பெண்கள் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான வழிகள்:

 


பெண்கள் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான வழிகள்:


இந்த ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் பெண்கள் துஷ்பிரயோ கங்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் பெண்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும். ஆடிஅசையும் உடல் அங்கங்கள், அதன் பரிமானங்கள் வெளியே தெரியும் விதத்தில் ஆடைகள் அணிவதால்தான் கற்பழிப்புக்கும், துஷ்பிரயோ கத்திற்கும் ஆளாகுகிறார்கள். அண்மையில் டில்லியில் நடந்த கற்பழிவு சம்பமும் இதன் பின்னணியில் தான் பகிரங்கமாக பேசப்பட்டது என்பதை யாவரும் அறி வோம்.


சிலபெண்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போது உட்கார்ந்து கொண்டி ருக்கும் வேளையில் நெஞ்சுப்பகுதியை கையினால் அல்லது நீண்ட கூந்தலினால் மறைத்துக் கொள்கிறார்கள். காரணம் நின்று கொண்டிருக்கும் ஆண்களின் கடக்கண் பார்வைக்குத் தெரிந்துவிடாமல் தடுப்பதற்காகும்.


மேலும் பெண்கள் ரீசேட், ரவுஸர், குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு வீதியில் போகும்போது அவர்கள் அவஸ்த்தைப்படுகிறார்கள். அவர்கள் குணிந்து ஒரு வேலையைச்செய்ய முடியாது குணிந்தால்.... நிலமை விபரீதமாகிவிடும் என்று அவர்களுக்குத் தெரியும்.காரியாலயங்களில் பெண்கள் அதிக துஷ்பிரயோ கங்களுக்கு ஆளாகுவதற்கு அவர்களின் ஆடைகளே காரணமாகும். ஆண்களுக்கு நீண்ட காட்சட்டை அணிவதற்கு அனுமதிப்பவர்கள் பெண்களுக்கு குட்டைப் பாவாடையை ஏன் திணிக்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.


ஆட்டை வேட்டையாட ஓனாய் காத்திருப்பது போல் பெண்களை வேட்டை யாட ஆண்கள் சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, பெண்கள் தங்களது உடை நடைகளை மாற்றினால் தான் துஷ்பிரயோகங்களை நிறுத்திவிட முடியும்.


சிறுவர், பெண்கள் பாதுகாப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி, சப்இன்ஸ்


பெக்டர் திரு.மனோஜ் அவர்கள் கூறும்போது, பெண்கள் துஷ்பிரயோ கங்களை


நிறுத்த வேண்டுமானால் அவர்கள் அவர்களது ஆடைக்குறைப்பைத் தவிர்த்துக்


கொள்ள வேண்டும். முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களது


உடம்பை முழுமையாக மறைத்துக்கொண்டு போகிறார்கள் என்றார் மனநிலை மருத்துவர் நளினி மோகன் தாஸ் கூறுகையில், பெண்களே உங்கள் உடல் அமைப் புக்கு ஏற்றமாதிரி உடை உடுத்துங்கள் 'மாடர்ன் டிரஸ்' என்ற பெயரில் ஆண்களின் பாலுணர்ச் சியைத் தூண்டும் விதத்தில் போடாதீர்கள். உங்கள் ஆடை மற்றவர்களின் கண்களை ஊடுருவும் அளவுக்கு மெல்லியதாகி விடக்கூடாது என்றார். (தினமலர்)


ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டெனிகன் பெரேரா அவர்கள் கூறுகையில்ளூ பாலியல் துஷ்பிரயோ கங்களுக்குப் பெண்கள் உள்ளாக் கப்படுவதற்கு பெரும்பாலும் ஆடைகளே காரணமாக இருக்கலாம். அணியக் கூடிய ஆடைகள் உடல் அங்கங்களை மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.


அங்கங்களை காட்டக்கூடிய ஆடைகள் அணியும்போது தவறான எண்ணம் உள்ளவர் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தக்கூடும். பெண்களின் ஆடைகள் முறை யாக இருப்பது மிகவும் அத்தியாவசியமானதாகும் என்றார் ( நன்றி:சிறிகத பத்திரிகை)


பெண்களின் கற்புக்குப்பாதகமாக அமைவது, அவர்களது அரைகுறை ஆடை களே காரணம் என்பதை எல்லோரும் கூறுகிறார்கள். பெண்களும் ஏற்றுக் கொள் கிறார்கள்.


