பெண்களுக்கு சொத்தில் பங்கு இல்லையா !?
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
தமிழ் நாட்டில் வாழும் பெரும்பாலான முஸ்லீம் குடும்பங்களில் நடக்கும் இந்த சொத்து உரிமை பிரச்சனை (அல்லாஹ் பாதுகாத்தவர்களைத் தவிர ) சொத்து பிரிப்பதாக இருந்தால் , பெண்களுக்கு இரக்கப்பட்டு ஏதாவது பிச்சை போடுவது போல் குறைவாக கொடுப்பார்கள். அல்லது கொடுக்காமல் ,' கல்யாணத்தில் உனக்கு இவ்வளவு நகை போட்டோம். அவ்வளவு சீர் செய்தோம் என்று கூறி கைகழுவி விடுவார்கள். இஸ்லாத்தின் முறைப்படி சொத்து பிரிப்பது ரொம்ப அரிது. ஆணுக்கு இரண்டு பாகம் , பெண்ணுக்கு ஒரு பாகம் என்று சொத்து பிரிக்காமல் , அவர்கள் இஷ்ட்டத்துக்கு சாதகமாக சொத்துக்களை எழுதி கொள்வது. இஸ்லாத்துக்கு எதிரான செயல்முறை ! இது காலகாலமாக நடந்து வரும் பழக்கமுறைகள் . அல்லாஹ்வைப் பற்றி அச்சம் இல்லை , மறுமை பற்றி பயம் இல்லை . மார்க்கம் சட்டம் தெரியாமல் புரியாமல் இது தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்களின் மாறாத நிலை ! மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்வார்கள் என்பதை இப்பொழுதே சிந்த்தித்து , சீர்படுத்திக் கொள்ளவேண்டும் . கணக்கிட்டு இஸ்லாத்தின் முறைப்படி சொத்துக்களை பிரித்து 'இன்னாருக்கு இவ்வளவு என்று அல்லாஹ்வுக்கு பயந்து கொடுத்தால். இன்ஷாஅல்லாஹ் மறுமையில் இந்த விடயத்தில் தப்பித்து கொள்ளலாம் ...
மறுமையில் நன்மைகள் பங்கிட்டு கொடுக்கப்படும் . ஒரு நன்மைக்காக ஒருவொருக்கொருவர் அலைவார்கள் என்பதை , நாம் ஹதீஸின் மூலம் கேள்விப்படவில்லையா !?
சிந்தியுங்கள் ! இந்த காணொளியை கொஞ்சம் கேளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!