பிள்ளைகளுக்குப் பண்பாட்டுப் பயிற்சி அளித்தல்

 


பிள்ளைகளுக்குப் பண்பாட்டுப் பயிற்சி அளித்தல்


இந்தப் பூங்காவுக்குரிய பாதை நீளமானதும், சிரமம் மிகுந்ததுமாகும். ஆனாலும் அதில் அழகும் அலங்கா ரமும் இருக்கின்றன. இந்தப் பூங்காவின் பூமி பண்படுத் துவதற்குச் சிரமமானதுதான். என்றாலும் அதன் முடிவு சிறப்பானது; புகழுக்குரியது.


பிள்ளைகளுக்கு நற்குணம் எனும் நீரைப் பாய்ச்சி னால் அவர்கள் பசுமையான தளிர்களாகத் திகழ்வர்! பண்பாட்டுப் பயிற்சி அளித்து பராமரித்தால் அழகிய மலர்களாய் மலர்வர்! ஈமான் எனும் ஒளி பாய்ச்சி அவர் களைப் பிரகாசிக்கச் செய்தால் அவர்கள் வசந்த மாளிகைகளாவர்! அவர்களுக்கு நற்பயிற்சி அளிக்கும் பாதையில் பொறுமையை மேற்கொள்ளுங்கள். அவர் கடளிமிருந்து கண் குளிர்ச்சியையும், அகமகிழ்ச்சியையும் அடைவீர்கள்.



பிள்ளைகளில் ஒருவர் ஒரு முறை பெறும் வெற்றி, நீங்கள் அடைந்த பல கஷ்டங்களை மறக்கடித்து விடும் . ஓர் ஆண்டில் அவர்களின் வெற்றி, பல ஆண்டுகள் அவர்களுடன் நீங்கள் கண் விழித்திருந்ததை மறக்கச் செய்துவிடும். அவர்களின் சிறு வயதில் அவர்களால் நீங்கள் துன்பப்படுவது பற்றி பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து வரும்போது நற்பாக்கியம் அடைவீர்கள். ஆகையால் அவர்களுக்குத் தொ டர்ந்து பாடம் கற்றுக் கொடுங்கள்; அவர்களைச் சீர்தி ருத்தம் செய்யுங்கள். அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணுங்கள். அவர்களுடன் உள்ளத்தோடும் உயிரோடும் இருங்கள். அதற்கு இயலவில்லை எனில் உள்ளத்தில் அவர்களுக்குக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருங்கள். அவர்கள் உங்கள் தோள் மீது சுமத்தப்பட்ட அமானி தங்கள். அவற்றில் குறைபாடு செய்தீர்கள். "உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தத்தமது பொறுப்பு பற்றி உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்" என்று நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி 893)



இப்பூங்காவை பல வருடங்கள் நீர்ப்பாய்ச்சி பராம


ரித்து வந்தால் மலர்களும் கனிகளும் நிறைந்த வாழ்வை


உங்களுக்கு அது வழங்கும். இதற்காக நீங்கள் பல


வருடங்கள் பொறுமையை மேற்கொண்டால் இப்பூங்கா


உங்களுக்காக உங்களது உலகத்தை மகிழ்ச்சியால்


நிரப்பிவிடும். அப்போது உங்கள் பிள்ளைகளில் ஒருவர்


திறமையான பொறியாளராகவோ, கை தேர்ந்த மருத்து


வராகவோ, அறிவுசால் தொழிலாளராகவோ, திறமை


யான ஆசிரியராகவோ,இறையருள் பெற்ற மார்க்கப்


பிரச்சாரகராகவோ வரலாம். இத்தனைக்கும் மேல்


அவர்கள் உங்களுக்கு உபகாரம் செய்து உங்களை


மகிழ்விப்பார்கள். அவர்களின் சீர்திருத்தம் மற்றும்


உறுதிப்பாட்டின் மூலம் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.


இந்த அலங்காரத்திற்குப் பிறகு இவ்வுலகில் வேறு என்ன அலங்காரம் வேண்டும்?!இது அளவற்ற அருளாளனின் அடியார்களது பிரார்த்தனையின் நற்பலனாகும்.


மற்றும்


‎‫وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا ﴾ [الفرقان : ٧٤]‬‎



"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளி லிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச் சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!" என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25:74)


இந்த பண்பாட்டுப் பயிற்சி அளித்தலின் பூங்காவி லிருந்து, உங்களுக்காக உங்கள் பிள்ளைகள் பிரார்த் திக்கின்ற பலனையும் பெறுவீர்கள். உங்கள் மரணத் திற்குப் பிறகும் அந்தப் பலன் உங்களுக்குக் கிடைக்கும். ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:


‎‫(إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ جَصَةَيَةِينَ إِلَّا مَنْ وْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ)) (م/ ١٦٣١)‬‎


"நிலையான தர்மம்,பயன் தரும் கல்வி, தனக்காப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமான பிள்ளைகள் ஆகிய மூன்றையும் தவிர மற்ற செயல்பாடுகள் யாவும் மனிதன் மரணித்ததும் முடிவுக்கு வருகின்றன ." நூல் : முஸ்லிம் ௧௬௩௧


உங்கள் இறைவனின் உதவியால் சொர்க்கத்தில் உங்கள் அந்தஸ்து உயர்த்தப்படுவதன் மூலமும் இந்தப் பூங்காவின் பலனை அனுபவிப்பீர்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


‎‫عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّ حِ فِي الْجَنَّةِ فَيَقُولُ يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ فَيَقُولُ بِاسْتِغْفَارِ وَلَدَكَ (ح)‬‎


۱۰۲۰۲ ஆ



"சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு நல்லடியாருக்கு அவரது அந்தஸ்தை உர்த்துவான். அப்போது அவர், "என் இறைவா! இது எனக்கு எவ்வாறு கிடைத்தது?" என்று கேட்பார். அதற்கு அல்லாஹ், "இது உன் பிள்ளை உனக் காகப் பாவமன்னிப்பு தேடியதால் கிடைத்தது" என்று கூறு வான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: அஹ்மத் 10202, இப்னுமாஜா 3660 இந்த வாசகம் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்புத் தொடர் ஹஸன் எனும் தரத்தில் அமைந்ததாகும்.


பண்பாட்டுப் பயிற்சி நிறைந்த வீடும், பண்பாட்டுப் பயிற்சி நிறைந்த நிழலும் என்னே அழகானது!எனவே பிள்ளைகளுக்கு பண்பாட்டுப் பயிற்சி அளிப்பதில் தொ டர்ந்து ஈடுபடுங்கள். அழகான பலனை அறுவடை செய்வீர்கள்.

கருத்துகள்