ஒற்றுமை / அமானிதத்தைப் பேணல்

  


நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற் றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்துவிடாதீர்கள். (3:103)


] எனக்குப் பின்னால் குழப்பங்கள் தோன்றும். அப்போது யார் இச்சமுதாயத்தின் ஒற்றுமையைப் பிரிக்க நாடுகின்றா ரோ அவர் யாராக இருந்தாலும் அவரைக் கொன்று விடுங் கள். (நபிமொழி) அறிவிப்பவர்: அர்ஃபஜா (ரழி), முஸ்லிம்




நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு, உள்ளங்களை நடுங்கச் செய்து கண்களில் கண்ணீரை வரவழைக்கக்கூடிய சிறந்த போதனை செய்தார்கள். நாங்கள் கூறினோம்: 'அல்லாஹ் வின் தூதரே! இது விடைபெறுபவரின் போதனை போலுள் ளதே! எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்.' உடனே நபி (ஸல்)அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:


இறையச்சத்தையும், அபீஸீனிய அடிமை உங்களுக்கு தலைவராக இருந்தாலும் அவரின் சொல்லைக் கேட்டு கட் டுப்பட்டு நடப்பதையும் நான் உங்களுக்கு அறிவுறுத்துகி றேன் . இனிவாழ்பவர்கள் ஏராளமான கருத்து வேறுபாடுக ளை நிச்சயம் காண்பார்கள். அப்போது எனது வழிமுறை யையும் எனது வழிமுறையை தம் கடவாய்ப் பற்களால் பற் றிக் கொண்ட நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழிமுறை யையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (மார்க்கக்) காரி யங்களில் புதிதாக உருவாக்கப்பட்டதை விட்டும் உங்க ளை எச்சரிக்கின்றேன். நிச்சயமாக பித்அத்துகள் அனைத் தும் வழிகேடாகும். அறிவிப்பவர்: இர்பாழ் பின் ஸாரியா (ரழி) நூல்: அபூதாவூத், திர்மிதி (2815)


அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்பு கிறான். மூன்று விஷயங்களை வெறுக்கிறான். அவனையே நீங்கள் வணங்க வேண்டும் அவனுக்கு எதனையும் இணை வைக்கக்கூடாது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து அல்லாஹ் வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண் டும். உங்களுடைய காரியங்களுக்கு அல்லாஹ் யாரைப் பொறுப்பாக்கி இருக்கின்றானோ அவருக்கு நீங்கள் கட்டுப் பட வேண்டும் என்று அல்லாஹ் உங்களுக்கு விரும்புகி றான்.அவர் சொன்னார், இவர் சொன்னார், அப்படிச் சொல் லப்பட்டது, இப்படிச் சொல்லப்பட்டது என்று நீங்கள் கூறுவதையும், அதிகம் கேள்வி கேட்பதையும், பொருளை விர யம் செய்வதையும் அல்லாஹ் உங்களுக்கு வெறுக்கின் றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல் : முஸ்லிம்.


பயன்கள்:


1. அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று ஏவப்பட்டுள்ளது.


2. கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து செல்வது பற்றி கடுமை யாக தடை செய்யப்பட்டுள்ளது.


3. கருத்து வேறுபாடு தோன்றும் போது நபி (ஸல்)அவர்களு டைய வழிமுறையைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டு மென்று ஏவப்பட்டுள்ளது.


அமானிதத்தைப் பேணல்


நாம் இந்த அமானிதத்தை வானம், பூமி மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன் வைத்தபோது அவை அதனை ஏற்க மறுத்தன. மேலும் அதனைக் கண்டு அஞ்சின. ஆனாலும் மனிதன் அதனை ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின்றான். (33:72)


அமானிதங்களை அவற்றிற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடு கின்றான். (4:58)


ஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி வந்து கியாமத் நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது அறிவுரையைத் தொடர்ந்து கொண்டிருந்




தார்கள். இறுதியில் தமது பேச்சை முடித்ததும் கியாமத் நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே? எனக் கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் தான் எனக் கூறினார். நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர்நோக்கு என்று நபி (ஸல்) கூறினார்கள். உடனே அவர், அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்? என்று வினவ நபி (ஸல்) அவர்கள், தகுதியற்றவர்களிடம் ஒரு காரி யம் ஒப்படைக்கப்படும்போது அந்த நாளை எதிர் நோக்கு என்று விடையளித்தனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)


நூல்: புகாரி (59)


நபி (ஸல்) எங்களுக்கு உரையாற்றும் போது, நாணயமில்லா


தவனிடத்தில் ஈமான் இல்லை. ஒப்பந் தங்களைப் பேணா


தவனிடத்தில் மார்க்கம் இல்லை என்று சொல்லாமலிருப்


பது மிகக் குறைவு. அறிவிப்பவர்: அனஸ் (ரழி) - அஹ்மத்


பயன்கள்:


1. அமானிதம் மிக முக்கியமானது. அதைப் பேணும்படி கட்ட ளையிடப்பட்டுள்ளது.


2. அமானிதத்தைப் பேணிப் பாதுகாப்பது வெற்றி பெறக்கூடிய முஃமின்களின் பண்பாகும்.


8. அமானிதத்தை அதற்குரியவர்களிடம் ஒப்படைக்குமாறு ஏவப்பட்டுள்ளது.


4. அமானிதம் பேணாதவனிடம் ஈமானில்லை.

கருத்துகள்