நீங்கள் கண்ணாடிக்கு முன்னால் நிற்கிறீர்கள்.

 


தயங்காதீர்கள்


நீங்கள் கண்ணாடிக்கு முன்னால் நிற்கிறீர்கள். அது உங்களிடம் தயக்கம் காட்டுவதில்லை. உங்களின் சகோதரரிடம் உண்மையை எடுத்துரைப்பதற்குத் தயங்காதீர்கள். உண்மையைத் தைரியமாக எடுத்துரை யுங்கள். உங்களின் சகோதரரிடம் ஒரு தீமையைக் கண்டால் அது தீமை என்பதை அவருக்குப் புரிய வைப்பதில் குறியாய் இருங்கள். மறுபடியும் அவர் அந்தத் தீமையில் விழாதிருக்க வழிகாட்டுங்கள். உங்களிடம் உண்டாகும் தயக்கத்தால் உங்களின் சகோ தரரிடம் தீமை நிரந்தரமாகத் தங்கிவிடுவதற்கான வழிகள் பிறக்கின்றன. மென்மேலும் பல தீமைகள் புரிந்து நன்மை களை இழக்கும் நிலை உருவாகிறது. நீங்கள் நன்மையை ஏவுபவராய் தீமையைத் தடுப்பவராய் இருங்கள்.


நீங்கள் சிறந்த சமுதாயமாய் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள்; தீயதைவிட்டும் தடுக்கிறீர்கள்; ஏக இறைவனையும் நம்புகிறீர்கள்.


திருக்குர்ஆன் 3:110


தன்மையாகப் பேசுங்கள்



உண்மை நிலையை எடுத்துரைப்பதில் கண்ணாடி தயங்கு வதில்லை. கண்ணாடி கூச்சல் போட்டு ஓர் உண்மையை எடுத்துரைப்பதுமில்லை. மென்மையாகவும் தன்மை யாகவும் உண்மை உரைப்பதுதான் கண்ணாடியின் பண்பு. நீங்களும் அவ்வாறே மென்மையாகவும்,




தன்மையாகவும் உண்மையை எடுத்துரையுங்கள். கொடியவன் ஃபிர்அவ்னிடம் இறைமார்க்கத்தை எடுத்துரைக்கும் பொறுப்பை இறைவன் மூஸா(அலை), ஹாரூன்(அலை) அவர்களிடம் ஒப்படைத்தபோது சொன்ன அறிவுரையைப் பாருங்கள். ஃபிர் அவ்னிடமே மென்மை காட்டவேண்டும் என்றால் உங்களின் சகோதரரிடம் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


அவனிடம் மென்மையான சொல்லால் நீங்கள் இருவரும் கூறுங்கள்! அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அஞ்சலாம்.


திருக்குர்ஆன் 20:44


இறைவன் உங்களுக்குக் கொடுத்துள்ள அறிவைப் பயன்படுத்துங்கள். உங்களின் சகோதரருக்கு அழகிய முறையில் அறிவுரை கூறுங்கள். பிறரை நீங்கள் அர வணைத்துச் செல்லுங்கள். உண்மையைத்தான் சொல் கிறோம் என்ற பெயரில் விரட்டியடித்து விடாதீர்கள்.


உம்முடைய இறைவனின் வழியில் விவேகத்துடனும், அழகிய உபதேசத்தின் மூலமும் அழைப்பீராக! இன்னும், அவர்களிடம் மிக அழகான முறையில் விவாதிப்பீராக! உம்முடைய இறைவனின் வழியை விட்டுத் தவறியவர் களை அவன் நன்கு அறிந்தவனே. நேர்வழி பெற்றவர் களையும் அவன் நன்கறிகிறான்.


திருக்குர்ஆன் 16:125



நன்மை நாடுங்கள்🥰


நீங்கள் கண்ணாடிக்கு முன்பு நிற்கிறீர்கள்: எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல் உங்களிடம் காணப்படும் நிறைகுறையை உங்களுக்குச் அது சுட்டுகிறது. பிறரின் நிறைகுறையைச் சுட்டும்போது உலக ஆதாயங்களை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். மனிதக் கண்ணாடியான உங்களுக்கு நீங்கள் செய்யும் பணிக்காக இறைவன் மறுமையில் நன்மைகளை அளிக்கிறான் என்பதை கவனத்தில் வையுங்கள். எனவே உங்களின் எதிர்பார்ப்பு மறுமையின் வெற்றியாகத்தான் இருக்கவேண்டும்.


நன்மைக்குப் பரிந்துரைப்பவருக்கு அதில் பங்குண்டு; தீமைக்குப் பரிந்துரைப்பவருக்கும் அதில் பங்குண்டு. ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாய் இறைவன் இருக்கிறான்.


திருக்குர்ஆன் 4:85


குத்திக்காட்டாதீர்கள்🧑‍🔧


நீங்கள் கண்ணாடிக்கு முன்னால் நிற்கிறீர்கள். அது உங்களிடம் காணப்படும் நிறைகுறையைச் சுட்டுகிறது. அதை நீங்கள் சரி செய்துவிட்டீர்கள். அதன் பின்னர் மறுபடியும் நீங்கள் கண்ணாடி முன்பாக நின்றால் அது உங்களைக் குத்திக் காட்டுவதில்லை. ஒரு சகோதரனின் குறையை நீங்கள் சுட்டிக்காண்பித்தீர்கள். பிறகு அவன் அதைத் திருத்திக் கொண்டான்; அல்லது திருந்தி விட்டான் என்றால் அவனுடைய குறைகளை நீங்கள் மறுபடியும் கிளராதீர்கள். அவனைக் குத்திப் பேசாதீர் கள். உங்களின் சகோதரர் மனதைக் காயப்படுத்தாதீர்கள்.


"இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும், சதா சாபமிடுபவனாகவும் இருக்கமாட்டான்; மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், (சண்டையில்) தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருக்கமாட்டான்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்


அறிவித்தவர்: அபூதர்தா(ரலி) நூல்: ஹாகிம்


இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராய் இருக்க வில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுப வராய் இருக்கவில்லை. மேலும், “நற்குணமுள்ளவரே உங்களில் சிறந்தவர்" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


அறிவித்தவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 6035


பிறர் குறையை மறைத்திடுங்கள்


நீங்கள் கண்ணாடிக்கு முன்னால் நின்றால் உங்களின் குறையை அது பிறரிடமிருந்து மறைத்துக் கொள்கிறது. நீங்கள் உங்களின் சகோதரர் குறையை பிறரைவிட்டும் மறைத்துக் கொள்ளுங்கள். உங்களின் குறையை மறுமை யில் இறைவன் மறைத்துக் கொள்வான்.


“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறவரின் குறையினை மறுமை நாளில் அல்லாஹ் வும் மறைக்கிறான்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


அறிவித்தவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 2442)

கருத்துகள்