உண்பது, குடிப்பதன் ஒழுக்கங்கள்
ஒரு முஸ்லிம் உண்பதையும் பருகுவதையும் மற்ற காரியங் களுக்கு உதவியாகக் கருதவேண்டுமே தவிர அதுதான் பிர தான நோக்கமாகக் கருதக்கூடாது. அவன் உண்ணுகிறான் பருகுகிறான் என்றால் தன் உடல் நலத்தைப் பேணி அதன் மூலம் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக. அவ் வழிபாடுதான் மறுமையின் வெற்றிக்கும் நற்பாக்கியத்துக்கும் உரியவனாக அவனை ஆக்குகிறது. எனவே அவன் உண்ண வேண்டும், பருக வேண்டும் என்ற மோகத்திற்காக உண்ண வோ பருகவோ கூடாது. இங்கே அவன் உண்ணும்போதும் பருகும்போதும் குறிப்பட்ட சில மார்க்க ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
உண்ணும் முன்னுள்ள ஒழுக்கங்கள்
1. அவனது உணவும் பானமும் தூய்மையானதாக இருக்க வேண்டும் .அதாவது அதில் ஹராம் ஏதும் கலந்துவிடாமல் ஹலாலாக இருக்க வேண்டும்.
"இறைவிசுவாசிகளே! நாம் உங்களுக்கு அளித்திருப்ப வற்றில் தூய்மையானதையே உண்ணுங்கள்.' (2:172)
தூய்மையானது என்றால் ஹலாலானது- அசுத்தமாக வோ அருவருக்கத்தக்தாகவோ இல்லாதது என்று பொ ருள்.'ஹராமின் மூலம் வளர்ந்த உடல் நரகத்திற்குத் தகு தியாகிவிடுகின்றது' என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூ பக்கர் (ரழி), நூல் : ஹாக்கிம்)
2. உண்ணும்போதும் குடிக்கும்போதும் 'வழிபாடு செய்வதற்கு சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கி றேன்' என எண்ணிக் கொள்ள வேண்டும். காரணம் உண்ப தற்கும் குடிப்பதற்கும் கூலி கிடைக்க வேண்டுமென்பதற் காக. ஏனென்றால் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியம் நல் லெண்ணத்தின் காரணமாக கூலி கிடைக்கக் கூடிய ஒரு வணக்கமாக மாறிவிடுகிறது.
8. கை அசுத்தமாக இருந்தால் அல்லது சுத்தமாக இருக் கிறது என்ற உறுதியில்லாமலிருந்தால் கழுவிக் கொள்ள வேண்டும்.
4.நபி (ஸல் ) அவர்களைப்போல பணிவோடு அமர வேண்டும். நான் சாய்ந்து கொண்டு உண்ண மாட்டேன் என நபி (ஸல் ) கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரழி),-புகாரி (ஏனெனில் சாய்ந்து அமர்வதில் பணிவு இருக்காது )
ஒரு அடிமை சாப்பிடுவதுபோல சாப்பிடுவேன். ஒரு அடி மை அமர்வதுபோல (பணிவாக) அமர்வேன் என நபி (ஸல் ) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி அபூ யஃலாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5.இருப்பதைக் கொண்டு திருப்திகொள்ளவேண்டும். உண வைக் குறை கூறக்கூடாது. விரும்பினால் உண்ண வேண் டும் இல்லையெனில் விட்டுவிட வேண்டும்.
நபி (ஸல் ) எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறிய தில்லை. விரும்பினால் உண்பார்கள். இல்லையெனில் வீட்டு விடுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி
6. மற்றவருடன் சேர்ந்து உண்ண வேண்டும். அதாவது விருந் தாளி, மனைவி, குழந்தை, அல்லது வேலைக்காரனுடன் சேர்ந்து உண்ண வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சாப்பிடுகிறோம். ஆயி னும் வயிறு நிரம்புவதில்லை!(காரணம் என்ன?) என நபித் தோழர்கள் கேட்டதும், 'நீங்கள் தனித்தனியாக உண்ணு கிறீர்கள்போலும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர்கள், 'ஆம்' என்றதும், நபி (ஸல் ) அவர்கள், 'நீங் கள் சேர்ந்து உண்ணுங்கள். உண்ணும்போது பிஸ்மில் லாஹ் கூறுங்கள். அல்லாஹ் உங்கள் உணவில் பரகத் செய்வான் என்று கூறினார்கள். (அபூதாவூத்)
உண்ணும்போது கடைபிடிக்க வேண்டியவை
1. பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
நபி(ஸல்) கூறினார்கள்: நீங்கள் உண்ணும்போது பிஸ் மில்லாஹ் சொல்லி உண்ணுங்கள். ஆரம்பத்தில் பிஸ்மில் லாஹ் சொல்ல மறந்துவிட்டால் (நினைவு வந்ததும்) பிஸ்மில் லாஹி அவ்வலஹு வஆகிரஹு என்று கூறுங்கள். அறிவிப்
பவர் : ஆயிஷா (ரழி), நூல்: அபூதாவூத், திர்மிதி
سهره குர்கி: gi rius بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ
லும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (உண்கிறேன்)
2. சாப்பிட்டு முடித்ததும் அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.
