🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல்

 


அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல்


ஷைத்தான் மனிதர்களை குழப்புவதற்கும் விலக்கப்பட்ட வைகளில் அவர்களை வீழ்த்துவதற்கும் பெரும் ஆர்வம் கொண்டவன். இதனால்தான் அல்லாஹ் நம்மை இப்படி எச்ச ரிக்கிறான்:நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்றினால் மானக்கேடானவை மற்றும் தீய வற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான்.


தீமைகள்! எச்சரிக்கை!!




(24:21) மனிதனின் இரத்தம் ஓடும் நாணங்களில் ஷைத்தான் ஓடுகின்றான் மனிதர்களை மானக்கேடானவற்றில் வீழ்த்துவ தற்கு ஷைத்தான் கையாளும் வழிகளில் ஒன்று தான் அந்நி யப் பெண்ணுடன் ஒரு ஆண் தனித்திருப்பதாகும். இதனால் தான் இறைமார்க்கம் இப்பாதையை அடைத்து விட்டது.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த ஆணும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான். அறி விப்பவர்: புரைதா (ரழி), நூல்: திர்மிதி


பனூ ஹாஷிம்களில் சிலர் அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) யிடம் வந்தனர். அப்போது அஸ்மா (ரழி) அபூபக்கர் (ரழி) யின் மனைவியாக இருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப் ) பிறகு அபூ பக்கர் (ரழி) வந்ததும் அவர்களைக் கண்டார்கள். கணவன் இல்லாத வீட்டிற்கு அவர்கள் வந்ததை அபூபக்கர் (ரழி) விரும் பவில்லை. அதனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள்.மேலும் நான் இதை (தவறாக அல்லாமல்) நல்லதாகவே கருதுகிறேன் என்றும் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திண்ணமாக அல்லாஹ் அவளைக் குற்றமற்றவளாக ஆக்கியிருகின்றான் எனக் கூறிவிட்டு மிம்பரில் ஏறி, 'இதற்குப் பிறகு எந்த ஆணும் கணவன் வீட்டில் இல்லாதபோது ஒரு பெண்ணிடம் செல்லக் கூடாது.அவருடன் ஒருவரோ இருவரோ சேர்ந்து சென்றாலே தவிர' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர் (ரழி), நூல்: முஸ்லிம்


எனவே எந்த ஆணும் தம் சகோதரரின் மனைவி அல்லது வேலைக்காரி போன்ற அந்நியப் பெண்ணுடன் அல்லது பெண் நோயாளி மருத்துவருடனும் வீட்டிலோ, அறையிலோ அல்லது காரிலோ தனித்திருப்பது கூடாது. ஆயினும் பெரும்பாலோர் இதில் அலட்சியமாகவே இருக்கின்றனர். தம் மீதோ பிறர் மீதோ நம்பிக்கை வைத்து இப்படி நடந்து கொள்கின்றனர். இதனால் மானக்கேடான காரியங்களில் அல்லது அதற்கான தூண்டுதல்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் . மட்டு மல்ல குழந்தைகள் தவறான வழியில் பிறத்தல்,சந்ததிக் கலப்பு ஏற்படுதல் எனும் வருந்தத்தக்க நிலையும் அதிகரித்து விடும்.


அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்


சமூகப் பழக்கவழக்கங்களில் சில நம் சமுதாயத்தில் இறைமார்க் கத்தையும் விஞ்சிவிட்டன. அதுபோல மக்களின் தவறான பழக்கங்களும், பாரம்பரிய நடைமுறைகளும் இறைச் சட்டங்களை எந்த அளவுக்கு மிகைத்து விட்டன எனில் யாருக்கேனும் ஷரீஅத்தின் சட்டங்களை நீ எடுத்துச் சொன் னால், அவற்றை ஆதாரத்தோடு நிரூபித்து, சான்றுகளையும் தெளிவுபடுத்தினால் உடனே உன்னைப் பழமைவாதி, அடிப் படைவாதி, குடும்ப உறவை குலைப்பவன்,நல்ல எண்ணங் களில் சந்தேகத்தை ஏற்படுத்துபவன்... என்றெல்லாம் அவ தூறு கூறி விடுவர். அத்தகைய பழக்கவழக்கங்களில் ஒன்று தான் அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல் .


சிறிய தந்தையின் மகள், மாமி மகள், தாய் மாமன் மகள், சின்னம்மா மகள், அண்ணன்-தம்பி மனைவி, சிறிய தந்தையின் மனைவி,மாமாவின் மனைவி போன்ற பெண்களுடன் முஸாஃப ஹாச் செய்வது நம் சமுதாயத்தில் தண்ணீர் குடிப்பதை விட வும் சாதாரண விஷயமாக மாறிவிட்டன. (தமிழ் நாட்டில் இந்தப் பழக்கம் இல்லை.) மார்க்க ரீதியாக இச்செயல் எவ்வ ளவு ஆபத்தானது என்பதை தெளிந்த நோக்குடன் சிந்தித் துப் பார்த்தால் அதைச் செய்ய மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் அவ ருக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட அவரது தலையில் இரும்பு ஊசியால் குத்துவதே மேல். அறிவிப் பவர்: மஅகல் பின் யஸார் (ரழி), நூல் : தப்ரானி


இச்செயல் நபி (ஸல் ) அவர்கள் கூறியதுபோல கை செய்யும் விபச்சாரம் என்பதில் ஐயமில்லை. இப்னு மஸ்வூத் (ரழி) அறிவிக் கிறார்கள்: கண்கள் விபச்சாரம் செய்கின்றன, கைகள் விபச் சாரம் செய்கின்றன, கால்களும் விபச்சாரம் செய்கின்றன,மர்ம உறுப்பும் விபச்சாரம் செய்கின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மத்


முஹம்மத் (ஸல்)அவர்களை விட தூய உள்ளம் கொண்ட வர் உலகில் யாரேனும் உண்டா? அவ்வாறிருந்தும் 'நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய மாட்டேன்', 'பெண்களின் கரங்களைத் தொட மாட்டேன்.' என்றெல்லாம் கூறியுள்ளார் கள். அஹ்மத், தப்ரானியில் இதற்கு சான்றுள்ளது.


அண்ணலாரின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக் கிறார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன், அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களின் கரம் எந்தப் பெண் ணுடைய கரத்தின் மீதும் பட்டதே இல்லை. எனினும் வாய் மொழி மூலமே அவர்களிடம் (பெண்களிடம்) பைஅத் -உறுதிப் பிரமாணம் பெறுவார்கள். (முஸ்லிம் )


அறிந்து கொள்ளுங்கள்! சில கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அவர்கள் ஒழுக்கமுள்ள தம் மனைவி யரை,தம் சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யா விட்டால் விவாகரத்துச் செய்து விடுவதாக எச்சரிக்கின்றனர்.


இங்கு ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அவசியமா கும். அதாவது திரைக்கு அப்பால் நின்று கொண்டு கையில் ஒரு துணியைப் போட்டுக் கொண்டு முஸாஃபஹாச் செய்தால் அது கூடும் என்றாகி விடாது. நேரடியாகச் செய்வது, துணியை வைத்துச் செய்வது ஆகிய இரண்டும் தடுக்கப்பட்டவை தான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்