இறைவனின் பிடி மிகக் கடுமையானது!

 


இறைவனின் பிடி மிகக் கடுமையானது! அவன் பழிவாங்கும் ஆற்றலுடையவன் என்பதை உணர்ந்து, அவனுக்கு மாறு செய்யாமல் கட்டுப்பட்டு நடந்து கொள்வதன் மூலம் அவ னை அஞ்சிக் கொள்ள வேண்டும்.


இது அல்லாஹ்விடம் அவன் நடந்துகொள்ளும் ஒழுங் காகும். ஏனென்றால் ஒன்றுக்கும் இயலாத பலவீனமான அடிமை வலிமையும் ஆற்றலுமிக்க, யாவற்றையும் அடக்கி யாளக்கூடிய எஜமானுக்கு மாறு செய்வதும் அநியாயம் செய்வதும் ஒழுங்காக இருக்க முடியாதல்லவா?


அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் ஒரு சமூகத்திற்கு


தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத் திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூ கத்தாருக்கு உதவி செய்வோரும் எவருமிலர்.(13:11)


உண்மையில் உம் இறைவனின் பிடி மிகக் கடுமையா


நா! (85:12)


ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுடைய ஷரீஅத்தைப் பின்பற்றி நடக்கும் போது தனது வாக்குறுதி அவனுக்குக் கிடைத்து விட்டதாக- தனது திருப்தி என்ற ஆடையை அவனுக்கு அணிவித்து விட்டதாக அல்லாஹ் கருதுவது போன்று அந்த முஸ்லிம் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போதும் அவனுடைய கட்டளையை மீறும் போதும் அவன் எச்சரித்தது வந்து விட்டதாக, அவனுடைய வேத னை இறங்கி விட்டதாகக் கருத வேண்டும். இவ்வாறு நடந்து கொள்வது இறைவனைப் பற்றி அவன் நல்லலெண் ணம் கொள்வதாக அமையும்.


இதற்கு மாறாக அவன் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண் ணம் கொள்ளாமல் அவனுக்கு மாறு செய்வதும் கட்டுப்ப டாமல் இருப்பதும் அதே நேரத்தில் அவன் தன்னைக் கண்காணிப்பவனோ பாவம் செய்தால் அதற்காக தண்டிப் பவனோ அல்ல என நினைப்பதும் ஒழுங்காக ஆக முடி யாது.


அல்லாஹ் கூறுகிறான்:.... மாறாக, நீங்கள் செய்கின்ற


செயல்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ் கூட அறிய மாட்டான் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்கள். உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களது இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்தி விட்டது. அதே காரணத்தால் நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகி வீட்டீர்கள். (41:22)


அதுபோல ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு அஞ்சி அவ னுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அதே நேரத்தில் அவன் தனது நற்செயலுக்கு கூலி தரமாட்டான்; தனது வழிபாட் டை அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று நம்பினால் அல்லாஹ்வுடன் அவன் நடந்து கொள்ளும் ஒழுங்காக இருக்காது.


அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் அல்லாஹ்வுக்கும்


அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்கின்றார் களோ அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர். (24:52)


சுருங்கச் சொல்லின் தனக்கு அருட்கொடைகளை வழங் கியதற்காக ஒரு முஸ்லிம் இறைவனுக்கு நன்றி செலுத்துவ தும் அவனுக்கு மாறு செய்யத் துணியும்போது வெட்கப்படுவ தும் அவன் பக்கம் வாய்மையோடு திரும்புவதும் அவன் மீதே நம்பிக்கை வைப்பதும் அவனது அருளை ஆவல் கொள்கின்ற அதே நேரத்தில் அவனுடைய தண்டனைக்கு அஞ்சுவதும் அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவான், தான் நாடிய அடியார்களுக்கு தான் எச்சரித்ததை (தண்டனையை)இறைக்கிவைப்பான் என அவனைப் பற்றி நல்லெண்ணம் கொள்வதும் அல்லாஹ்வுடன் அவன் நடந்து கொள்ளும் ஒழுங்குகளா கும். இவற்றை எந்த அளவுக்கு அவன் பற்றிப் பிடித்துக் கொள்கிறானோ- பேணிக்கொள்கிறானோ அந்த அளவுக்கு அவனுடைய அந்தஸ்தும் மதிப்பும் உயர்ந்து வீடும்.


அல்லாஹ்வின் வார்த்தையுடன்...


