இறைவனின் கண்காணிப்பை மனதிற்கொள்ளுதல்


 இறைவனின் கண்காணிப்பை மனதிற்கொள்ளுதல்


அதாவது வாழ்கையின் ஒவ்வொரு நொடியும் இறைவன் தன்னைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் தனது இரகசியங்களையும் பரகசியங்களையும் அறிந்துகொள் கின்றான் என்பதையும் அவன் அறிந்துகொள்ள வேண்டும்.


இதனால் அவனது உள்ளம் இறைவனின் கண்காணிப் பை உறுதிகொள்ளக்கூடியதாக, அவனை நினைவு கூறும் போது ஒரு பிரியத்தை உணரக்கூடியதாக, அவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும்போது ஒரு சுகத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக, அவனை விடுத்து ஏனைய அனைத் தையும் புறக்கணித்துவிட்டு அவன் பக்கமே திரும்பக்கூடிய தாக ஆகிவிடுகின்றது. பின்வரும் வசனங்களின் கருத்தும் இதுதான் .


எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு தனது நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு ஒரு மனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றினாரோ அவரை விடச் சிறந்த வாழ்க்கை நெறியுடையவர் யார்?(4:125)


(நபியே!) நீர் எந்த நிலையிலிருந்தாலும் குர்ஆனிலிருந்து எதை நீர் ஓதிக் காண்பித்தாலும் (மக்களே!) நீங்களும் எச்செயலை செய்து கொண்டிருந்தாலும் அதை நீங்கள் செய்து கொண்டிருக்கும்போதே நாம் உங்களைப் பார்த் துக்கொண்டுதானிருக்கின்றோம். (10:61 )



நீ அல்லாஹ்வை வணங்கும்போது அவனை நீ பார்ப்த் துக் கொண்டிருப்பதுபோல வணங்க வேண்டும். அவனை நீ பார்க்க முடியாவிட்டாலும் அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: உமர் (ரழி), நூல் : முஸ்லிம்



சுய பரிசோதனை


முஸ்லிம் மறுமையில் தனக்கு நற்பேறு கிடைக்க வேண் டுமென்பதற்காகவும் அங்கு கிடைக்கும் நற்கூலிக்கும் இறைவனின் திருப்பொருத்தத்திற்கும் தன்னைத் தகுதி யாக்கிக் கொள்வதற்காகவும் இவ்வுலகில்- அதுதான் அவன் செயல்படுவதற்குத் தகுந்த களம்- இரவு பகலாகச் செயல்படும்போது ஒரு வியாபாரியைப் போல செயல்பட வேண்டும்.


அதாவது தன்மீதுள்ள கடமையான வணக்கங்களை மூலதனமாகவும் நஃபிலான வணக்கங்களை மூலதனத் திற்கு மேல் கிடைக்கின்ற இலாபங்களாகவும் தவறுகளை யும் பாவங்களையும் நஷ்டங்களாகவும் கருதி செயல்பட வேண்டும். பிறகு அவ்வப்போது தனியாக அமர்ந்து இன் றைய தினம் தாம் என்ன செய்தோம் என்று சுய பரிசோத னை செய்து பார்க்க வேண்டும்.


கடமைகளில் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தால் தன் னைத்தானே பழித்துக் கொண்டு உடனடியாக அக்குறை யை நிவர்த்தி செய்ய வேண்டும். அக்குறை களாச் செய் யப்படக் கூடியதாக இருந்தால் அதைக் களாச்செய்து விட வேண்டும். களாச் செய்யப்படக்கூடியதாக இல்லை யென்றால் நஃபில்களை அதிகமாகச் செய்து சரிசெய்து விட வேண்டும். நஃபில்களில் ஏதாவது குறை ஏற்பட்டிருந் தால் திரும்பவும் அந்த நஃபில்களைச் செய்து சரிசெய்து விடவேண்டும்.ஹராமான காரியங்களைச் செய்து நஷ்டம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்தி இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடி அவனிடமே திரும்பிவிட வேண்டும். அத்துடன் தான் செய்த தீமைக்குப் பொருத்தமான நன் மையைச் செய்து கொள்ள வேண்டும். சுய பரிசோதனை யின் கருத்து இதுதான்.


அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்


களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்திற்காக எதைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிபவனாக இருக் கின்றான். (59:18)


உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் விசாரணை செய்யப்படுவதற்கு முன உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள். (அஹ்மத்)



மனதோடு போராடுதல்


தன்னுடைய விரோதிகளிலேயே கொடிய வீரோதி தனது மனம்தான் என்பதை முஸ்லிம் புரிந்துகொள்ள வேண்டும் இயல்பாகவே அது நன்மையை வெறுத்து தீமையை விரும் பக்கூடியதாகவும் தீயவற்றை அதிகம் தூண்டக்கூடியதா கவும் இருக்கின்றது. மேலும் மனம் எப்போதும் தனக்கு ஓய்வையும் சுகத்தையுமே விரும்பும். இச்சைகளின் மீதே மோகம் கொள்ளும். அவற்றில் தனக்குக் கெடுதியிருந்தா லும் சரியே!


இதை ஒரு முஸ்லிம் புரிந்து கொண்ட பிறகு நன்மைக ளைச் செய்வதற்கும் தீமைகளைவிட்டு விலகுவதற்கும் தன் மனதோடு போராட வேண்டும்.


எவர்கள் நமக்காக போராடுகின்றார்களோ அவர்க ளுக்கு நாம் நம்முடைய வழிகளைக் காண்பிப்போம். திண் ணமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களுடன் இருக்கின் . (29:69)


இதுதான் நல்லோர்களின் வழிமுறையாகும். முஃமின் கள் மற்றும் வாய்மையாளர்களின் வழிமுறையும் இதுவே.


நபி (ஸல்) அவர்கள் இரவில் தம் கால்கள் வீங்கும் அள வுக்கு தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்பட் டபோது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண் டாமா! எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)


நூல்:புகாரி,முஸ்லிம்.

முஸ்லிமின் வழிமுறை (tag )


கருத்துகள்