புகைப்படம் சொல்லும் பாடங்கள் !

 

சந்தோசம் , மகிழ்ச்சி அவரவர் மனோநிலையை பொறுத்தது.   'எனக்கு நிறைய வசதிகள் , பணம் எல்லாம் இருக்கிறது. ஆனால் மனதில் கொஞ்சம் கூட மனநிறைவு இல்லை . மகிழ்ச்சி இல்லை .  ஒரு ஏழை அவன் உழைக்கிறான் , தன்னுடைய குடும்பத்துக்கு செலவு செய்கிறான். அவர்களுடன் மனநிறைவான வாழ்க்கையை வாழ்கின்றான். மனநிறைவு இருந்தால் இன்ஷாஅல்லாஹ் எல்லாம் தேடி வரும்.


குறைவாக சம்பாதித்தாலும் , மனநிறைவான வாழ்க்கை வாழ்கின்றேன்.சந்தோசம் , மகிழ்ச்சி இருக்கிறது. பேராசை இல்லை . அப்படி வாழனும், இப்படி இருக்கணும் என்ற ஆசையும் இல்லை. மற்றவர்களை பார்த்து பொறாமை படுவதும் இல்லை. எனக்கு உள்ள வாழ்வாதாரம் . அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹ் கொடுத்ததை திருப்தியாக பொருந்தி கொண்டேன்.

என் மனதை மற்றவர்களின் பக்கம் அலையவிடுவதில்லை . அல்லாஹ்வின் கருணையால் என் மனதை கட்டுப்படுத்தி வாழ்கின்றேன். 



வாழ்க்கையில் தோல்வியாக இருந்தாலும் , அந்த தோல்விகள் எனக்கு பாடமாகவும் , ஒரு நல்ல படிப்பினையாகவும் எண்ணி. என் வாழ்க்கையை தோல்வியின் படிகளாக நினைத்து பயணித்து கொண்டுயிருக்கிறேன்.

தோல்விகளை சுமையாக நினைத்து தலையில் சுமந்து சென்றால் . யாரும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. முன்னேற்றம் என்பது இல்லாமல் போய்விடும் . 



நீங்கள் வயதாகும்போது உங்கள் பெற்றோர் உங்களுக்காக எவ்வளவு செய்தார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.


அவர்கள் உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அவர்களை ஒருபோதும் தனியாக விட்டுவிடாதீர்கள்.





நீங்கள் இளமையாக இருந்தபோது அவர்கள் உங்களை விட்டு வெளியேறவில்லை. எனவே, அவர்கள் வயதாகும்போது அவர்களை விட்டுவிடாதீர்கள்.




உங்கள் பெற்றோர் பணக்காரர்களாக இல்லாவிட்டாலும், உங்களுக்கு அழகான வாழ்க்கையைத் தருவார்கள்.


அவர்களின் தியாகத்தைப் பாராட்டுங்கள்.


உங்களால் முடிந்தவரை உங்கள் பெற்றோருடன் நேரத்தை செலவிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் பிஸியான வாழ்க்கையிலிருந்து ஒரு நாள் நீங்கள் பார்க்கும்போது, ​​அவர்கள் அங்கு இருக்க மாட்டார்கள்!



என் பெற்றோர்கள் எனக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கொடுத்தார்கள்: அவர்களின் நேரம், அவர்களின் கவனிப்பு மற்றும் அவர்களின் அன்பு.


நான் உயிருடன் இருக்கும் வரை, என் பெற்றோரை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்.




பெற்றோர்கள் தினம் வருடத்தில் ஒருமுறை தான் வருகிறது. ஒவ்வொருநாளும் பெற்றோர்களை தினமாக கொண்டாடவேண்டும். பெற்றோர்கள் விலைமதிக்கமுடியாத ஒரு சிறந்த பொக்கிஷம் ! 


பெற்றோர்கள் இருக்கும்போது கொண்டாடாத பிள்ளைகள் , அவர்கள் இறந்தபிறகு , பிள்ளைகள் நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள்.


இப்போ நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ அதை நாளை நீங்கள் அறுவடை செய்வீர்கள்.   


முடிவுரை:

பெற்றோர்களை கடமைக்காக கவனிக்காமல். கடமைக்காக அக்கறை செலுத்தாமல் , கடமைக்காக அன்பு செலுத்தாமல். அல்லாஹ் ஒருவனுக்காக , அவன் பொருத்தம் எனக்கு வேண்டும்.   பெற்றோர்கள் என் இரு கண்கள் !  அவர்கள் என்னை எப்படி பார்த்து கொண்டார்களோ , அதுபோல் நான் அவர்களை பார்த்துக்கொள்வேன்.

அல்ஹம்துலில்லாஹ் ! 

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள்