவேண்டும் . 



நாம் விரும்பியதை செய்யலாம்...  நமக்கு அதற்க்கு கூலி கொடுக்கப்படும் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்! 

நற்கூலியா அல்லது தண்டனையா என்பதை சிந்த்தித்து ஒவ்வொரு செயலையும் செய்ய விரும்புவோம்! 


இன்ஷாஅல்லாஹ் இந்த மூன்று உபதேசங்களையும் நம் வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டும்! மனதில் ஆழமாக பதிய வைக்கவேண்டும்!


நாம் எப்படி வாழவேண்டும்! அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் உகந்த வாழ்க்கை வாழ்கிறோமா என்பதை இப்போவே சிந்திக்கவேண்டும்! நம் நம்மை பரிசோதிக்கவேண்டும்!


 நம் யாரை நேசிக்கிறோம் என்பதை இப்போவே நாம் நம்மை சுயபரிசோதனை  செய்யவேண்டும்! யாரை நேசித்தால் நாம் அவருடன் இன்ஷாஅல்லாஹ் சுவனத்தில் இருப்போம்! யாரை நேசித்தால் நமக்கு இம்மை மறுமை பலன் கிடைக்கும்! யாரை நேசித்தால் நமக்கு அல்லாஹ்வின் நினைவு வரும்: என்பதை சிந்த்தித்து செயல்படுவோம்!


நாம் எதைவேண்டுமானாலும் செய்ய விரும்பலாம்!! அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை காட்டி தந்தார்களோ , எதை செய்ய சொன்னார்களோ , எது நமக்கு கட்டளையிடப்பட்டது அவைகளை மட்டும் நாம் நம் வாழ்க்கையில் செய்ய கற்றுக்கொள்ளவேண்டும் !  இதற்க்கு மாறாக மற்ற விஷங்களை விட்டு தவிர்ந்துகொள்ளவேண்டும்! 


அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக !!!

ஆமீன் ....



கருத்துகள்