🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

குழந்தைகளின் ஆளுமை (விருத்திக்கு அழகிய (வழிகாட்டல்)

 


குழந்தைகளின் ஆளுமை (விருத்திக்கு அழகிய (வழிகாட்டல்)


(அஷ்ஷெய்க் SHM இஸ்மாயில் ஸலபி)


இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடிய ஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் "ஹிதாயத்” எனும் ஆன்மீக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மீக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம்.


பிரார்த்தனை:


நபி(ஸல் ) அவர்கள் தமது எதிரிகளின் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காகக் கூடப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இது எதிர்கால சந்ததிகளின் சீர் திருத்தத்திற்கு அவர்கள் வழங்கிய முக்கியத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.


நபி(ஸல் ) அவர்கள் தாயிப் நகருக்குப் பிரச்சாரத்திற்குச் சென்ற போது, அம்மக்கள் நபி() அவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கினர். நபி() அவர்களின் பொன்னான மேனியில் ஏற்பட்ட காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தால் அவர்களின் பாதணிகள் தோய்ந்து போகும் அளவுக்குத் தாக்கப்பட்டார்கள்.


அப்போது அவர்கள் செய்த பிரார்த்தனை உருக்கமானதாகும். அப்போது அல்லாஹ்தஆலா நபியவர்கள் விரும்பினால் அந்த மக்களை அழித்து விட மலைக்குப் பொறுப்பான மலக்கை அனுப்பினான்.


எனினும் நபி (ஸல்) அவர்கள்,


"இவர்கள் இல்லாவிட்டாலும் இவர்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனை மட்டும் வணங்குபவர்கள் உருவாக வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்" எனக் கூறினார்கள்.


தனது எதிரிகளின் குழந்தைகள் கூட அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களாக உருவாக வேண்டும் என நபி(ஸல் ) அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். நாம், “நமக்குச் சந்ததி தேவை!”, "எனக்குப் பேரப்பிள்ளை தேவை!”, "எனக்கு ஆண் பிள்ளை தேவை!” என்றுதான் ஆசைப் படுகின்றோம்; அதற்காகத்தான் பிரார்த்திக்கின்றோம், நேர்ச்சை செய்கின்றோம். என்றாவது, ஒரு நாள் "அல்லாஹ்வுக்கு இணை வைக்காது!", "அவன் ஒருவனை மட்டுமே வணங்கும் சந்ததி தேவை!" என்று பிரார்த்தித்துள்ளோமா? எனச் சற்று சிந்தித்துப் பாருங்கள்!


நபி(ஸல் )அவர்கள் குழந்தையின் உருவாக்கம் ஷைத்தானியத்திலிருந்து உருவாகாமல், ஆன்மீகத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று வழிகாட்டினார்கள்.


உங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தாம்பத்தியத்திற்காகச் சென்றால்


''பிஸ்மில்லாஹ்! அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா "


பொருள்:- "யா அல்லாஹ்! எம்மை விட்டும், எமது (இந்த உறவின் மூலம்) எமக்கு நீ வழங்கும் குழந்தையை விட்டும் ஷைத்தானைத் தூரப்படுத்துவாயாக!'


என்று ஓதினால் அவர்களுக்குக் கிடைக்கும் குழந்தையை ஷைத்தான் அடைய மாட்டான் என்று கூறினார்கள்.


இந்த துஆவை ஓதி எமது சந்ததிகளை ஆன்மீகத்தின் அடித்தளத்தில் உருவாக்கினோமா? அல்லது ஷைத்தானின் அடிப்படையில் உருவாக்கி னோமா? என்பதை அனைவரும் ஒரு முறை சிந்தித்துப் பார்ப்பது சிறந்ததாகும்.


கருவறைக் குழந்தைக்கும் துஆ:


கருவில் குழந்தை நீர்த் துளியாக இருக்கும் போதே நபி(*) அவர்கள் அதற்காகப் பிரார்த்தித்துள்ளார்கள்.


அபூதல்ஹா() அவர்கள் பயணத்தில் இருக்கும் போது அவரது குழந்தை மரணித்து விட்டது. அவர் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி மரணச் செய்தியைக் கூறாது, அவருக்கு உணவளித்து, அன்று இல்லறத்திலும் ஈடுபட்டனர். ஈற்றில் மரணச் செய்தியைக் கூறினார்கள். இது குறித்து அபூதல்ஹா நபி(ஸல் அவர்களிடம் கூறிய போது, ‘உங்கள் இருவரின் இரவிலும் அல்லாஹ் அருள் செய்வானாக!' என்று பிரார்த்தித்தார்கள்.


