கண்ணேறு கலக்கம் வேண்டாம்

 


கண்ணேறு கலக்கம் வேண்டாம்


பெண்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்குமிடையில் ஏதோ பிரிக்க முடியாத பிணைப்பு உள்ளது. எல்லா மூட நம்பிக்கைகளினதும் ஏகபோக உரிமையாளர்களாக அவர்கள் திகழ்கின்றனர். இதற்கு சமூக, சமய ரீதியில் காரணங்கள் உள்ளன. அந்த விடயத்தில் ஆண்கள்தான் குற்றவாளிகளாக உள்ளனர் என்பதும் கசப்பான உண்மையாகும்.


"கண்ணேறு உண்மையென்பது நபிமொழியாகும்."


(புஹாரி: 5740, 5944)


உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். நபி எனது வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவருடை முகத்தில் கருஞ் சிவப்பான படர்தாமரைபொன்று இருந்தது. நபியவர்கள் இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில் இவன் மீது கண்மோறு பட்டிருக்கிறது என்று கூறினார்கள்."


(புஹாரி: 5739)


சகுனம், தாயத்து போன்ற அடிப்படையே இல்லாத நம்பிக்கையாக கண்ணேறு இல்லையென்பது இதிலிருந்து புலப்படுகின்றது. கண்ணேறு உண்மை என்பது மார்க்க நிலைப்பாடு எனவே, கண்ணேறு எண்பது வெறும் மூடநம்பிக்கை அல்ல. எனினும் கண்ணேறு தொடர்பான சில தவறான போக்குகள் எமது பெண்களிடம் ஒட்டிக்கொண்டுள்ளன.  


கண்ணேறு உண்மை என்பதற்காக எல்லாவற்றை யும் கண்ணூறுடன் கட்டிப் போட்டுக் கொண்டு கதைக்க முடியாது. எல்லா குழந்தைகளுக்கும் உணவு கொடுப்பதில்  பெரிய தொல்லை தாய்மார்களுக்குப்  உள்ளது. பெரும் கஷ்டப்பட்டுத்தான் உணவு ஊட்ட வேண்டியுள்ளது. இது இயம்பானது. ஆனால், விளையாட்டு, பசியின்மை. உணவில் நாட்டமின்மை, இனிப்பு அதிகமாக உண்பதால் பசியெடுக்காமை எனப் பல காரணங்களால் பிள்ளை உணவில் ஈடுபாடு காட்டாமல் இருக்கலாம். ஆனால், பின்னை உணவில் ஈடுபாடு காட்டாமைக்கு ஆயிரம்ன் காரணங்கள் இருந்தாலும் சில தாய்மார்கள் "எந்த சனியண்ட கண் பட்டுத் தொலஞ்சிதோ தெரியாது! புள்ள சாப்பிடுதே இல்ல" என் என்று கூறுகின்றார்கள்.


சில போது "அன்றைக்குப் பிள்ளை சாப்பிடும் போது அந்தக் கிழவிதான் பார்த்தாள். அவடை கண் பட்டுத்தான் பிள்ளை சாப்பிடுதே இல்லை" என்று கூறுவார்கள்.


இவ்வாறே நன்றாகப் படிக்கக்கூடிய சில பிள்ளைகள் சில போது வீட்டில் தொலைக்காட்சியில் காலத்தைக் கழிப்பதாலும், விளையாட்டு, பெற்றோரின் கவனயீனம் போன்ற காரணங்களாலும் படிப்பில் பின்னடைவை எதிர்கொள்ளலாம். பிள்ளையின் பின்னடைவுக்கு என்ன காரணம் என்று கண்டு பிடித்து அதைக் கனைவதை விட்டுவிட்டு "அண்டைக்கு அவள் வந்த நேரம் பிள்ளை பாட்டுப் படிச்சிச்சி. ஒங்கட புள்ள நல்லா பாட்டுப் படிக்குது! எங்கட புள்ளைக்கு ஒன்னும் சொல்லிக்கொடுத்தில்ல என்று சொல்லும் போதே நினைச்சேன், அவன்ற கண் பட்டதால என்ர புள்ள இந்த முறை படிப்புல லீக் ஆயிட்டான்" என்று கூறுவதைக் காணலாம்.


