உண்மை சிறப்பானது பொய்
இகழுக்குரியது
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தான், மேலும் அவர்கள் தான் பொய்யர்கள் (16:105).மேலும் கூறுகிறான்: முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங் கள் மேலும் நீங்கள் உண்மையாளர்களுடன் இருங்கள் (9:119) மேலும் கூறுகிறான்: அவர்கள் அல்லாஹ்விடம் உண்மையாக நடந்திருப்பார்களானால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும் (47:21).
ஹஸனுப்னு அலி (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறினார்கள்: உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதை உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தாததின் பக்கம் விட்டு விடு. ஏனெனில் உண்மை நிம்மதியாகவும், பொய் கலக்கமாகவும் இருக்கிறது (திர்மதி).ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அப் துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக உண்மை நன்மையினளவில் வழி காட்டக் கூடியதாகவும் நிச்சய
மாக அந்த நன்மைச் சுவர்க்கத்தின் பால் வழி காட்டக் கூடிய தாகவுமிருக்கிறது. நிச்சயமாக ஒரு மனிதன் உண்மையைச் சொல்கிறான், அவன் உண்மையே சொல்ல முயற்சிக்கிறான், இறுதியில் அல்லாஹ்விடம் அவன் மிக்க உண்மையாளன் என்று எழுதப்படுகிறான். நிச்சயமாக பொய் பாவத்தின் பால் வழி காட்டுகிறது, நிச்சயமாக அப்பாவம் நரகின் பால் வழி காட்டு கிறது. நிச்சயமாக ஒரு மனிதன் பொய் சொல்கிறான். அவன் பொய் சொல்லவே முயற்சிக்கிறான், இறுதியில் மிகப் பெரும் பொய்யனென அல்லாஹ்விடம் எழுதப்படுகிறான்.தபி (ஸல்) அவர் கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான்கு காரியங்கள் எவனிடமுள்ளதோ அவன் கலப் பற்ற நயவஞ்சகன் அவற்றில் ஏதேனும் ஒன்று அவனிடத்திலி ருந்தால் அதை அவன் விடும் வரை நயவஞ்சகத்தின் அத் தன்மை அவனிடத்திலிருக்கும். அவை: அவன் நம்பப்பட்டால் நம்பிக்கைத் துரோகம் செய்வான்,பேசினால் பொய்யுரைப்பான். உடன் படிக்கை செய்தால் அதை முறித்து விடுவான், விவாதித் தால் பாவம் செய்வான்.
பயன்கள்
1-பொய் சொல்வது பற்றிய எச்சரிக்கை. நிச்சயமாக அது
நயவஞ்சகர்களின் தன்மைகளிலுள்ளது. மக்களிடையே பொய்யைப் பரப்புபவன் கடின தண்டனைக்குரியவன். 2-நிச்சயமாக பொய் நரகத்தில் நுழைவதற்குரிய காரணங்களி
லுள்ளதாகயிருப்பது போல அது பாவத்தின் பால் இழுத்துச் செல்லக்கூடியதாகவும் இருக்கிறது.
2-உண்மையின் சிறப்பு விவரிக்கப்பட்டுள்ளது.மேலும் எல்லாக் காரியங்களிலும் அதன் மீது ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
4-நிச்சயமாக பொய் நயவஞ்சகத்தின் அடையாளங்களில் ஒரு அடையாளமாகும்.
தவ்பா (பாவ மீட்சி பெறுதல்)
அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! நீங்கள் அனை வரும் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப் புக் கோருங்கள் (24:31).மேலும் கூறுகிறான்: ஈமான் கொண்டவர் களே! தூய்மையான நிலையில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேளுங்கள் (66:8).
அகர்ருப்னுல் யஸார் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர் கள் கூறியதாகக் கூறினார்கள்: மனிதர்களே அல்லாஹ்விடம் பாவ மீட்சி பெறுங்கள் அவனிடமே பாவ மன்னிப்புத் தேடுங்கள். நிச்ச யமாக நான் ஒவ்வொரு நாளும் நூறுமுறை பாவ மன்னிப்புத் தேடுகிறேன். ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவன் தனது ஒட்டகத் தைக் காட்டு வனாந்திரத்தில் தவறவிட்டுவிட்டான் பின்னர் அதனைத் (தேடி)க் கண்டுபிடித்துவிட்டான். அந்நிலையில் அவன் அடைகின்ற மகிழ்ச்சியைவிட அதிக அளவிற்கு ஒரு அடியான் பாவ மன்னிப்புக் கோரும்போது இறைவன் மகிழ்ச்சி அடைகிறான். ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார் கள்:ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர் களே. தவறு செய்யக்கூடியவர்களில் மிகச் சிறந்தவர்கள் பாவ மன்னிப்புத் தேடுபவர்களே. ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் இப்னுல்கத்தாப் (ரலி) அவர் கள் கூறினார்கள்: அடியான் கர்,கர் என இழுக்கும் நிலையை அடையாமலிருக்கும் வரை நிச்சயமாக அல்லாஹ் அவனது தவ் பாவை ஏற்றுக் கொள்கிறான். (கர்,கர் நிலையை அடைவதென் பது உயிர் தொண்டைக் குழியை அடைவதாகும்). நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மூஸல் அஷ்அரி (ரலி) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக பகலில் பாவம் செய்தவன் மன்னிப்புக் கேட்பதற்காக அல்லாஹ் இரவில் தன் கையை விரித்து வைக் கிறான். இரவில் பாவம் செய்தவன் மன்னிப்புக் கோருவதற்காக பகலில் தன் கையை விரித்து வைக்கிறான் இது சூரியன் மேற் கில் உதிக்கும் வரையாகும்
பயன்கள்
1-எல்லா நேரத்திலும் தவ்பாச் செய்வது கட்டாயமாகும். தவ்பாச் செய்வது அடியார்களின் வெற்றிக்கும், ஈடேற்றத்திற்கும் காரண மாக இருப்பது போல எவ்வளவு பெரிய பாவமாகயிருந்தாலும் தவ்பாச் செய்வது கூடும்.
2- அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவது சிறந்தது. நிச்சய மாக அல்லாஹ் தவ்பாச் செய்பவனைப் பற்றி சந்தோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் அருளும்,உபகாரமும் விசால மானது.
3-தவறு செய்வது ஆதமின் மகனுக்கு இயற்கையானதாகும். எனினும் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவது அவனுக்குக் கட்டாயமாகும்.
தவ்பாவின் நிபந்தனைகளும் அதன் சில சட்டங்களும்
1-உயிர் தொண்டைக் குழியை அடைந்து, மரணம் வருவ தற்கு முன் தவ்பாச் செய்வது.
2-சூரியன் மேற்கிலிருந்து புறப்படுமுன் தவ்பாச் செய்வது. அப்படிப் புறப்பட்டுவிட்டால் தவ்பாச் செய்வது பயனளிக்காது.
3-ஒருவன் பாவத்தைவிட்டும் உண்மையாகவே தவ்பாச் செய்த பின் அந்தப் பாவத்தை மீண்டும் செய்தால் நிச்சயாமாக அவ னது முந்திய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படும். எனினும் மீண்டும் செய்த பாவத்திலிருந்து மீண்டும் ஒரு முறை தவ்பாச் செய் வது அவசியமாகும்.
4- பாவத்தை விடுவது சென்று விட்ட பாவத்தின் மீது வருந் துவது, அதை மீண்டும் செய்யாமலிருக்க உறுதி கொள்வது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!