நண்பரின் குழந்தை கருவில் உருவான போதே அதற்காகப் பிரார்த்தித்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையின் பலனை அவர் அடைந்தார் என்று வரலாறு கூறுகின்றது.


கருவறையிலிருந்தே கரிசனை ஆரம்பம்:


இன்று "சிறுவர் உரிமை” பற்றிப் பலவாறு பேசுகின்றனர். குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் நலன் குறித்து நபி(ஸல் அவர்கள் அக்கறை செலுத்தியுள்ளார்கள். இஸ்லாமிய சட்ட வரையறைகளும் இதை எமக்கு உணர்த்துகின்றன.


தண்டனையைத் தள்ளிப் போடல்:


ஒரு பெண் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்து அவள் கர்ப்பிணியாகவும் இருந்தால், குழந்தையின் நலன் நாடி அவளது தண்டனை தள்ளிப் போடப்படும்.


ஒரு பெண் தான் விபச்சாரம் செய்ததாகவும், அதனால் தான் கருவுற்றுள்ளதாகவும் கூறுகின்றாள். நபி (ஸல் )அவளுக்குத் தண்டனையளிக்காது 'குழந்தையைப் பெற்று விட்டு வா!' என்கின்றார்கள். பெண்ணின் பொறுப்புதாரியை அழைத்து, 'இந்தப் பெண்ணுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்!' என்றும் கூறுகின்றார்கள்.


அந்தப் பெண், குழந்தையைப் பெற்ற பின்னர் வந்த போது குழந்தை பால் மறந்ததன் பின்னர் வரச் சொன்னார்கள். குழந்தைக்குப் பால் மறந்து ரொட்டி உண்ணும் பருவத்தில் அந்தப் பெண் வந்த போது அவளுக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.


தாய் செய்த தவறுக்குத் தண்டனை அளிக்கும் போது, தவறுடன் சம்பந்தப்படாத குழந்தை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் நபியவர்கள் காட்டிய அக்கறை இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகின்றது. அத்துடன் குழந்தையின் தாய்ப்பால் அருந்தும் உரிமைக்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவமும் இங்கு தெளிவாகின்றது. ஆனால் இன்றைய சூழலில் ஒரு தாய் தவறு செய்து விட்டு தனது தவறுக்குக் கருவறையையே கல்லறையாக்கிக் குழந்தையைக் கொல்கிறாள். பெற்ற பிள்ளையைக் காட்டிலும், கழிவு நீர் ஓடும் காண்களிலும் வீசி எறிகிறாள். கழுத்தை நெரித்துக் கொல்கிறாள். குற்றம் செய்தவள் தப்புவதற்காக எவ்விதக் குற்றமுமற்ற குழந்தைகள் கொல்லப்படும் கொடூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.


கடமைகளை நீக்குதல்:


இஸ்லாம் விதித்த கடமைகள் சிலவற்றைக் கூட குழந்தை நலன் நாடித் தாய்க்கு இஸ்லாம் நீக்கி விடுகின்றது. ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்து அல்லது பாலூட்டும் தாயாக இருந்து, தான் நோன்பு நோற்பதால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனில் அவள் நோன்பை விட்டு விட இஸ்லாம் அனுமதித்துள்ளது. இவ்வாறே ஜமாஅத் தொழுகை நடக்கும் போது குழந்தைகளின் அழுகுரல் கேட்டால் நபி(ஸல்) அவர்கள் ஓதுவதைச் சுருக்கி விடுவார்கள் என்பதை ஹதீஸ் மூலம் அறிகிறோம்.


சலுகை அளித்தல்:


ஒரு பெண்ணை அவளது கணவன் முதல் இரு தலாக் கூறினால், அவளுக்கு இத்தாக் காலம் முடியும் வரை செலவு கொடுக்க வேண்டும். மூன்றாம் தலாக் கூறி விட்டால் செலவு கொடுக்க வேண்டியதில்லை. இருப்பினும் மூன்றாம் தலாக் கூறப்பட்ட பெண் கர்ப்பிணியாக இருந்தால், குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவளுக்கு அவன் வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் சட்டமாகும். இது 'சிறுவர் உரிமை' கருவறையில் இருந்தே ஆரம்பிக்கின்றது என்பதையும், சிறுவர் நலனில் இஸ்லாம் எவ்வளவு அக்கறை செலுத்துகின்றது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.


