முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றுவதன் சிறப்பு
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் சகோதரராவார்.அவருக்கு அநியாயம் செய்யமாட்டான். அவரைப் பாதுகாக்காமல் இருக்க மாட்டான். யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளாரோ அவரது தேவையை நிறைவேற்றுவதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். யார் ஒரு முஸ் லிமின் சிரமத்தை நீக்குகின்றாரோ மறுமையின் சிரமங்க ளில் ஒன்றை அல்லாஹ் அவரை விட்டும் நீக்குவான். யார் ஒரு முஸ்லிமின் தவறை மறைக்கின்றாரோ மறுமையில் அல்லாஹ் அவரின் தவறுகளை மறைப்பான் என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல் : புகாரி (2442), முஸ்லிம், திர்மிதி (1448)
யாரேனும் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் இவ்வுலக கஷ்டங் களில் ஒன்றை நீக்கினால் மறுமையின் சிரமங்களில் ஒன் றை அவரை வீட்டும் அல்லாஹ் நீக்குவான். கடனால் சீர மப்படு பவருக்கு (கடனை தள்ளுபடி செய்து அல்லது கூடுதல் அவகாசம் வழங்கி) யாரேனும் சலுகை வழங்கினால் இவ்வு லகிலும் மறுமையிலும் அல்லாஹ் அவருக்கு சலுகை அளிப் பான். ஒரு முஸ்லிமின் குறையை யாரேனும் மறைத்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் அவரின் குறையை அல்லாஹ் மறைப்பான். ஒருவர் தன் சகோதரருக்கு உதவும்போதெல் லாம் அல்லாஹ் அவருக்கு உதவுகிறான்.
எவர் கல்லியைத் தேடும் பாதையில் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்திற்கு செல்லும் பாதையை இலகுவாக்குகிறான். அல்லாஹ்வின் பள்ளிகளில் ஏதேனும் ஒரு பள்ளியில் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, ஒருவருக் கொருவர் கற்றுக்கொள்ளும் கூட்டத்தினர் மீது அமைதி இறங்குகிறது. அருள் சூழ்கிறது. வானவர்கள் அவர்களை சூழ்ந்து கொள்கின்றனர். ஒருவரின் செயல் அவரைப் பின்னடையச் செய்யும்போது அவரது பாரம்பர் யம் அவரை முன்னேற்றிவிடாது என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம், திர்மிதி (4015)
பயன்கள்:
1. முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பதற்கு
சிறப்புண்டு. குறிப்பாக அவர்களிலுள்ள பலவீனர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு. காரணம் அவர்களின் தேவை அதிகமிருப்பதால்
யார் தனது சகோதர முஸ்லிமுக்கு உதவி செய்கிறாரோ அவருக்குத் தேவை ஏற்படும் போது அல்லாஹ் அவருக்கு உதவி செய்கிறான்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!