அதுமட்டுமல்ல, வீடுகளில், பாடசாலைகளில் பெண்கள் மேலதிகாரி களால், ஆசிரியர், அதிபர்களால், மாமன்மார்களால் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகுகிறார் கள். அதற்கும் இந்த ஆடைக் குறைப்பே காரணம்.


இந்த ஆடைக்குறைப்பைத் தவிர்த்துக் கொள்வது போல்,


✓ஆண்களுடன் தனிமையில் பேசுவது, சந்திப்பது, பயணிப்பதைத் தவிர்த்தல்.


வீட்டில் தனிமையில் இருப்பதைத் தவிர்த்தல்.


தனிமையில் இருப்பதாக மற்றவர்களுக்குத் தெரிவிப்பதைத் தவிர்த்தல்.


இளம் பெண்களை, சிறுமிகளை தனிமையில் வீட்டில் விட்டுவிட்டுச் செல் வதைத் தவிர்த்தல்.


இரவு நேரங்களில் பயணங்களைத் தவிர்த்தல் மற்றும் வீட்டுக்கதவுகளை, ஜன்னல்களை மூடிக்கொள்ளல்.


வீடுதேடிவரும் வியாபாரிகளிடம், பால்காரனிடம், குப்பைகளை எடுத்துச் செல்பவனிடம் அதிகம் பேசுவதைத் தவிர்த்தல்.


✓அதிகாரிகளிடம் அன்பளிப்புக்களைப் பெறுதல் அவர்களைத் தனிமையில் சந்தித்தல் நெருங்கி இருத்தல் என்பதைத் தவிர்த்தல்.


போன்ற காரியங்களைத் தவிர்ப்பதன் மூலமும், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.


உலக நடைமுறையில் இவ்வாறான அறிவுறுத்தல்கள்தான் பெண் களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனாலும், இவ்வறிவுறுத்தல்களால் பாரிய மாற்றம் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.


மக்கள் இந்த அறிவுறுத்தல்களை மானசீகமாக ஏற்று பின்பற்றத் தயாராக வுமில்லை. பெண்களது உடல் வடிவமைப்பை அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து ஆடைகள் வரும் போது, ஊடகங்கள் செயற்படும் போது இதனைத் தடுக்க முடியாது.


பெண்கள் நவநாகரீகத்தின் மோகத்தால் அலைந்து திரியும் போது உடல் உள பரிமானங்களைக் காட்சிப் பொருளாகக் காண்பிக்கின்ற போதும் இதனைத் தடுக்க முடியாது.


எனவே, உலகிலுள்ள பல மதத்தவர்களும் எவ்வளவுதான் போதனை செய்தாலும் இதனைத் தடுக்க முடியவில்லை என்றால் அந்தப் போதனை மக்களின் நடத்தைகளை மாற்றக்கூடியதாக அவர்களது உள்மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை என்பதே உண்மை. அது மட்டுமன்றி இப்போதனை களைச் செயற்படுத்தா விட்டால் கடவுளின் கோபத்திற்கும், தண்டனைக்கும் ஆளாக வேண்டிவரும் என்ற பயம் இல்லாதது மாகும். என்னை வழிநடாத்த, கண்காணிக்க ஒரு சக்தி இல்லை. என்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி விசாரிக்க ஒரு சக்தி (கடவுள்) இல்லை என்று மனிதன் நம்பும் போது அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. அவனால் மனித சமூகத்திற்குத் தேவை யான ஆரோக்கிய மான சூழலை ஏற்படுத்த முடியாது. சீரழிவற்ற தனிமனித, குடும்ப, சமூகவாழ்வைக் கொண்டு வரவும் முடியாது. எல்லாத் துறைகளும் வீழ்ச்சியடைந்தேபோகும். அதன் ஓர் அங்கமாகவே பெண்கள் துஷ்பிரயோகம் இடம் பெற்று வருகிறது.


இஸ்லாம் கூறும் தீர்ப்பு :


இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் அல்லாஹ்வை நம்புதல், மறுமை வாழ்வை நம்புதல் முஹம்மது(ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் என்பது முக்கிய மானதாகும்.


ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, இவ்வுலகில் வாழ்ந்து மரணித்த பின் மறுமையில் அவன் அல்லாஹ்விடத்தில் அவனது செயற்பாடுகள் குறித்து பதிலளித்தாக வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவன். எனவே, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப் பிரகாரம் ஒவ்வொரு ஆண் பெண் முஸ்லிமும் வாழ்ந்தாக வேண்டும். அதனடிப்படையில் முஸ்லிம்கள் செயலாற்று கிறார்கள்.


