RECENT POSTS

பொய்ச்சத்தியம்

 




பொய்ச்சத்தியம்


இப்னு மஸ்வூத் (ரழி) அறிவிக்கிறார்கள்: ஒரு முஸ்லிமின் பொருளை அபகரிப்பதற்காக யாரேனும் பொய்ச் சத்தியம் செய்தால் அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்ட நிலை யில் அல்லாஹ்வை அவன் சந்திப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு இதுபற்றி வந்துள்ள திருக்குர்ஆனின் "எவர்கள் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக் கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற் பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்க ளிடம் பேசவும் மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட் டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மா றாக அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனைதானிருக்கின் றது ' (8:77) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். நூல்: புகாரி (6659), முஸ்லிம், திர்மிதி (1287)


யார் பொய் சத்தியத்தின் மூலம் ஒரு முஸ்லிமுடைய உரிமை யை பறித்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவருக்கு நரகத் தை கடமையாக்கிவிடுகின்றான். சொர்க்கத்தை ஹராமாக் கிவிடுகின்றான் என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். அப் போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! மிகச்சிறிய பொருளானாலுமா? என்று கேட்க, அராக் மரத்தினுடைய (பல்துலக்கும் ) சிறு குச்சியானாலும் சரியே! என நபி (ஸல் ) கூறினர். அறிவிப்பவர்: அபூஸலமா (ரழி) நூல்: முஸ்லிம். அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைத் தொல் லனப்படுத்துவதும், உயிர்களைக் கொல்வதும், பொய் சத் தியம் செய்வதும் பெரும்பாவங்களாகும். நபிமொழி. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) புகாரி (6675)






மற்றொரு அறிவிப்பில் ஒரு கிராம வாசி நபி (ஸல்) அவர்க ளிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! பெரும்பாவங்கள் எவை? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல் ) அவர்கள் அல் லாஹ்வுக்கு இணைவைப்பது என்றார்கள். வேறு என்ன? என்று அவர் திரும்பவும் கேட்கவும் பொய்ச் சத்தியம் செய் வது என்றார்கள். பொய் சத்தியம் என்றால் என்ன? என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்)அவர்கள் ஒரு முஸ்லி மின் பொருளை பறித்துக் கொள்வதற்காக சொல்லப்படும்


சத்தியம் என்று கூறினார்கள் என உள்ளது (புகாரி)




மற்றொரு அறிவிப்பில் ஒரு கிராம வாசி நபி (ஸல் ) அவர்க ளிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! பெரும்பாவங்கள் எவை? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல் லாஹ்வுக்கு இணைவைப்பது என்றார்கள். வேறு என்ன? என்று அவர் திரும்பவும் கேட்கவும் பொய்ச் சத்தியம் செய் வது என்றார்கள். பொய் சத்தியம் என்றால் என்ன? என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லி மின் பொருளை பறித்துக் கொள்வதற்காக சொல்லப்படும் சத்தியம் என்று கூறினார்கள் என உள்ளது (புகாரி)


பயன்கள்:


1. பொய் சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் பொருளை அபகரிப் பது கொடுமையான ஹராமாகும்.


2. இவ்வாறு செய்பவனுக்கு கடுமையான தண்டனை இருக்கி றது. அவனது சத்தியம் அவனை நரகில் தள்ளிவிடும்.


8. அதைத் தவிர்ந்து கொள்வது கடமையாகும்.


52. பொய் சாட்சி


பொய் சொல்வதிலிருந்து விலகியிருங்கள். (22:80)


எதைப் பற்றி உனக்கு ஞானமில்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக கண், காது, இதயம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விசாரிக்கப்பட்டே தீரும். (17:36)


அபூபக்ரா (ரழி) கூறியதாவது: மிகப்பெரும் பாவங்கள் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர் கள் கேட்டனர். அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள் என் றோம். அதற்கு, 'அல்லாஹ்வுக்கு இணைலைப்பதும் பெற் றோரைத் தொல்லைப்படுத்துவதும்தான்' என்று கூறிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல் ) எழுந்து உட்கார்ந்து




கொண்டு 'பொய் சாட்சி கூறுவதும்தான்' என்றனர். நிறுத் தமாட்டார்களா என்று நாங்கள் சொல்லுமளவுக்கு இதை திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள்.


நூல்: புகாரி(5975) முஸ்லிம், திர்மிதி (5008)


பயன்கள்:


1. பொய் சாட்சி சொல்வது கொடிய ஹராமாகும்.


2. இது மிகப்பெரும் பாவமாகும். ஏனெனில் இதில் பொய் கலந் திருக்கிறது. இது முஸ்லிம்களுடைய உரிமைகளைப் பாழ் படுத்துவதாகவும் இருக்கின்றது.

கருத்துகள்