RECENT POSTS

கவிதை

 




கவிதை


கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுகிறார்கள். அவர் கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதை நீர் பார்க்கவில்லையா? திண்ணமாக அவர்கள், தாம் செய் யாதவற்றைக் கூறுகிறார்கள். ஆனால் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர்ந்து (பிறர் நிந்தனையால்) பாதிக்கப்பட்ட பின்னர் (தம் கவிதையால்) பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர! (மற்றவர்கள் மேற்கூறிய கண்டனத்திற்குரியவர்கள்) (26:224-227)


கவிதையிலும் ஞானம் உண்டு என நபி (ஸல்)அவர்கள் கூறி யதாக உபை இப்னு கஃபு (ரழி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி (6145), திர்மிதி (2001)






பனூ குறைழா போரின்போது நபி(ஸல்) அவர்கள் ஹஸ் ஸான் (ரழி) அவர்களிடம் இணைவைப்பவர்களை (பதிலுக்கு) வசைபாடுவீராக! நிச்சயமாக ஜிப்ரீல் (அலை) உம்முடன் இருக்கிறார்கள் என்று கூறிளார்கள். அறிவிப்பவர்: பர்ராஉ பின் ஆஸிப் (ரழி) நூல்: புகாரி (6153), முஸ்லிம்.


0 உங்களில் ஒருவரது உள்ளத்தில் கவிதை நிரம்பி அத னால் அது கெட்டுப்போவதை விட சீழ் நிரம்பியிருப்பதே மே லானது என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹு ரைரா (ரழி) நூல்: புகாரி (6154), முஸ்லிம், திர்மிதி (2009)


பயன்கள்:


1.கவிதையில் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.


2. ஒரு மனிதனின் உள்ளத்தில் இறை நினைவும் குர்ஆனும் இல்லாத விதத்தில் கவிதைகளை அதிகம் மனனம் செய் வது குறித்து எச்சரிக்ப்பட்டுள்ளது.


விலக்கப்பட்ட வார்த்தைகள்


யாரேனும் ஒருவர் தன் சகோதரரை காபிர் எனக் கூறினால்


இருவரில் ஒருவர் அவ்வாறு ஆவார். (அதாவது) கூறப்பட்ட


வர் அவ்வாறு இருந்தால் சரி. இல்லையென்றால் அவ்வார்த்


தை சொன்னவர் பக்கம் திரும்பிவிடும் என நபி (ஸல்) அவர்


கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி)


நூல்: புகாரி (6104), முஸ்லிம்.


யாரேனும் ஒருவர் இன்னொருவரை காபிர் என்றோ அல்


லாஹ்வின் விரோதி என்றோ அழைத்தால் அவர் அவ்வாறு


இல்லையென்றால் அந்த வார்த்தை அழைத்தவர் பக்கமே


திரும்பிவிடும் என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூதர் (ரழி), நூல்: புகாரி (6045), முஸ்லிம்.


நான் நபி (ஸல் ) அவர்களுப் பின்னால் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அவர்களுடைய வாகனம் (கால்) தவறி கீழே விழுந்தது. அப்போது நான் 'ஷைத்தான் நாசமாகப் போகட்டும்' என்று கூறினேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஷைத்தான் நாசமாகப் போகட்டும்' என்று கூறாதே! ஏனெனில் இவ்வாறு கூறுவதால் அவன் ஒரு வீடு அளவுக்கு பெருக்கமடைந்து எனது ஆற்றலால்தான் நான் அந்த வாகனத்தைக் கீழே தள்ளினேன் என்று (பெருமையாகக்) கூறுவான். மாறாக பிஸ்மில்லாஹ் என்று கூறு. ஏனெனில் இவ்வாறு கூறினால் ஷைத்தான் சிறுமைப்பட்டு 'ஈ' அள வுக்கு மாறிவிடுவான் எனக் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூதர் (ரழி) நூல்: அஹ்மத்


பயன்கள்:


1.ஒரு முஸ்லிமைப் பார்த்து காஃபிர் என்று சொல்லக் கூடாது.


2. ஒரு முஸ்லிமைப் பார்த்து அல்லாஹ்வின் வீரோதி என்று சொல்லக் கூடாது.


8. இவ்விரு வார்த்தைகளையும் ஒரு முஸ்லிமைப் பார்த்துக் கூறும்போது அதற்கு அவன் தகுதியில்லையென்றால் அது கூறியவரின் மீதே திரும்பிவிடும்.


4. ஷைத்தான் நாசமாகட்டும் என்று கூறக்கூடாது. அதற்குப் பகரமாக பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும்.

கருத்துகள்