🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

இஸ்லாமிச் சட்டங்களும் ஒழுக்கங்களும்(கல்வி) நன்மையை ஏவி ,தீமையை தடுப்பது )

 


இஸ்லாமிச் சட்டங்களும் ஒழுக்கங்களும்(கல்வி) நன்மையை ஏவி  ,தீமையை தடுப்பது )


அல்லாஹ் கூறுகிறான்: கற்றவர்களும்,கல்லாதவர்களும் சமமாவார்களா? என (நபியே) நீர் கேட்பீராக (39:9).மேலும் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்து வான் (58:11). இன்னும் கூறுகிறான் "எனது நாயனே எனக்கு கல்வியை அதிகமாக்குவாயாக என (நபியே) நீர் கூறு வீராக! (20:114). இன்னும் கூறுகிறான் நிச்சயமாகஅல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு பயப்படுபவர்கள் அறிஞர்கள்தாம் (35:28). ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ் யாருக்கேனும் நன்மையை நாடியிருந் தால் அவரை மார்க்கத்தில் விளக்கமுடையவராக்கி விடுவான்..



இன்னும் ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் "யாரேனும் ஒருவர் கல்வியைக் கற்றுக் கொடுத்தால் அதைக் கொண்டு செயல்பட்டவரின் நன்மையும் அவருக்குக் கிடைக்கும் எனினும் செய்தவனின் கூலியில் எது வும் குறைக்கப்படமாட்டாது.. இன்னும் ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் ஆத மின் மகன் மரித்து விட்டால் மூன்று காரியங்களைத்தவிர வேறு எல்லாக்காரியங்களும் அவனைவிட்டும் நின்றுவிடுகிறது.(அவை) நிலையான தர்மம். பயனுள்ள கல்வி அவனுக்காகத் துஆச் செய் யும் நல்ல குழந்தை. மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்லுப்னு ஸஃது (ரலி) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் உன் மூலமாக ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது சிவந்த ஓட்டகங்களைவிட உனக்கு சிறந் ததாகும்.. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹிப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் "என் மூலமாக ஒரு செய்தி தெரிந்திருந்தாலும் அதை பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள்..



பயன்கள்:


1-இந்த ஆயத்துக்களிலும், ஹதீஸ்களிலும் கல்வியின் சிறப்பும். அறிஞர்களின் சிறப்பும் விளக்கப்பட்டிருக்கிறது. கல்வியைத் தேடுவது சுவர்க்கம் புகும் காரணங்களில் ஒன்றாக இருப்பது போல மார்க்கத்தில் விளக்கம் பெறுவது அல்லாஹ் அடி யானுக்கு நன்மையை நாடியிருப்பதின் மீது ஆதரமாக இருக்கிறது .


2-மக்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது, அவர்களுக்கு


நன்மையை அறிவித்துக் கொடுப்பது, கல்வியை எத்தி வைப்


பது இவை குறைவாயிருப்பினும் கூலி மகத்தானது. மேலும்


அவை மனிதன் மரித்த பின்னும் பயனளிக்கின்றன


3- கல்வியைத் தேடுவது உபரியான வணக்கங்களை விட மிகச்


சிறந்தது.


4 -குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பதில் அக்கறை இருப்பது .



நன்மையை ஏவுதல் தீமையைத் தடுத்தல்


அல்லாஹ் கூறுகிறான் மக்களுக்காகத் தோற்றுவிக் கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள்,தீமையைத் தடுக்கிறீர்கள், அல்லாஹ்வை நம்புகிறீர்கள் (3:110). மேலும் கூறுகிறான்:மேலும் (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல் லதை ஏவுபவர்களாகவும், தீமையைத் தடுப்பவர்களாகவும் உங்களில் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். அவர்களே வெற்றி பெற்றவர்கள் (3:104).


ரசூல்(ஸல்)அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி)அவர்கள் கூறினார்கள் "உங்களில் யாரே னும் தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கவும் அதற்கவர் சக்தி பெறவில்லையென்றால் அவர் தன் நாவால் தடுக்கவும் அதற்கும் அவர் சக்தி பெறவில்லையென்றால் தனது உள்ளத்தால் அவர் அதைத் தடுத்துக் கொள்ளவும். இது ஈமா னில் மிக பலவீனமானதாகும் (முஸ்லிம்). இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா(ரலி)அவர்கள் கூறினார்கள் எனது உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது ஆணைா யாக நிச்சயமாக நீங்கள் நன்மையை ஏவிக் கொண்டிருங்கள் தீமையைத் தடுத்துக் கொண்டிருங்கள். அவ்வாறு செய்யவில் லையானால் அல்லாஹ் நிச்சயமாக உங்களின் மீது அவனது வேதனையை விரைவில் இறக்கி வைப்பான். பிறகு நீங்கள் அவ னிடம் துஆச் செய்வீர்கள். உங்களுக்கு பதில் வழங்கப்படமாட் டாது (திர்மதி). ரசூல் (ஸல்) அவர் கள் சொல்ல நான் கேட் டுள்ளேனென அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்



"நிச்சயமாக மனிதர்கள் அநியாயக்காரனை அவனது இரு கை களைப் பிடித்து நிறுத்தவில்லையானால் அல்லாஹ் தன்னிட முள்ள வேதனையை பொதுவாக்கிவிடுகிறான் (அபூ தாவூத், திர்மதி. நஸாயி).


பயன்கள்:


1-நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது வெற்றிக்கு காரண


மாக இருக்கிறது.


2-யார் தீமையைக் காணுகிறாரோ அவர் தனது சக்தியின் அள


விற்கு அதைத் தடுப்பது கட்டாயமாகும்.


3-கையால் தடுப்பதென்பது அதற்கு உரிமை பெறுபவனுக்கா


கும். உதாரணமாக தந்தை தன் வீட்டில் தடுப்பது அல்லது


ஒரு அதிகாரி அல்லது அவனுக்கு பகரமாக உள்ளவன்


தனது அதிகாரத்தின் கீழுள்ளவர்களைத் தடுத்து நிறுத்துவது


போலாகும்.


4-உள்ளத்தால் தடுப்பதென்பது தீமையை வெறுப்பதும், அதிலி


ருந்து நீங்குவதும் கட்டாயமாகும்.


5-நன்மையை ஏவுவதையும், தீமையைத் தடுப்பதையும் விடு


வது அல்லாஹ்வின் தண்டனைக்கு காரணமாக இருப்பது


போல பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாமலிருப்பதற்கும் காரணமாக இருக்கிறது .

அல்லாஹ் மிக்க அறிந்தவன் .


கருத்துரையிடுக

0 கருத்துகள்