உண்மையாக நடந்துகொள்ளுதல்:

 


உண்மையாக நடந்துகொள்ளுதல்:


பிள்ளைகள், பெரியவர்களை முன்மாதிரியாகக் கொள்கின்றனர். இந்த வகையில் பெரியவர்கள் குறிப்பாகப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும். குழந்தைகளுடன் பேசும் போது பொய் பேசலாகாது! வாக்களித்தால் மீறக்கூடாது! போலி வாக்குறுதிகள் அளிக்கவும் கூடாது! இந்த விடயத்தில் பெற்றோர்கள் தாய்மார்கள் தவறு விடுகின்றனர். குறிப்பாகத்


அழுகின்ற பிள்ளையைச் சமாளிப்பதற்காகவும், பிள்ளைகளிடமிருந்து வேலை வாங்குவதற்காகவும் அது தருவேன், இது தருவேன் என அரசியல்வாதிகள் போன்று போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். பின்னர் தேர்தல் முடிந்த கதை போன்று கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால் குழந்தைகள் பொய்யையும், வாக்களித்து விட்டு மாறு செய்வதையும், ஏமாற்றுவதையும் சர்வ-சாதாரண விடயங்களாக எடுத்துக்கொள்வர். இவை மூன்றும் முனாஃபிக்குகளின் பண்பாகும். இந்த மூன்று குற்றத்தையும் சாதாரணக் குற்றங்களாக அவர்கள் கருத ஆரம்பித்து விட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்வில் பாரிய வீழ்ச்சியை உண்டுபண்ணி விடும். இந்த வகையில் பிள்ளைகளிடம் பொய் சொல்லவோ, போலி வாக்குறுதி அளிக்கவோ கூடாது. அவர்களைச் சின்ன விடயத்தில் கூட ஏமாற்றக் கூடாது!


இதற்கு மாற்றமாக நடந்தால் பெற்றோர் பற்றிய நல்லெண்ணம் பிள்ளைகளிடம் எடுபட்டு விடும். 'எனது தாய் பொய் சொல்பவள், எனது தந்தை ஏமாற்றுபவர்' என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால் அவர்கள் பெற்றோரின் எந்தப் போதனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


எனவே இது விடயத்தில் பெரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்!


"அப்துல்லாஹ் இப்னு ஆமிர்() அவர்கள் கூறுகின்றார்கள். "எங்களது வீட்டில் நபி(*) அவர்கள் இருக்கும் போது எனது தாய் என்னை அழைத்தார்கள்." அப்போது 'வா! ஒரு சாமான் தருவேன்!' எனக் கூப்பிட்டார். இது கேட்ட நபி() அவர்கள் "நீங்கள் குழந்தைக்கு என்ன கொடுக்க விரும்புகின்றீர்கள்?' எனக் கேட்டார்கள். எனது தாய் 'நான் பேரீத்தம் பழம் கொடுப்பேன்!' என்றார்கள். அதற்கு நபி() அவர்கள் (இப்படி அழைத்து விட்டு) குழந்தைக்கு எதையாவது நீங்கள் வழங்காவிட்டால் பொய் சொன்ன குற்றம் உங்கள் மீது பதியப்படும்!' எனக் கூறினார்கள்."


எனவே குழந்தைகளை ஏமாற்றவோ, அவர்களிடம் பொய் பேசவோ, போலி வாக்குறுதிகளை வழங்கவோ கூடாது. இது அவர்களின் ஆளுமையில் பாரிய வீழ்ச்சியை உண்டுபண்ணும் என்பதைப் பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும்.


ஆடை விடயத்தில் அவதானம்:



“ஆள் பாதி! ஆடை பாதி!” என்பர். ஆடையை வைத்து மனிதன் மதிப்பிடப்படுகின்றான். எனவே மனிதன் அணியும் ஆடை அவனுக்கு கண்ணியத்தையும், ஆளுமையையும் அளிக்கின்றது. சில ஆடைகள் குப்பார்களின் அடையாளமாகவும், மற்றும் சில ஆடைகள் குற்றச் செயல்களைச் செய்பவர்களினதும், நாகரிகம் அற்றவர்களினதும் ஆடைகளாக உள்ளன. மற்றும் சில ஆடைகள் ஒழுக்கங்கெட்டவர்களின் அடையாளமாக இருக்கின்றது. எனவே எமது குழந்தைகளின் ஆடை விடயத்தில் நாம் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.


சில பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்குப் பெண் பிள்ளைகளினதும், பெண்பிள்ளைகளுக்கு ஆண்பிள்ளைகளினதும் ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கின்றனர். ஆண்பிள்ளை இல்லாத பெற்றோர் தனது பெண்பிள்ளைக்கு ஆண்பிள்ளைகளுக்குரிய ஆடைகளை அணிவித்துத் தமது ஆசையைத் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர். இதை இஸ்லாம் தடுத்துள்ளது.


ஆண் போன்று ஆடை அணியும் பெண்ணையும், பெண் போன்று ஆடை அணியும் ஆணையும் நபி () அவர்கள் சபித்துள்ளார்கள். உங்கள் குழந்தைகள் நபி () அவர்களின் சாபத்துக்குள்ளாகுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா?


இவ்வாறு பால் மாறி ஆடை அணிவது பழக்க- வழக்கத்திலும், பண்பாட்டிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆணிடம் பெண் தன்மையையும், பெண்ணிடம் ஆண் தன்மையையும் ஏற்படுத்தி விடும். இதனால் அவர்களிடம் ஒழுக்க வீழ்ச்சி ஏற்படுவதுடன் சமுகத்தின் கேலிப் பொருளாகவும் அவர்கள் மாறி விடுவார்கள்.