ஆணோ, பெண்ணோ குழந்தை என்பது அருளே!:



சிலர் பெண் குழந்தையென்றதும் முகம் சுளிக்கின்றனர். குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அல்லாஹ்வின் மிகப் பெரும் அருள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பராமரிப்பில் ஆண்-பெண் பேதம் என்பது இருக்கவே கூடாது.


சிலர் "அதிக குழந்தை அபாக்கியம்!” என எண்ணி, உருவான கருவையும் கலைத்து விடத் துடிக்கின்றனர். அல்குர்ஆன் குழந்தை பற்றிக்கூறும் இடங்களில் நற்செய்தி (19:7, 11:61, 16:59) என்றே கூறுகின்றது. எனவே, குழந்தைச் செல்வத்தைப் பாக்கியமாகப் பார்க்க வேண்டும். ஆண், பெண் பேதம் பார்க்கலாகாது.


நபிகளாரின் தஹ்னீக்:


வாயில் நபி(ஸல் ) அவர்கள் குழந்தைகள் விடயத்தில் காட்டிய அக்கறையைத் தெளிவுபடுத்தும் அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். "தஹ்னீக்” என்பது ஈத்தப்பழம் அல்லது இனிப்பான ஒரு பொருளை வாயில் மென்று மென்மைப்படுத்தி பிறந்த குழந்தையின் வைப்பதைக் குறிக்கும். நபி(ஸல் ) அவர்கள் இவ்வாறு குழந்தைகளுக்குச் செய்து அவர்களின் பரகத்திற்காக துஆவும் செய்துள்ளார்கள். இவ்வாறு இனிப்பூட்டுவது குழந்தைகளுக்கு நலனளிக்கின்றது என்றும் அவர்களின் தாங்கும் சக்தியை அதிகரிக்கின்றது என்றும் நவீன மருத்துவம் கூறுகின்றது.



விபச்சாரத்தில் பிறந்த குழந்தை என்றாலும் உரிமை பறிக்கப்படக்கூடாது:


நபி() அவர்கள் குழந்தைகளின் உரிமை விடயத்தில் அவதானமாக நடந்துகொள்ளுமாறு ஏவியுள்ளார்கள். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹதீஸில் விபச்சாரத்தில் பிறந்த ஒரு குழந்தை என்றாலும் அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றுவதால் கூட தாயின் பாலைக் குடிக்கும் உரிமையை இழந்துவிடக் கூடாது என்பதிலே கரிசனை காட்டியுள்ளார்கள்.


அகீகா வழங்குதல்:


குழந்தையின் ஆளுமையையும் ஆன்மீக அல்லாஹ்வின் அருளையும் பெற அகீகா எனும் விருந்தோம்பல் வழி செய்கின்றது.


''நாம் ஜாஹிலிய்யாக் காலத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டை அறுத்து அதன் இரத்தத்தைக் குழந்தையின் தலையில் பூசுவோம். இஸ்லாம் வந்த பின்னர் ஆட்டை அறுத்துப் பகிர்வோம். குழந்தையின் தலையை மழித்து அதற்கு குங்குமத்தைப் பூசுவோம்” என அபூபுரைதா (ரலி ) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, குழந்தை பிறந்து 7 ஆம் நாளில் ஆட்டை அறுத்து விருந்து வழங்குதல் அல்லது மாமிசத்தைப் பகிர்தல் நபிவழியாகும்.


அடகு "ஒவ்வொரு குழந்தையும் ஆகீகாவுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏழாம் நாளில் அதற்காக அறுக்கப்பட்டு தலை மழிக்கப்படும். குழந்தைக்குப் பெயர் சூட்டப்படும் என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.” (திர்மதி, நஸஈ)


எனவே அகீகா வழங்கி அல்லாஹ்வின் அருளைப் பெறுவதும் குழந்தை வளர்ப்புடன் சம்பந்தப்பட்டதாகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்