சினிமாவால் பெருகும் குற்றங்கள்
சினிமா என்பது மனிதனின் மூளையை மழுங்கடித்து, சீரழித்து சின்னாபின்னமாக்குகிற ஒரு கருவியாகும். மனிதன் தவறு செய்வதற்கு வழிமுறைகளை சொல்லி தருவதற்கும், செய்த தவறை நியாயப்படுத்துவதற்கும், அதை மறைப்பதற்கும் பெரும் வழிகாட்டலாக சினிமா உள்ளது. சினிமாவின் மூலமாகவே ஏராளமான குற்றங்கள் மனித சமூகத்தில் பெருகியுள்ளது.
எதுவெல்லாம் பாரதூரமான குற்றங்களாக ஒரு காலத்தில் மக்கள் கருதினார்களோ அதையெல்லாம் எவ்வித சலனமும் இல்லாமல் செய்யத் தூண்டுவது சினிமாதான். கற்பழிப்பு, கடத்தல், கொலை போன்றவைகள் தற்போது உலகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சினிமாவை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் புறக்கணிக்கவேண்டும் . அசிங்கத்தையும் , ஆபாசத்தையும் விதைக்கும் இந்த கேடுகெட்ட சினிமாவை பார்ப்பதினால் நம் உள்ளம் சீர்கெட்டுபோகும் என்பதில் ஒரு துளிக்கூட ஐயம் இல்லை. இந்த உள்ளம் சீர்கெட்டு போனால் , உடல் முழுதும் சீர்கெட்டுபோகும் என்பது உறுதி !
முஸ்லிம்களே ! சிந்திக்கமாடீர்களா ?
வேண்டாம் ! வேண்டாம் !வேண்டாம் ! இந்த சினிமா .
இன்ஷாஅல்லாஹ் உறுதிமொழி எடுப்போம் ! மற்ற முஸ்லீம் சகோதரர்களுக்கும் /சகோதரிகளுக்கும்
எடுத்து சொல்வோம் !
இன்ஷாஅல்லாஹ் இன்றே இந்த சினிமாவை புறக்கணிப்போம் !

0 கருத்துகள்
Welcome to your comment!