யாரிடமும் எதையும் எதிர்பாக்காதீர்கள் யாரும் எதுவும் உங்களுக்கு செய்து விட முடியாது, அல்லாஹ் நாடாமல் .உங்கள் எதிர்பார்ப்புகள் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்க வேண்டும்! உங்கள் கவலைகளை கஷ்டங்களை அல்லாஹ்விடமே முறையிடுங்கள். மற்றவர்களிடம் முறையிடுவதினால் எந்த பலனும் இல்லை எதுவும் ஆகப் போவதில்லை. இப்படி பழகிக் கொண்டோம் என்றால் அல்லாஹ் நம்மை சுயமரியாதையுடன் கண்ணியமாக வாழ வைப்பான் மற்றவர்களுக்கு முன்னால் நம்மை தலை நிமிர்ந்து நடக்க செய்வான்.
வாழ்க்கையில் சிலர் தங்களுடைய கஷ்டங்களில் பிறர்களிடம் புலம்புவதை நாம் பார்க்கலாம் .அதனால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. கஷ்டங்களையும் கவலைகளையும் மற்ற மனிதர்களிடம் கூறுவதினால் , எதுவும் நடக்கப் போவதில்லை.
நம்முடைய கஷ்டங்களையும் கவலைகளையும் போக்குபவன் அல்லாஹ் ஒருவனே அவனைத் தவிர வேறு யாரும் நம்முடைய கஷ்டங்களையும் கவலைகளையும் நீக்க முடியாது இதைப் புரிந்து கொண்டாலே எந்த ஒரு முஸ்லீம் மற்றவர்களிடம் புலம்புவதை விட்டுவிடுவான் .
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!