சினிமாவும் , சீரழியும் சமுதாயமும்!
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
சினிமாவை பார்த்து வாழ்க்கையில் சீரமைத்துக்கொண்டவர்கள் எத்துனைபேர்கள் ? சினிமாவை பார்த்து சீரழிந்துபோனவர்கள் எத்துனைபேர்கள் ? இதற்க்கு ஒரு பெரிய சர்வே எடுக்க தேவையில்லை ! ஒரே வார்த்தையில் சொல்லப்போனால்.. சீரழிந்தவர்கள் , இன்னும் சீரழிந்துகொண்டுயிருப்பவர்கள் , சினிமாவுக்காக வாழ்க்கையை இழந்தவர்கள் , சினிமா வேறு , வாழ்க்கை வேறு என்று புரியாமல் இருப்பவர்கள், சினிமாவுக்காக வெறிபிடித்து திரிபவர்கள், நடிகர்கள் , நடிகைகள் அவர்களுக்காக சுயமரியாதை இழந்து , அவர்களுக்கு பின்னால் ஓடி திரியும் கூட்டம் . இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்..
ஒரு நடிகருக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது , அதில் படித்தவர்கள் , படிக்காதவர்கள் இப்படி பல பேர்கள் இருக்கிறார்கள்! ஒரு நடிகரின் படத்துக்கு அவர்களின் ரசிகர்கள் போதுமானவர்கள் அந்த படத்தை ப்ரொமோட் செய்வதற்கு! புதிய படம் வந்தால் , அந்த படத்தை பார்க்க முதலில் போட்டிபோட்டுக்கொண்டு வருபவர்கள் ரசிகர்கள் ! டிக்கெட்டின் விலை எவ்வளவாக இருந்தாலும் கொடுக்க தயக்கம் காட்டுவதில்லை ! எந்த புகாரும் கொடுப்பதில்லை! காரணம் அவ்வளவு வெறி ! ரசிகர்கள் என்ற பெயரில் , அவர்களின் கூற்று , அவர்களின் நடவடிக்கைகள் எல்லாமே ஒரு கண்மூடித்தனமான செயல் என்று சொல்லலாம்.. ஒரு நடிகரை தூக்கிவைத்து கொண்டாடும் சமுதாயமாக எப்போவோ மாறிவிட்டது ! இந்த சமுதாயத்தை சீர்படுத்த எந்த சீர்திருத்தவாதிகளும் இல்லை! பெரும்பாலும் ஊடகங்களும் இந்த சினிமாவுக்கு வக்காலத்து வாங்கும் நிலையை தான் பார்க்கிறோம்!
இந்த சினிமாவினால் பல கோடி ரூபாய்கள் வருமானம் வருகின்றன! இந்த சினிமாவினால் அதிகம் பலன் அடையக்கூடியவர்கள் , நடிகர்கள் , நடிகைகள் என்று தன சொல்லவேண்டும்! ஒரு பிரபலியான நடிகர் , அவர் வாங்கும் சம்பளம் பல கோடி ரூபாய்கள்!
இந்த நடிகர்களை தலையில் வைத்து கொண்டாடாடக்கூடிய இந்த ரசிகர்கள் உண்மையில் இவர்கள் தான் உலகில் பெரிய முட்டாள்கள் ! இந்த சமூகம் யாரை போற்றவேண்டுமோ அவர்களை இந்த சமூகம் புறக்கணித்துவிடும்! யாரை புறக்கணிக்கவேண்டுமோ அவர்களை தலையில் வைத்து கொண்டாடும்! இவர்கள் உண்மையில் முட்டாள்கள்தானே ?!
சில நடிகர்களுக்கு பின்னால் ஓடி திரிகிறார்கள் ! சுயமரியாதை இழக்கிறார்கள் ! அவர்களுக்காக சில ரசிகர்கள் உயிரை கூட இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது! இது எல்லாம் நடக்கிறதா இல்லையா என்பது உங்களுக்கு தெரியும்! சும்மா எந்த ஆதாரமும் இல்லாமல் பதிவு செய்யவில்லை! ஒரு நடிகர் வெளியில் வந்தால் போதும், அவரை சுற்றி பல ஊடகங்கள் (அவர்களுக்கு செய்தி சேகரிக்க வேண்டும் , பணத்துக்காக வேலை செய்கிறார்கள் ) அந்த நடிகருடன் செலஃபீ எடுப்பது , கூட்டத்தை பிளந்துகொண்டு , மோதிக்கொண்டு கொஞ்சமும் சென்சஸ் இல்லாமல் , வெட்க உணர்வு இல்லாமல் அவமரியாதை படுவது ! யார் இந்த நடிகர்கள் ? இவர்களின் சிலர் வாழ்க்கை இரட்டை முகம் கொண்டது ! இரு திரைகள் கொண்டது! சினிமாவில் ஹீரோவாக , நிஜ வாழ்க்கையில் வில்லனாக இருக்கும் இவர்களின் உண்மையான வாழ்க்கை , உண்மையான சுயரூபம் தெரியாமல் இருக்கும் இந்த அப்பாவி ரசிகர்களை என்ன சொல்வது!