அடுத்து, அணியும் ஆடை கண்ணியமானதாக இருந்தால் அதை அணிந்தவனின் செயல்பாடும் கண்ணியமானதாக இருக்கும். இன்றைய பெற்றோர் சினிமா நடிகர்களின் ஆடைகளைத் தமது குழந்தைகளுக்கு அணிவித்து அழகு பார்க்க ஆசைப்படுகின்றனர். அவர்கள் அணியும் ஆடைக்கு ஏற்ப அவர்களிடம் செயல்பாட்டிலும் மாற்றம் இருக்கும். முரட்டுத்தனமான ஆடை அணிபவர்களிடம் நீங்கள் மென்மையை எதிர்பார்க்க முடியாது. அநாகரிகமான ஆடைகளை அணிபவர்களிடம் நீங்கள் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே ஆடை விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும். கண்ணியமான தோற்றத்தைத் தரும் ஆடைகளை அவர்களுக்கு அணிவிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளின் ஆடை விடயத்தில் கரிசனை காட்டியுள்ளார்கள்.


"அம்ரிப்னுல் ஆஸ் (ரலி ) அவர்களின் மகன் அப்துல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். நான் மஞ்சள் சாயம் பூசப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்த நிலையில் என்னை நபி (ஸல் ) அவர்கள் கண்டார்கள். 'உனது தாய்தான் இந்த ஆடையை அணிவித்தாளா? இது நிராகரிப்பாளரின் ஆடை. இதை அணிய வேண்டாம்!' எனக் கூறினார்கள். "


(முஸ்லிம்)


செலுத்தியிருப்பதை கூட இந்த வகையில் நபி(அவர்கள் சிறுவர்களின் ஆடையில் அவதானம் அவதானிக்கலாம். எனவே, பெற்றோர் தமது குழந்தைகளுக்கு ஆடை எடுக்கும் போது கூடிய அக்கறை செலுத்த வேண்டும். சில பெற்றோர் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் ஆடை விடயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். "ஜீன்ஸ்”, டீ-சேர்ட் சகிதம் தலையில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு பாதையில் பவணிவர அனுமதிக்கின்றனர். இது ஹறாமாகும். நாளை மறுமையில் நிச்சயமாக இதற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். ஆடை என்பது ஒரு மனிதனின் ஆளுமையிலும், ஒழுக்கத்திலும் அதிக தாக்கத்தைச் செலுத்தும் அம்சமாகும் என்பதைக் கவனத்தில் கொண்டு குழந்தைகளின் ஆடை விடயத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும்.


சிநேகம் கொள்ளுதல்:



பெரியவர்களிடமிருந்து அறிவையும், ஒழுக்கத்தை யும், சமூகப் பண்பாட்டையும் பெற்றுக்கொள்ளும் விதமாகச் சிறுவர்கள் பெரியவர்களுடன் சினேகம் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளனர். இளம் பிராயத்தினருடன் சமூக அந்தஸ்த்துப் பெற்ற பெரியவர்கள் நெருக்கமாகப் பழகும் போது அவர்கள் மகிழ்வடைகின்றனர். அதைத் தமக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகின்றனர். தாமும் சமூகத்தில் மதிக்கத்தக்க பிரஜையாக மாறிவிட்டதாக உணர்கின்றனர். இந்த வகையில் சமூக-சமயப் பெரியவர்கள் சிறுவர்களுடன் சிநேகம் கொள்வது அவர்களது ஆளுமையை விருத்தி செய்யும். இந்த வகையில் நபி(ஸல் ) அவர்கள் இளம் சிறுவர்களுடன் சிநேகமாகப் பழகியுள்ளார்கள். அவர்களது அறிவுக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப அவர்களுக்குப் போதனை செய்துள்ளார்கள். அனஸ், இப்னு உமர், இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் என நபி) அவர்களின் சினேகத்தைப் பெற்ற சிறுவர்கள் ஏராளம் உள்ளனர்.


ஒரு நாள் நபி(அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி ) அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போது, "சிறுவனே! நான் உனக்குச் சில வார்த்தைகளைக் கற்றுத் தருகின்றேன். நீ அவற்றைப் பேணிக்கொள்! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். நீ அவற்றைப் பேணிக்கொள்! அவனை உன் முன்னால் காண்பாய். நீ பிரார்த்தித்தால் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். நீ பாதுகாவல் தேடினால் அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பாதுகாவல் தேட வேண்டும். அறிந்துகொள்! மனித சமூகம் ஒன்றுசேர்ந்து உனக்கு உதவ முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு எழுதியதைத் தவிர அதிகமாக எந்த உதவியையும் செய்திட முடியாது. அவ்வாறு மனித சமூகம் உனக்குத் தீங்கு செய்ய எண்ணி விளைந்தாலும் உனக்கென அல்லாஹ் விதித்ததைத் தவிர அதிகமாக எந்தத் தீங்கையும் அவர்களால் செய்து விட முடியாது. பேனைகள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன” என நபி(ஸல் ) அவர்கள் கூறினார்கள்.


இவ்வாறே ஒரு முறை பழ்ல் இப்னு அப்பாஸ்(ரலி ) என்ற சிறுவர் நபியவர்களுடன் வாகனத்தில் இருந்தார். ஒரு பெண் நபி (ஸல் ) அவர்களிடம் மார்க்க விடயம் தொடர்பாகக் கேள்வி கேட்டார். பழ்ல் அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார். நபி(ஸல் ) அவர்கள் அந்த இளைஞரின் முகத்தை மறுபக்கம் திருப்பி விட்டார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களில் காண முடிகின்றது. இவை நபி (ஸல் ) அவர்கள் இளம் ஸஹாபாக்களுடன் கொண்டிருந்த இறுக்கமான சினேகத்திற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

கருத்துகள்