RECENT POSTS

பின்பற்றலும் பித்அத்தும்

 


பின்பற்றலும் பித்அத்தும்


(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான் மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். (3:31)


இல்லை! (முஹம்மதே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம் மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தி யும் கொள்ளாமல் முற்றிலும் அதற்குக் கட்டுப்படாத வரை அவர்கள் முஃமின்களாக ஆகமாட்டார்கள். (4:65)


நம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உரு வாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),முஸ்லிம்


நம்மால் ஏவப்படாத காரியத்தை யார் செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) புகாரி (2697), முஸ்லிம்.


நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு, உள்ளங்களை நடுங்கச் செய்து கண்களில் கண்ணீரை வரவழைக்கக்கூடிய சிறந்த போதனை செய்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! இது விடைபெறுபவரின் போதனை போன்றிருக்கின்றதே! எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்' எனக் கூறினோம். அப் போதவர்கள் கூறினார்கள்: இறையச்சத்தையும் அபிசீனிய அடிமை உங்களுக்குத் தலைவராக இருந்தாலும் (உங்க ளில் அதிகாரம் வகிப்பவர்களுக்கு ) செவி சாய்ப்பதையும் கட் டுப்படுவதையும் நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.


இனி வாழ்பவர்கள் ஏராளமான கருத்து வேறுபாடுக ளை நிச்சயம் காண்பார்கள் அப்போது எனது வழிமுறை யையும் அவ்வழிமுறையை தம் கடவாய்ப் பற்களால் கடித் துக் கொண்ட நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழிமுறை யையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (மார்க்கக்) காரியங் களில் புதிதாக உருவாக்கப்பட்டதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். நிச்சயமாக பித்அத்துகள் அனைத்தும்


வழிகேடாகும். அறிவிப்பவர்: இர்பாழ் பின் ஸாரியா (ரழி) நூல் : அபூதாவூத், திர்மிதி (2815) 0 நபி (ஸல் ) அவர்கள் உரை நிகழ்த்தும் போது நிச்சயமாக வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வுடைய வேதம். நேர் வழியில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் நேர்வழி. காரியங்களில் கெட்டது புதிதாக உருவாக்கப்பட்டவை! எல்லா பித்அத்துகளும் வழிகேடே! என்று கூறுவார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல் : முஸ்லிம்


பயன்கள்:


1. மார்க்கத்தில் பித்அத் செய்வது ஹராமாகும். ஏனென்றால் இது ஒரு முஸ்லிம் நபி (ஸல்) அவர்கள் மார்க்கமாக்காததை அல்லாஹ்வுக்குரிய வணக்கமாகச் செய்வதாகும்.


2. பித்அத் பெரும்பாவமாகும். இது ஏற்றுக் கொள்ளப்பட மாட் டாது. அதைச் செய்தவன் மீதே அது திருப்பப்படும்.


3. அனைத்து வகையான பித்அத்துகளை விட்டும் தவிர்ந்து கொள்வது கடமையாகும். ஏனெனில் அவையனைத்தும் தீமையும் வழிகேடுமாகும்.

கருத்துகள்