இந்தச் செயற்பாட்டில் பிரதான அம்சம் தான் முஸ்லிம் பெண்கள் 'பர்தா' எனும் ஆடையைக் கடைப்பிடித்தல் என்பதாகும். தன்னுடைய உடல் அங்கங்களை முழுமையாக மறைத்தே ஆகவேண்டும். அன்னிய ஆண்களின் பார்வைக்கு இலக்காகும் விதத்தில் அவள் நடக்கக் கூடாதுள குடைந்து பேசக் கூடாதுள் தனிமையில் அன்னிய ஆண்களுடன் இருக்கக் கூடாதுளு பிரயாணம் பண்ணக்கூடாது என்பது கட்டளையாகும்.தன்னுடைய கணவனுக்குத்தவிர மற்ற வர்களுக்கு அவள் காட்சிப் பொருளாகக் கூடாது என்பதை இஸ்லாம் கண்டிப்பாக வலியுறுத்துகிறது.


இறைவனதும் இறைத்தூதரதும் இக்கட்டளைகளை முஸ்லிம் பெண்கள் பேணுவ தாலேயே பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுவதை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டு வருகிறார்கள். நடுநிலை சிந்தனையாளர்கள் இதனை இன்று ஏற்றுக்கொள்கிறார்கள்.


அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான். 'ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கஸ்தலங்களை மறைக்கும் ஆடையையும் அலங்காரத் தையும் உங்களுக்கு அருளியுள் ளோம். இறை அச்சம் எனும் ஆடையே மிகச் சிறந்தது. அவர்கள்(மக்கள்) சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.'


‎‫يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمۡ وَرِيشًا وَلِبِينَ ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ يَا بَنِي آدَمَ لَّمُنُكَ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِبَاسَهُمَا لِبَاسَهُمَا سَوْآتِهِمَا إِنَّهُ يَرَاكُمۡ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّهُمْ إِنَّهُ الَّيَعَلْ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ }‬‎


[அல்ஸராஃப்: 26, 27


'ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் (ஆதம், ஹவ்வா) இருவ ரையும்


ஷைத்தான் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் சோதனைக்குள்ளாகி விடவேண்டாம். அவர்கள் வெட்கஸ்தலங்களை அவர் களுக்குக் காண்பிக்க ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் காணாத வகையில் அவனும் அவன் கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள். நம்பிக்கை கொள்ளதவர்களுக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக ஆக்கி விட்டோம்.'


(7:26,27)


‎‫قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَٲْ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْفنَ مِنْ أَبْصَارَيْحَنَّ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا [النور: 30‬‎


31]


'நபியே, விசுவாசமுள்ள ஆண்களுக்கு நீர் கூறும், அவர்கள் தங்கள் பார்வை களை கீழ் நோக்கியே வைக்கவும், தங்கள் கற்பையும் இரட்சித்துக் கொள்ள வும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான்.'


'நபியே, விசுவாசமுள்ள பெண்களுக்கும் நீர் கூறும், அவர்களும் தங்கள் பார்வைகளை கீழ் நோக்கி வைத்துத் தங்கள் கற்பையும் இரட்சித்துக் கொள்ளவும். அன்றி (தங்கள் தேகத்தில்) வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர தங்கள் அழகையும், அலங்காரத்தையும் வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும்ளூ தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். (24:30,31)


‎‫يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلۡنِينَ عَلۡنِينَ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا‬‎


‎‫يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا } [الأحزاب: 59‬‎


'நபியே! நீர் உம்மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்ட வர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றா னைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.(33:59)


கற்பைப் பற்றி பேசும்போது உலகில் பெண்களுக்குத்தான் வலியுறுத்திக் கூறுவார்கள். எல்லா மதங்களிலும், கோட்பாடுகளிலும் இந்நிலையை நாம் பார்க் கிறோம். ஆனால், இஸ்லாத்தில் ஆண்களுக்குத்தான் முதன் முதலில் கற்பைப் பற்றி வலியுறுத்திப் போதிக்கப்படுகிறது. கற்பு என்பது பொதுவானது. இருவரும் கற்பைப்பேணிப் பாதுகாத்தாக வேண்டும் என்று கற்புக்கு இலக்கணம் கூறுகிற மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான்!


ஆண்கள் முறையாக தங்கள் கற்பைப் பேணிக்கொண்டால், தங்கள் பார்வை களை கீழ் நோக்கிக்கொண்டால், பெண்களின் கற்புக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். பெண்கள் துஷ்பிரயோகங்களை உருவாக்கும் காரணிகளைத் தடுத்து பெண்கள் அச்சமற்று நடக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.