அல்லாஹ்வின் வார்த்தையுடன் நடந்து கொள்ள வேண் டிய ஒழுங்குகள் :


அல்லாஹ்வின் வார்த்தை பரிசுத்தமானது. மற்ற எல்லா வார்த்தைகளை விட மேலானதும் சிறப்பானதும் ஆகும். திருக் குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். திருக்குர்ஆனின் கூற்றை கூறியவர் உண்மையைக் கூறியவராவார். திருக்குர் ஆனின்படி தீர்ப்பு வழங்கியவர் நீதமாக நடந்து கொண்டவ ராவார். திருக்குர்ஆனை அறிந்திருப்பவர்கள் அல்லாஹ்வுக் குரியவர்கள் அவனுக்கே உரித்தானவர்கள். அதைப் பற்றிப் பிடித்துக்கொள்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்; வெற்றி பெறுவார்கள். அதனைப் புறக்கணிப்பவர்கள்பேரிழப்புகளுக்கு ஆளாவார்கள் ; அழிந்து போவார்கள் என ஒரு முஃமின் நம்ப வேண்டும்.


நபி (ஸல்) கூறினார்கள்: திருக்குர்ஆனை ஓதங்கள். திண் ணமாக அது மறுமையில் அதை ஓதியவருக்கு பரிந்துரை செய் யக்கூடியதாக வரும். அறிவிப்பவர் : அபூஉமாமா (ரழி), முஸ்லிம்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: திண்ணமாக மக்களில் அல்லாஹ் வுக்கென்று சிலர் இருக்கின்றனர். அவர்கள் குர்ஆ னின்படி நடப்பவர்கள் அவர்களே அல்லாஹ்வுக்குரியவர்கள். அவனுக்கே உரித்தானவர்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி)


நூல் : அஹ்மத், நஸயீ)


திண்ணமாக இரும்பு துருப்பிடிப்பதுபோல உள்ளங்கள் துருப்பிடிக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அதை நீக்குவது எது ? என்று கேட் கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை ஓது வதும் மரணத்தை நினைவுகூருவதும்தான் என்று பதிலளித் தார்கள். (பைஹகீ)


எனவே ஒவ்வொரு முஸ்லிமும் திருக்குர்ஆன் எதை ஹ லால் என்று கூறுகிறதோ அதை ஹலால் என்றும் எதை ஹ ராம் என்று கூறுகிறதோ அதை ஹராம் என்றும் கூறவேண்டும். மேலும் அது கூறும் ஒழுக்கங்களைக் கடைபிடிப்பதோடு அது கூறும் பண்புகளையும் மேற்கொள்ள வேண்டும். இன்னும் அதை ஓதும்போது பின்வரும் ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும் :


உழுச் செய்துகொண்டு கிப்லாவை முன்னோக்கி மரியா தையோடும் கண்ணியத்தோடும் அமர்ந்து திருக்குர்ஆனை ஓதவேண்டும்.


அவசரப்படாமல் நிறுத்தி நிதானமாக ஓதவேண்டும். முழுக் குர்ஆனையும் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஓதக் கூடாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறி னார்கள் : யார் முழுக் குர்ஆனையும் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஓதிமுடிக்கின்றாரோ அவர் குர்ஆனை விளங்க வில்லை. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி)


நூல் : திர்மிதி, நஸயீ


ஓதும்போது பயபக்தியை மேற்கொள்ளவேண்டும்.


அழகிய ராகத்துடன் ஓதவேண்டும். ஏனெனில் "திருக்குர் ஆனை அழகிய ராகத்துடன் ஓதுங்கள் " என்று நபி (ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அல்பர்ராஉ பின் ஆஸிப் (ரழி )( நூல்: அஹ்மத், இப்னுமாஜா)



தனக்கு முகஸ்துதி ஏற்பட்டுவிடும் என்றோ, தொழுது கொண்டிருப்பவருக்கு இடையூறாக இருக்கும் என்றோ அஞ்சினால் சப்தமில்லாமல் ஓத வேண்டும்.


அதன் அர்த்தங்களையும் உட்கருத்துக்களையும் விளங்கி சிந்தித்து, மனதை ஒரு நிலைப்படுத்தி ஓத வேண்டும்.


திருக்குர் ஆனை ஓதும்போது அலட்சியமாகவோ அதற்கு மாறுசெய்யும் விதமாகவோ நடந்துகொள்ளக் கூடாது. ஏனென்றால் இது சிலவேளை தன்னைத் தானே சபித்துக் கொள்வதற்குக் காரணமாக ஆகிவிடும். ஆம்!'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பணிந்து இறைஞ்சுவோம்' (3:61) என்ற வசனத்தையோ அல்லது‘எச் சரிக்கை! அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்'(11:18) என்ற வசனத்தையோ ஓதும்போது தானே அந்நிலையில் இருந்தால் அவன் தன்னைத்தானே சபித்துக் கொள்ளக்கூடியவனாக ஆகிவிடுகின்றான்.


குர்ஆனின்படி செயல்படுபவர்கள் ஆக முறச்சி செய்ய வேண் டும். அத்தகையோர்தான் அல்லாஹ்வுக்குரியவர்கள், அவனுக்கே உரித்தானவர்கள்.

கருத்துகள்