புண்ணியங்களின் பூங்காவனம் நோக்கி நடப்பதற்கு ஐந்து அறிவுரைகள்
இவை சுருக்கமான அறிவுரைகள்! இவற்றின் மூலம் நீங்களும் உங்கள் நல்லறங்களும் அல்லாஹ்வின் உத வியால் வீணாகி விடாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
1. நீங்கள் செய்யும் நல்லறங்கள் மூலம் அல்லாஹ் வின் திருஉவப்பை நாடுங்கள். மேலும் அவற்றைச் செய் வதில் நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற் றுங்கள். ஏனெனில் இவ்விரண்டு நிபந்தனைகளைக் கொண்டுதான் ஒரு நற்செயல் சரியானதாக ஆகமுடியும். فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا )
"தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்ல றத்தைச் செய்யட்டும். தமது இறைவணக்கத்தில் எவரை யும் இணை கற்பிக்காது இருக்கட்டும்." (18:110)
2. நன்மையின் அழைப்புக்கு பதிலளிப்பதற்குத் தாம
புண்ணியங்களின் பூங்காவனம்
திக்காதீர்கள்! மாறாக நல்ல மனதுடனும், திருப்தியுட னும், சந்தோஷத்துடனும் அதற்கு விரைந்து செல்லுங் கள். ஏனெனில் இவ்வாறு விரைந்து செல்வது இறையச்
சத்தைச் சேர்ந்ததாகும்.
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَوَاتُ وَالْأَرْضُ لِلْمُتَّقِينَ ﴾ [آل عمران : ۱۳۳]
"உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப் பின் பாலும், வானங்கள், பூமி அளவுக்கு விசாலமான சொர்க்கத்தின் பாலும் விரையுங்கள். (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது." (3:133)
நன்மை செய்வது பற்றிய நூதனமான கதை ஒன்றைக் கேளுங்கள். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)அவர்கள் நஃபில் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அடிமை நாஃபிஃ என்பவர், அவர்களுடைய ஏதேனும் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அதனை எதிர்பார்த்து அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தார். நாஃபிஃ அவர்கள் மூத்த மார்க்க அறிஞர்களில் ஒருவர். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தொகுத்த முஅத்தா நூலின் அறிவிப்பாளர்களில் ஒருவர் என்பது எல்லோரும் அறிந்ததே! அவரிடம் காணப்பட்ட உயர்ந்த குணங்க ளுக்காக இப்னு உமர்(ரலி) அவர்கள் அவரை மிகவும் நேசித்தார்கள்.
இப்னு உமர்(ரலி) அவர்கள் தமது தொழுகையில் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போது "உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) நீங்கள் செலவழிக் காத வரை நன்மையை அடைந்து கொள்ள மாட்டீர்கள். மேலும் (இறைவழியில் நீங்கள் எதனைச் செலவழித் தாலும் அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக் கின்றான்."(3:92) எனும் வசனத்தை அடைந்ததும் இப்னு உமர்(ரலி) அவர்கள் தமது கையால் சைகை செய் தார்கள். ஆனால் ஏன் அவர்கள் சைகை செய்கிறார்கள் என்பது நாஃபி. அவர்களுக்குப் புரியவில்லை. அந்த வசனத்தை செயல்படுத்துவதற்கு அவர்கள் அதிக ஆர்வ முடையவர்களாக இருந்தார்கள் என்பது கூட அவர்க ளுக்குப் புரியவில்லை. எனவே எதற்காக சைகை செய் தார்கள் என்பது பற்றி விசாரிப்பதற்காக அவர்கள் தொழு கையிலிருந்து ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்தவாறு இருந்தர்கள்.
இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியதாவது: "நான் (அந்த வசனத்தை ஓதும்போது) என்னிடம் உள்ள அடிமைகளைப் பற்றி நான் சிந்தித்துப் பார்த்தேன். உம்மை விடப் எனக்குப் பிரியமானவர் யாரையும் நான் காணவில்லை. எனவேதான் தொழுகையில் இருந்து கொண்டே உம்மை விடுதலை செய்வதற்காக நான் சைகை செய்ய விரும்பினேன். தொழுகை முடிந்த பிறகு எனது மன நிலை என்னை மிகைத்து, அதனால் உம்மை விடுதலை செய்வதிலிருந்து நான் பின்வாங்கி விடக் கூடாது என்று அஞ்சியே அவ்வாறு சைகை செய்தேன்." உடனே நாஃபிஃ அவர்கள், "அப்படியென்றால் (நமக் கிடையே ) நட்பு நீடிப்பதை விரும்புகிறேன்" என்றார்கள். இப்னு உமர்(ரலி) அவர்கள் "அது உமக்கு உண்டு" என்று கூறினார்கள்.
3.நன்மை செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் உங் களுக்கு வழங்கினால் அதனை அழகுறச் செய்யுங்கள். அதற்கு நன்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:
"நன்மை செய்தோருக்கு நன்மையும் (அதை விட) அதிகமாகவும் உண்டு. அவர்களின் முகங்களில் இருளோ இழிவோ ஏற்படாது. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்." (10:26)
உங்களிடம் தேவைப்படுகிறாரே உங்கள் சகோதரர் அவரது நிலையில் உங்களை வைத்துப் பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் கூற்றையும் எண்ணிப் பாருங்கள்.
(( لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ)) (خ / ١٣ ٌ م) /
"தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும் பாத வரை உங்களில் யாரும் நம்பிக்கை கொண்டவராக ஆக முடியாது." (புகாரி 13, முஸ்லிம் ௪௫)
4. நீங்கள் செய்த நன்மையை உங்கள் மனதுக்கு கூறி பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள். நீங்கள் யாருக்கு நன்மை செய்தீர்களோ அவர்களிடம் அதைச் சொல்லிக் காட்டாதீர்கள். மேலும் மக்களில் யாரிடமும் அதைக் கூறிக் காட்டாதீர்கள். ஆனால் அவ்வாறு சொல்லிக் காட்டுவதில் நன்மை இருப்பதாக நீங்கள் கருதினாலே தவிர. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالمَنَّ وَالْأَذَ:ى ﴾ [الب]
"நம்பிக்கை கொண்டோரே! உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும் தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்." (2:264)
நீங்கள் செய்த நன்மைக்கான கூலி அல்லாஹ்விடத் தில் உங்களது தராசில் (நிறுவைக்காக) வைக்கப்பட்டு விட்டது; நீங்கள் யாருக்கு நன்மை செய்தீர்களோ அவர் அதனை மறுத்தாலும் சரியே என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
5. உங்களுக்கு நன்மை செய்தவருக்கு அழகிய வார்த்தையைக் கொண்டேனும் கைமாறு செய்யுங்கள். ஏனெனில் அது -அல்லாஹ்வுக்குப் பிறகு- நன்மை செய்ய وَلَا تَنْسَوُا الفَضْلَ بَيْنَكُمْ ﴾ [البقرة : ۲۳۷] . 210 "உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர் ) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள்." (2:237)
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!