தலைப்பு : முன்மாதிரி முஸ்லிம் பெண்மனியின் தன்மைகள்.
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய உலமாக்களே! சமூக மக்களே! அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வுடைய அருளால், இந்த மார்க்க நிகழ்ச்சியில் உங்களை சந்தித்து, அல்லாஹ்வைப் பற்றியும், அல்லாஹ்வுடைய தீனை பற்றியும், மறுமையைப் பற்றியும், சில நல்ல விஷயங்களை பரிமாறிக் கொள்வதற்கு, அல்லாஹுதஆலா வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான். அல்ஹம்துலில்லாஹ்!
உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வது. கலந்து கொள்ளக் கூடிய ஒவ்வொருவருக்கும், அவர் பேசக் கூடியவராக இருந்தாலும் சரி, பேச்சை கேட்பவராக இருந்தாலும் சரி, மிகவும் பயனுள்ளது அவசியமானது.
காரணம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக அன்பு சகோதரிகளே! நம்முடைய இறை நம்பிக்கை ஈமான் அதிகமாகிறது, நம்முடைய தக்வா அதிகமாகிறது, நம்மைப்பற்றி நாம் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு, ஒரு தூண்டுதலாக, ஒரு உறுத்தலாக அது இருக்கிறது.
நாம் தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும், தெரிந்த விஷயங்களை நினைவு படுத்திக் கொள்வதற்கும், மார்க்கத்தில் நம் இடத்தில் இருக்கின்ற பலவீனத்தை உணர்வதற்கும், நம்மிடத்தில் இருக்கின்ற குறைகளை சரி செய்து கொள்வதற்கும், இது போன்ற மார்க்க உபதேச நிகழ்ச்சிகளிலே, கலந்து கொள்வது,
அன்பு சகோதரிகளே! மிக முக்கியமான ஒன்று. மிக அவசியமான ஒன்று. அல்லாஹ் விரும்பக்கூடிய சபை இந்த சபை என்பதை மறந்து விடாதீர்கள். அல்லாஹுதஆலா நேசிக்கக் கூடிய. அல்லாஹுதஆலாவின் விசேஷமான அருளும், அன்பும், மன்னிப்பும் கிடைக்கக் கூடிய சபை இப்பொழுது நாம் இருக்கக்கூடிய இந்த கண்ணியமான கல்வி சபை.
இதற்கு சமமாக, ஈடாக, உலகத்திலுள்ள எந்த செல்வமும், எந்த பதவியும், சமமாக ஈடாக ஆகவே முடியாது. அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா இதுபோன்ற சபைகளில், கலந்து பொறுமையாக இருக்க வேண்டும் என்று, தனது நபிக்கு கட்டளையிட்டிருக்கிறான்.
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا
மேலும், தங்கள் இறைவனை அவனுடைய முகத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் (அவனை தொழுது) பிரார்த்திப்பவர்களுடன் உம்மை தடுத்து (அமர) வைப்பீராக! இன்னும், உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்பியவராக அவர்களை விட்டு உம் இரு கண்களும் அகன்றிட வேண்டாம். இன்னும், எவனுடைய உள்ளத்தை நம் நினைவை மறந்ததாக ஆக்கிவிட்டோமோ அவனுக்குக் கீழ்ப்படிந்து விடாதீர்! அவன் தனது (கெட்ட) விருப்பத்தையே பின்பற்றினான். மேலும், அவனுடைய காரியம் எல்லை மீறியதாக (நாசமடைந்ததாக) ஆகிவிட்டது. (அல்குர்ஆன் 18 : 28)
சகோதரிகளே! அல்லாஹுதஆலா கூறுகிறான்: நம்முடைய நபியைப் பார்த்து (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்). நபியே! நீங்கள், உங்களை அடக்குங்கள், உங்களை கட்டுப்படுத்துங்கள். எந்த மக்கள் அல்லாஹ்வை காலையில் மாலையில் பிரார்த்தனை செய்கிறார்களோ, அல்லாஹ்வை வணங்குகிறார்களோ, அல்லாஹ்விடத்தில் துவா கேட்கிறார்களோ, அந்த மக்களோடு அமர்வதிலே. அவர்களோடு பழகுவதிலே. நீங்கள் உங்களை அடக்கி வையுங்கள். கட்டுப்படுத்தி வையுங்கள். அவர்களை விட்டு உங்கள் பார்வைகள் அங்குமிங்கும் திரும்பி விட வேண்டாம். உலக வாழ்க்கையின் மீது ஆசை ஏற்பட்டு, உங்களுடைய பார்வை திரும்பி விட வேண்டாம் என்று.
நம்முடைய நபி (ஸல்) கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்ட, அல்லாஹ்வுடைய தக்வா நிறைவாக கொடுக்கப்பட்ட, டாபிக் இந்த கட்டளை என்றான்.
சகோதரிகளே ஈமானில் பலவீனமாக இருக்கின்ற, தக்வாவிலே பலவீனமாக இருக்கின்ற, நம் போன்றவர்களுக்கு இந்த சபை எவ்வளவு முக்கியம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அன்பு சகோதரிகளே இன்று நம்முடைய உள்ளங்கள், ஈமானுடைய அந்த விஷயத்தில், தக்வாவுடைய இறையச்சத்தின் விஷயத்திலே, காய்ந்துப் போயிருக்கின்றன. அந்த ஈமானிய உணர்வுகளை நம்முடைய உள்ளங்களிலே, வற்றிப் போய் இருக்கின்றன.
அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா சொல்லக்கூடிய அளவுகோலை கொண்டு நம்முடைய ஈமானை நாம் பரிசோதனை செய்து பார்த்தால், நாம் கண்ணீரால் அல்ல ரத்தத்தால் அழக்கூடிய அந்த நிலையில் தான் இருப்போம். அல்லாஹுதஆலா சொல்கிறான்.
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ் நினைவு கூரப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; இன்னும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்; இன்னும், அவர்கள் தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்கள். (அல்குர்ஆன் 8 : 2)
முஃமின்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்ட மூஃமின்கள் யார் என்றால், அவர்களுக்கு முன்னால் அல்லாஹ்வைப் பற்றி பேசப்பட்டால். அல்லாஹ்வுடைய வல்லமையைப் பற்றி, அல்லாஹ் உடைய அந்த உயர்வைப் பற்றி, அல்லாஹ்வுடைய மகத்துவத்தைப் பற்றி, கண்ணியத்தைப் பற்றி, பேசப்பட்டால், அந்த முஃமீன்களுடைய உள்ளங்கள் நடுங்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
وَجِلَتْ قُلُوْبُهُمْ
பயம் கலந்த, அல்லாஹ்வின் மீது பாசம் கலந்த அந்த கண்ணியத்தோடு, அவனுடைய அந்த மதிப்பு, மரியாதையோடு கலந்த, நடுக்கம் உள்ளத்திலே ஏற்பட வேண்டும். என்று அல்லாஹ் சொல்கிறான்.
அவர்களுக்கு முன்னால், குர்ஆனுடைய வசனங்கள். ஒன்றன் பின் ஒன்றாக ஓதப்படும் போது, அந்த வசனங்களுக்கு ஏற்ப, அவர்களுடைய ஈமான் இறை நம்பிக்கை, அதிகரிக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்து இருப்பார்கள்.
அல்லாஹ்வை விட்டு தங்களுடைய கவனத்தை, தங்களுடைய சிந்தனையை, நம்பிக்கையை ஒரு போதும் அவர்கள் வேறொரு பக்கம் திருப்பி விட மாட்டார்கள். இத்தகையத் தன்மை இறைநம்பிக்கையாளர்கள் மூஃமின்கள் உடைய தன்மை என்று அல்லாஹ் சொல்கிறான். அன்பு சகோதரிகளே கொஞ்சம் சுய பரிசோதனை செய்து பார்ப்போம். இத்தகைய இறை நம்பிக்கை நம்மிடத்தில் இருக்கிறதா. இந்த இறை நம்பிக்கை உடைய முஃமீன்களாக நாம் இருக்கிறோமா?
ஒன்று இருக்கிறது நாம் நம்முடைய விருப்பபடி வாழ்வது. இன்னொன்று அல்லாஹ்வினுடைய விருப்பப்படி வாழ்வது. கவனமாக கவனியுங்கள். ஒரு வாழ்க்கை எப்படிப்பட்டது. நாம் விரும்பியபடி வாழ்வது, நமக்கு எதை பிடிக்கிறதோ அதை செய்வது, எதை பார்க்க பிடிக்கிறதோ அதை பார்ப்பது. எதைக் கேட்க பிடிக்கிறதோ அதை கேட்பது. எங்கே செல்ல விரும்புகிறோமோ, அங்கே செல்வது. இது ஒரு வாழ்க்கை.
சகோதரிகளே! இன்னொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கை அல்லாஹ்வுக்காக வாழக்கூடிய வாழ்க்கை. முஃமீன்களுடைய வாழ்க்கை. மறுமையை நம்பிக்கை கொண்டவர்கள் உடைய வாழ்க்கை. சொர்க்கத்தை நம்பிக்கை கொண்டவர்களுடைய வாழ்க்கை. மறுமையின் விசாரணையை நம்பிக்கை கொண்ட வாழ்க்கை. அல்லாஹ் சொல்கிறான் அல்லவா!
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
(நபியே) கூறுவீராக: “நிச்சயமாக நானெல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், (-நீங்கள் வணங்குவதற்கு தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுகிறது. ஆகவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை பயப்படுவாரோ அவர் நல்ல செயலைச் செய்யட்டும்! இன்னும், தன் இறைவனை வணங்குவதில் ஒருவரையும் (அவனுக்கு) இணையாக்க வேண்டாம்!” (அல்குர்ஆன் 18 : 110)
யார் தன்னுடைய இறைவனுக்கு முன்னால் நின்று, தன்னுடைய ரப்புக்கு முன்னால் நின்று. அவனை நாளை மறுமையில் சந்திக்க வேண்டும். அவனுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். என்ற பயம் உள்ளவனாக இருக்கிறானோ, அவன் நல்ல அமல்களை செய்யட்டும். தனது ரப்புக்கு இணை வைக்க வேண்டாம் என்று அல்லாஹ் வழிகாட்டுகிறான் அல்லவா. அந்த பயம் உள்ளவர்கள் மறுமையின் பயம் உள்ளவர்களின் வாழ்க்கை.
ஆஹிரத்தின் உடைய அந்த பயத்தோடு வாழக்கூடிய மூஃமின்களுடைய வாழ்க்கை. சகோதரிகளே இன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது. யோசித்துப் பாருங்கள். நம்மில் அதிகமானவர்களுக்கு, இந்த உலகத்திலே நாம் ஏன் வாழ்கிறோம், என்று வாழ்க்கையின் நோக்கமே தெரியாமல் இருக்கிறார்கள். எதற்காக வாழ்கிறோம். இந்த உலகம் நமக்கு எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் உடைய லட்சியம் என்ன. என்று நம்மிடத்தில் கேட்கப்பட்டால், பதில் தெரியாதவர்களாக நம்மிலே பலர் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்
Thanks: Muftiomar.com
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!