அல்குர் ஆனை ஓதுவதும் அதன்படி செயல்படுவதும்.




அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பும், அதன் படி செயல்படுவதன் சிறப்பும் பற்றி வந்துள்ள நபி மொழிகள்:




நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அமர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "மறுமையில் குர்ஆன் உடையவருக்கு இவ்வாறு கூறப்படும். நீர் ஓதுவீரா க1 அந்தஸ்தில் உயர்ந்து செல்வீராக! மேலும் குர்ஆனைத் தெளிவாகவும்,நிறுத்தி,நிறுத்தியும் ஓதுவீராக.உலகத்தில் நீர் ஓதி வந்தது போன்று! நீர் ஓதுகின்ற வசனத்தின் கடைசியிலே உமது அந்தஸ்து உள்ளது." ) திர்மிதி 5:163)


இந்நபி மொழிக்கு விளக்கம் கூறும் போது முபாரக்பூரி அவர்கள் கூறுகின்றார்கள்: திருமறையை ஓதி அதன் وانا செயல்படுவோருக்கு சுவனம் நுழையும் போது இவ்வாறு கூறப்படும். "தரஜா" என்றால் சுவனத்தில் உள்ள அந்தஸ்துகளில் உயர்ந்து செல்வீராக! என்பதாகும். (துஹ்பதுல் அஹ்வதீ: 8:232)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் கூறியதாக ஆஇஷா (றழி) அவர்கள் அறிவிக் கின்றார்கள்: "திறமையுடன் திருமறையை ஓதுபவர் சங்கைமிக்க நல்லோர்களான வானவரர்களுடன் இருக்கிறார். சிறமத்துடன் திக்கி திக்கி ஓதுபவருக் கு இரு கூலிகள் உண்டு." (புகாரி 8:691 முஸ்லிம் 1:550). இமாம் புகாரியிடம் திறமை என்பதற்குப் பதிலாக குர்ஆனை மனனமிட்டவர் என்று வந்துள் ளது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் கூறியதாக அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "மறுமையில் குர்ஆனை ஓதி அதன் படி செயல்பட்டவர் வருவார். அவ்வேளை குர்ஆன் இறைவனிடம் கூறும். இறைவா அவருக்கு எதனையும் அணிவித்து கண்ணியப்படுத்துவாயாக! அப்போது அவருக்கு சங்கைக் கிரீடம் அணிவிக்கப்ப டும். இறைவா அவருக்கு மேலும் அணிவிப்பாயாக! என்று பின்பு குர்ஆன் கூறும். அப்போது அவருக்கு கௌரவ ஆடை அணிவிக்கப்படும். இறைவா அவரைப் பொருந்திக் கொள்வாயாக! என்று பின்னர் கூறும். அப்போது நீர் ஓதுவீராக! படித்தரங்களில் நீர் உயர்ந்து செல்வீராக என்று அவருக்குக் கூறப்படும். ஒவ்வொரு வசனத்துக்கும் ஒரு நன்மை அதிகரிக்கப்படும்." (திர்மிதி 5:163) சுவன


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் கூறியதாக ஜாபிர் (றழி) அவர்கள் அறிவிக்கின் றார்கள்: "அல்குர்ஆன் பரிந்து பேசும். மேலும் வாதிடும். அதன் வாதம் உண்மைப்படுத்தப்படும். அல்குர்ஆன் யாரை முன் வைக்கின்றதோ அவரை சுவனத்துக்கு அழைத்துச் செல்லும். யாரை அதன் பின்னால் வைக்கிறதோ அவரை நரகத்துக்கு அழைத்துச் செல்லும்." (இப்னு ஹிப்பான் 1:167)


இப்னுல் அஸீர் அவர்கள் இதற்கு விளக்கம் கூறும் போது இவ்வாறு கூறுகின்றார்கள்: எவர் குர்ஆனின் போதனைப் படி வாழ்கிறாரோ அவருக்காக குர்ஆன் அல்லாஹ்விடம் வாதிடும். தர்க்கம் புரியும். அதன் வாதமும் உண்மைப்படுத்தப்படும். ஏனெனில் குர்ஆன் இறைவனிடத்தில் அதன் படி வாழ்ந்தோருக்காக சிபாரிசு செய்யும். அதனுடைய பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். அதன் போத னைப்படி செயல்படாதவருக்கெதிராக அதன் எதிர் வாதமும் உண்மைப்படுத்தப்படும்.


சில திருமறை வசனங்கள் மற்றும் அத்தியாயங் களின் சிறப்பு பற்றி நபி மொழிகள் வந்துள்ளன. அவைகள் சுவனம் நுழைவதற்கு துணையாக உள்ளன. அல்லது அவைகளை ஓதுபவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை கட்டப்படும். அவைக ளில் சில கீழ்வருமாறு:


அ) ஆயதுல் குர்ஸி:


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ உமாமா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் யார் ஆயதுல் குர்ஸியை ஓதுகிறாரோ அவர் சுவனம் நுழைய மரணத்தைத் தவிர வேறு ஏதும் அவருக்கு தடையாக இருக் காது." (நஸாஈ 182)


ஆ) ஸூரதுல் முல்க்:


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் கூறியதாக அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "திருமறையில் ஓர் அத்தியாயம் உள்ளது. அதில் மொத்தம் முப்பது வசனங்களே இருக்கின்றன. அதனை ஓதியவரை சுவனத்தில் நுழைவிக்கும் வரை அது அல்லாஹ்விடத்தில் அவருக்காக வாதிடும். அது தபாரக் (முல்க்) அத்தியாயமாகும்." (தபரானி).


இந்நபி மொழியை அபூ ஹுரைரா (றழி) அவர் கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்: "திருமறையில் முப்பது வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அது பாவங்கள் மன்னிக்கப்படும் வரை அதனை ஓதியவருக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசும். அது "தபாரகல்லதீ பியதிஹில் முல்க்"


என்ற அத்தியாயமாகும்." (திர்மிதி 5:151)


இ) குல்ஹுவல்லாஹு அஹத்


அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின் றார்கள்: "ஒருவர் "குல் ஹுவல்லாஹு அஹத்" என்ற ஸூராவை ஓதுவதை நபியவர்கள் செவியுற்ற போது நிச்சயமாகி விட்டது என்று கூறினார்கள். என்ன நிச்சயமாகி விட்டது என நான் 'நபியவர்க ளிடம் கேட்டேன். அவருக்கு சுவனம் நிச்சயமாகி விட்டது என நபியவர்கள் பதிலளித்தார்கள்." (முவத்தஃ 1:208 திர்மிதி 5:154)


குபா பள்ளி வாசலில் அன்ஸாரிகளுக்கு தொழுகை நடாத்திக் கொண்டிருந்த நபித்தோழரின் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொரு ரகஅத்திலும் குல்ஹுவல்லாஹு அஹத் ஸூராவை ஓதிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ரகஅத்திலும் இந்த ஸூராவை ஓதுவதற்கு உம்மைத் தூண்டியது எதுவென நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! நான் அதனை நேசிக்கிறேன் என்று கூறினார். அதனை நீர் நேசிப்பது உம்மை சுவனத்தில் நுழைவிக்கும் என நபியவர்கள் கூறினார்கள்."


( 2:255)



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் கூறியதாக முஆத் பின் அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "யார் குல்ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை பத்துமுறை பூரணமாக ஓதுகிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகையைக் கட்டுவான்.” (அஹ்மத் 3:437).

கருத்துகள்