நபி (ஸல்) கூறினார்கள்: ஒருவர் சாப்பிட்டு முடித்ததும் 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸக னீஹி மின் கைரி ஹவ்லிம் மின்னி வலா குவ்வா'
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّذِي وَلَا
என்று கூறினால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படு கின்றன. அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் (ரழி), திர்மிதி)
(பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எனக்கு இவ்வுணவை அளித்தான். என்னிடமிருந்து எவ்வித முயற்சியும் சக்தியுமின்றி இதனை எனக்கு அருளினான்)
8. வலது கையால் (ரொட்டி போன்ற உணவாக இருந்தால் மூன்று விரல்களால்) உண்ண வேண்டும். உணவைக் கொஞ்சமாக அள்ளி நன்கு மென்று சாப்பிட வேண்டும். தட்டின் ஓரத்திலி ருந்து சாப்பிட வேண்டும். நடுவிலிருந்து சாப்பிடக் கூடாது.
உமர் பின் அபீஸலமா (ரலி) கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் மடியில் சிறுவனாக இருந்தபோது எனது கை தட்டில் இங்கும் அங்குமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, 'குழந்தாய்! நீ சாப்பிடும்போது பிஸ்மில்லாஹ் கூறி வலது கையால் தட்டின் ஓரத்திலிருந்து சாப்பீடு' என நபி(ஸல்) என்னிடம் கூறினார்கள், நூல்: புகாரி, முஸ்லிம்
4. உண்ணும் உணவிலிருந்து ஏதாவது கீழே விழுந்து விட் டால் அழுக்கை அகற்றிவிட்டு அதை உண்ண வேண்டும்
உங்களின் ஒருவரது உணவிலிருந்து ஒரு பருக்கை கீழே விழுந்து விட்டால் அதை எடுத்து அதன் அழுக்கை அகற்றி விட்டு அதை அவர் சாப்பிடட்டும். ஷைத்தானுக் காக அதை வீட்டு விடவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல் : முஸ்லிம்
5. சூடான உணவில் ஊதக்கூடாது. ஆறாதைவரை அதைச் சாப்பிடவும் கூடாது. மேலும் தண்ணீர் அருந்தும்போது அதில் மூச்சுவிடக் கூடாது. பாத்திரத்திற்கு வெளியே மூச்சு விட்டுக் கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் மூச்சுவிடுவதையும் அதில் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல் : திர்மிதி)
6. வயிறு புடைக்க உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.
தன் வயிறை விட மோசமான பையை எந்த மனிதனும் நிரப்புவதில்லை. ஒரு மனிதனுக்கு தன் முதுகுத் தண்டை நிமிர்த்தும் அளவு சில கவளங்கள் போதுமானதே.தவிர்க்க இயலாத நிலையில் கால் வயிறு உணவும் கால் வயிறு தண் ணீரும் கால் வயிறு மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : மிக்தாம் (ரழி), - திர்மிதி
7. சபையில் தன்னை விட வயதில், அந்தஸ்தில் மூத்தவர் இருக்கும்போது தான் முந்திக் கொண்டு உண்ணப்பருக துவங்கக் கூடாது.இது ஒழுக்கத்துக்கு இடையூறானது.
8. சாப்பிடும்போது தன்னுடன் சாப்பிடும் சஹாக்களைப் பார்ப் பதும் கூர்ந்து கவனிப்பதும் கூடாது. அதனால் அவர்கள் வெட்கப்படலாம்.
9. மக்கள் வெறுக்கின்ற பழக்கங்களைச் செய்யக் கூடாது.
அதாவது பாத்திரத்தில் கையை உதறுவது, தலையை பாத்திரத்தின் பக்கம் சாய்ப்பது கூடாது- அவனது வாயிலி ருந்து ஏதாவது அதில் விழுந்து விடாமல் இருப்பதற்காக. அதுபோல வாய் வைத்து கடித்த ரொட்டியின் மீதத்தை பாத்திரத்தில் போடவோ அசிங்கமான, வெறுக்கத்தக்க பேச்சுக்களைப் பேசவோ கூடாது. இதனால் உடன் சாப் பிடும் சஹாக்களுக்குத் தொல்லை ஏற்படலாம்.
உண்ட பின் கடைபிடிக்க வேண்டியவை
1. நபி (ஸல் ) அவர்களைப் பின்பற்றி வயிறு நிரம்புவதற்கு முன் பாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.
2. கையைச் சூப்பிவிட்டுத் துடைத்துவிட வேண்டும். அல்லது சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.
8. சிந்திய உணவை பொறுக்கி எடுக்க வேண்டும். காரணம் இது அருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாக அமையும்.
4. வாயை சுத்தப்படுத்துவதற்காக பற்களைக் குத்தி வாய்க் கொப்பளிக்க வேண்டும்.
5. உண்டு, குடித்து முடித்தவுடன் அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.
விருந்துக்குச் சென்றால் விருந்து கொடுத்தவருக்காக 'அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும் வஃக் ஃபிர்லஹும் வர்ஹம்ஹும்' (முஸ்லிம் )என்றும்
"அல்லாஹும்ம அத்இம் மன் அத்அமனீ வஸ்கி மன் ஸகானீ' (முஸ்லிம்) என்றும் பிரார்த்திக்க வேண்டும். اللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِي وَاسْقِ مَنْ سَقَانِي
(பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியவற்றில்
பரகத்து செய்வாயாக! இவர்களை மன்னித்து, அருள் புரி வாயாக! இறைவா! எனக்கு உணவளித்தவருக்கு நீ உண வளிப்பாயாக. எனக்கு பானம் அளித்தவருக்கு நீ பானம் புகட்டுவாயாக )
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!