தலைவாருதல்

 


தலைவாருதல்


தலைமுடியை சரிவர கவனித்தல்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்”


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல் : அபூதாவூத்-4163 (3632)


நபி (ஸல்) அவர்கள் எண்ணை தேய்த்திருந்தால் அவர்களுடை (நரை முடிகள்) வெளியே தெரியாது. எண்ணை தேய்க்கவில்லை என்றால் வெளியே தெரியும். 


அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி­), நூல் : முஸ்லிம்-4680 (4325)


எண்ணெய் தேய்த்தல் 




சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நரைமுடி பற்றிக் கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், “நபியவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒருசில நரைமுடிகூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்காவிட்டால் சில நரைமுடி தென்படும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி), நூல் : முஸ்லிம்-4680 

சீப்பை  பயன்படுத்துதல் 


நபி (ஸல்) அவர்கள் பரட்டைத் தலையுடயவராக ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) இவர் தனது முடியைப் படிய வைக்கக்கூடிய ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.


அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : நஸாயீ-5236 (5141)


வலது புறத்திலிருந்தே ஆரம்பித்தல் 



5854. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் தாம் அங்கசுத்தி (உளூ) செய்யும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும், காலணி அணிந்துகொள்ளும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி-5854

அடிக்கடி தலைவாரிக் கொள்வது கூடாது 

எங்களில் ஒருவர் தினந்தோறும் தலைவாரிக் கொள்வதையும் தான் குளிக்குமிடத்தில் சிறுநீர்கழிப்பதையும்   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அபூதாவூத்-28

ஒட்டு முடி வைப்பதும், பச்சை குத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது 

5933. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி-5933 

பாதி மழித்து பாதி விடுவதற்கு தடை 

5921. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி-5921  

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறுபகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடைசெய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாக சிரைத்துவிடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : நஸாயீ-5048 (4962)

 

நரைமுடிக்குச் சாயமிடுவது 

 

5899. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி-5899 

4269. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா அவர்கள் மக்கா “வெற்றி ஆண்டில்” அல்லது “வெற்றி நாளில்” (நபி (ஸல்) அவர்களிடம்) “வந்தார்கள்”. அல்லது “கொண்டுவரப் பட்டார்கள்”. அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில்) இருந்தன. அவருடைய துணைவியரிடம் நபி (ஸல்) அவர்கள், “இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : முஸ்லிம்-4269  

நரைமுடிக்கு கருப்பு சாயமிடுவதற்கு தடை 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள் கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்கத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி­), நூல் : நஸாயீ-5075 (4988)  

மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

தலைவாருவதின் ஒழுக்கங்கள்

தலைக்கு எண்ணை தேய்த்து வாரிக் கொள்ள வேண்டும், பரட்டைத் தலையாக இருப்பது கூடாது.


தலைவாரும் போது வலது புறத்தை முற்படுத்த வேண்டும்


அடிக்கடி தலைவாருதல் கூடாது


ஒட்டு முடி வைப்பது கூடாது


குடுமி வைப்பதும் கூடாது


நரை முடி இருந்தால் அதற்கு சாயமிட்டுக் கொள்ளலாம். ஆனால் கருப்பு சாயம் பூசுவது கூடாது.


கருத்துகள்