ஆண்களுக்கு போதனை செய்த பின்பு தான் பெண்களுக்கு கற்பின் புனிதத் துவம் பற்றிப் போதிக்கிறது.


பெண்களின் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய போதனையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இன்றைய உல கிற்கு அவசரமாகத் தேவைப்படும் போதனை இது.


‎‫2047/4( صحيح مسلم(‬‎


'(ஒருஆண் செய்யும்) இரு கண்களின் விபச்சாரம் அன்னிய பெண்ணைப் பார்த்தல், இருகாதுகளின் விபச்சாரம் அவள் பேசுதை கேட்டல் நாவின் விபச்சாரம் - அவளுடன் பேசுதல், கையின் விபச்சாரம் அவளைப் பிடித்தல், காலின் விபச்சாரம் (அவளைத்தேடி) நடத்தல், மர்மஸ்தானங்கள் இவை களை உண்மைப்படுத்துகின்றன. அல்லது பொய்யாக் குகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல் : முஸ்லிம்)


‎‫(صحيح مسلم (978/2‬‎


‎‎‫

உங்களில் ஒருவர் பெண்ணுடன், அவளுடைய திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட உறவினர் இருந்தாலேயன்றி தனித்திருக்க வேண்டாம் உங்களில் ஒருவர் பெண்ணுடன், அவளுடைய திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட உறவினர் இருந்தாலேயன்றி பயணிக்க வேண்டாம் என முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)


‎‫(صحيح مسلم (266/1‬‎

‬‎


ஒரு ஆண் மற்றொரு ஆணின் மறைவிடத்தைப் பார்க்கவேண்டாம். ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மறைவிடத்தைப்பார்க்கவேண்டாம். ஓர் ஆண் மற்றொரு ஆணுடன் ஒரே ஆடையில் சேர்ந்திருக்க வேண்டாம். ஒருபெண் மற்றோரு பெண் ணுடன் ஒரே ஆடையில் சேர்ந்திருக்க வேண்டாம் என நபி(ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்முஸ்லிம்.


‎‫(صحيح البخاري (377)‬‎

‬‎


பெண்களிடம் நீங்கள் செல்வதற்கு உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். கணவனின் சகோதரர் (அப்பெண்ணிடம்) செல்லலாமா என்று மதீனாவாசிகளில் ஒருவர் கேட்டார். கணவனின் சகோதரர்; மரணம் (போன்று தான்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி) (நூல்: புகாரி முஸ்லிம்)


‎‫1680/3( صحيح مسلم(‬‎


'சில பெண்கள் ஆடைகள் அணிந்தும், நிர்வாணமாகவும், ஆண்களைச் சுண்டி இழுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்களது தலை முடி ஒட்டகத்தின் திமில் போன்று இருக்கும். (இப்படியான ஒரு கூட்டம் இனி தோன்று வார்கள்) இவர்களை நான் பார்த்ததில்லை. இவர்கள் நரகவாதிகளாக இருப்பார்கள் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ( நூல் : முஸ்லிம்)


பெண்ணின் பாதுகாப்புக் குறித்து இது போன்ற ஒரு போதனையை எந்த வொரு தலைவரும் ஆன்மீகவாதியும் கூறியதில்லை.


முஸ்லிமான ஆண்கள் பெண்கள் தங்களது ஆடைகளைப் பேணுவதோடு, கற்பையும் பாதுகாத்து ஒழுக்கத்துடன் நடக்கவேண்டும் என்ற எச்சரிக்கை இந்த பொன் மொழியில் உணர்த்தப்பட்டுள்ளது போலவே முறைதவறி நடக்கும் பெண்கள் நரகத்திற்குரியவர்களாக இருப்பார்கள் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள். நபிகளார் அவர்கள் கூறிய அந்தக்காலம் இன்று வந்து விட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது.


பெண்கள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான ஒரு சிறந்த போதனை யை இஸ்லாம் வழங்கியுள்ளது. கற்பழிப்பு, கற்பழிக்க முயற்சித்தல் என்ற துஷ்பிர யோகங்களுக்கான தண்டனையாக மரணதண்டனையை இஸ்லாம் வலியுறுத்து கின்றது.


இவைகள் கடைப்பிடிக்கப்படும் போது பெண்களுக்கெதிரான துஷ்பிரயோ கங்கள் தாணாக இல்லாமலாகிவிடும்.

கருத்துகள்