இந்த சினிமா நடிகர்கள் திரையில் வீரவசனம் பேசுவார்கள், சமூக அக்கறையாக காட்டுவார்கள், நல்லது செய்வதுபோல் காட்டுவார்கள், அரசாங்கத்தை தட்டி கேட்பதுபோல் வீரமாக காண்பிப்பார்கள் ! ஆனால், நிஜ வாழ்க்கையில் இந்த சமூகத்தில் என்ன நடந்தாலும் , எந்த கண்டனமும் தெரிவிக்கமாட்டார்கள்! எந்த போராட்டத்திலும் கலந்துகொள்ளமாட்டார்கள்! இந்த சமூகத்துக்காக எதுவும் செய்யமாட்டார்கள்! எந்த அக்கறையும் இவர்களுக்கு இருக்காது! இவர்களைத்தான் இந்த சமுதாயம் தூக்கிவைத்து கொண்டாடுகிறது!
இந்த சமூகத்தில் உண்மையான ஹீரோக்கள் இருக்கிறார்கள்! அவர்கள்தான் இந்த சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு கஷ்ட்டம் என்றால் முதலில் ஓடிவந்து , உதவி செய்வது , உணவு கொடுப்பது , அவர்களின் உயிரைக்கூட துச்சமாக மதிக்காமல் சிரமப்பட்டு மருத்துவ உதவி செய்வது! இயற்க்கை பேரழிவு காலத்தில் ஓடிவந்து , உதவக்கூடியவர்கள் நிறைய தன்னார்வலர்கள் ! அவர்களை இந்த சமூகம் உடனே மறந்துவிடும்! இதுதான் இந்த சமூகத்தின் நன்றி உணர்வு !
ஒரு நடிகர் சினிமாவைவிட்டு விலகிறார் என்று செய்தி வந்தவுடன் , எத்துனைபேர்கள் அதற்காக கண்ணீர் வடிக்கிறார்கள் ! வேதனை படுகிறார்கள்! இந்த கேவலம் எல்லாம் இந்த இந்தியா நாட்டில் தான் நடக்கிறது!
இந்த இளைய சமுதாயம் இப்படியே போய்க்கொண்டுயிருந்தால் , நிச்சயமாக ஒருநாள் இந்த சமுதாயம் வாழ்க்கையில் பெரும் நஷ்ட்டத்தை சந்திக்கும் என்பது ஒரு துளிக்கூட சந்தேகம் இல்லை!
சில நடிகைகளை பின்தொடர்ந்துபோய் , அவர்களுடன் செலஃபீ எடுப்பது , அதை பெருமையாக நினைப்பது! அங்கே அவமரியாதை படுவது , அது அவர்களுக்கு எந்த வெட்க உணர்வையும் ஏற்படுத்தவில்லை ! அவ்வளவு மோகம் பிடித்து அலைகிறார்கள்!
சுயமரியாதை இழக்கும் ரசிகர்களே! உங்களுக்கு ஒரு அழகான குடும்பம் இருக்கிறது! அவர்களை முதலில் நேசியுங்கள்! உங்கள் பெற்றோர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்! உங்கள் தந்தை தான் உண்மையான ஹீரோ , அவர் தான் குடும்பத்தை சுமக்கும் சுமைதாங்கி! அவரைத்தான் நீங்கள் தலையில் வைத்து கொண்டாடக்கூடிய உரிமை உள்ளவர்! உங்கள் தாய் ! ஒரு குடும்ப தியாகி , நேசிக்கப்படவேண்டிய ஒரு அழகான ஜீவன்! அவரைத்தான் நீங்கள் தலையில் வைத்து கொண்டாடவேண்டும்! உங்களுக்கு ஒரு கஷ்ட்டம் என்றால் , அவர்கள் தான் உங்களுக்காக கண்ணீர் சிந்துபவர்கள், நேசத்தையும் , பாசத்தையும் கொடுப்பவர்கள்! சிந்திக்கமாட்டீர்களா ?
உங்கள் நேரத்தையும் , உங்கள் வாழ்க்கையும் இவர்களுக்காக அற்பணியுங்கள்! நேரத்தை செலவிடுங்கள்!
ஓடி ஓடி உழைக்கும் உங்கள் தந்தை ! உங்களுக்கு ஒரு ஹீரோவாக தெரியவில்லையா ? உங்களை வைத்து பிழைக்கும் நடிகர்கள் உங்களுக்கு ஹீரோவா ? அவர்கள் சிறந்தவர்களா ? அவர்களால் உங்களுக்கு எந்த பலனும் இல்லை ! உங்களால் அவர்களுக்கு நிறைய ஆதாயமும், பலனும் இருக்கிறது!
சினிமாவினால் யாரவது திருந்தி , மனம் வருந்தி நல்ல உபதேசம் பெற்றவர்கள் யாராவதை நீங்கள் சொல்லமுடியுமா ?
சினிமாவினால் சீரழிந்தவர்கள் நிறைய பேர்கள் எங்களால் பட்டியல் போடமுடியும்!
சினிமா ஒரு மாயை ! மனிதர்களை மயக்கும் , வாழ்க்கையை நாசமாக்கும் ஒரு கருவி! இதை புரிந்தால் இளைய சமுதாயத்துக்கு ஒரு மறுபிறவி!
இந்த பதிவில் இன்னும் நிறைய சினிமாவைப் பற்றி எதிர்மறையான , தீமையான விடயங்களை பதிவு செய்ய விரும்பினேன் ! அனால், பதிவு ஒரு நீண்ட பதிவாக ஆகிவிடும் என்ற அச்சத்தினால் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறேன்! படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில்!
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!