இப்படியே அனைத்துப் பிரச்சினைக்கும் கண்ணேறுதான் காரணம் என்று கற்பனை பண்ணும் பெண்களும் உள்ளனர். இது தவறான போக்காகும். ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் உங்களது பிள்ளை, கணவன். அவர்களது படிப்பு. தொழில் இவற்றில் கண்படுவதை வேறு வேலையில்லையென்று அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்கள


கண்ணேறு உண்மையென்பது தனி விடயம். அதற்காக எதையெடுத்தாலும் கண்ணூறைக் காரணம் காட்டுவதென்பது அறிவீனமாகும்.


மனிதனை சோதிப்பதற்காக, அவனது பாவங்களை நீக்குவதற்காக. சுவனத்தில் அவனது அந்தஸ்தை உயர்த்துவதற்காக காரணங்களுக்காக மனிதனுக்கு சில  கஷ்டங்களை அல்லாஹ் சோதனையாக வழங்குவான் சில போது ஏற்படும் நோய்களுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடலாம். சில போது மருத்துவர்களே என்ன? எப்படி? எனத் தலையைப் பியத்துக்கொள்வர். ஆனால், எங்களது பெண்களுக்கு இதற்கெல்லாம் ரெடிமெட் காரணம் ரெடியாக இருக்கும். அது வேறொன்றுமில்லை, "ஏதேனும் தனும் கண்பட்டுத் தொலைத்திருக்கும். அதுதான் காரணம் வேறு ஒன்றும் இல்லை" என்று அடித்துக் கூறிவிடுவர்.


இது ஒரு புறம் என்றால் சில பெண்கள் அடுத்தவர்களது முன்னேற்றங்களைப் பொறாமைக் கண்ணுடன் பார்த்தே பழகி விட்டனர்.


ஒரு மரத்தில் அதிகமாகக் காய்த்திருக்கிறது. பார்த்தால் "மாஷா அல்லாஹ்" என்று அடுத்தவர்கள் நல்லா இருப்பது பிடிக்காதே! (ஆ.ஆ.) என்றொரு ஏக்கம்) 'காய்ச்சிப் புழுத்துப் போயிருக்கிறது இலைகளை விட காய்தான் அதிகம்! பாரம் தாங்க ஏலாம கொப்பு உடையப்பாக்குது!" என்பர்


அதுதான் அந்த மரத்தில் காய்க்கும் காய்க்கும் கடைசி முறையாக இருக்கும் மரம் பட்டுப் போவதைப் பார்க்கின்றோம். 16 ஆம் அத்தியாயத்தில் ஒரு சம்பவம் கூறப்படுகின்றது.


இரண்டு நண்பர்கள் ஒருவருக்கு இரண்டு தோட்டங்கள். அவர் இறை நிராகரிப்பாளர் அவர் தனது தோட்டங்கள் பற்றிப் பேசும் போது இது அழியாது என அவரே பெருமையாகப் பேசிக்கொள்கின்றார். அவர் மறுநாள் வந்து பார்க்கும் போது தோட்டம் கருகிப்போயுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அவரது நண்பர் பின்வருமாறு கூறுகின்றார்.


உனது தோட்டத்துக்குள் நுழைந்தபோது அல்லாஹ் நாடியதே நடக்கும். அல்லாஹ்வால் தவிர எந்த ஆற்றலும் இல்லை என்று நீ கூறியிருக்கக் கூடாதா? உன்னை விட செல்வத்திலும், சந்ததியிலும் நான் குறைந்தவன் என்று நீ கருதினாய்.


[அல்குர்ஆன் 18:39]


"உனது தோட்டத்தை விட சிறந்த தோட்டத்தை என் இறைவன் எனக்கு வழங்கி, உன் தோட்டத்தின் மீது கணக்குத் தீர்ப்பதை வானிலிருந்து அனுப்பி அதை வழுக்கும் களிமண்ணாக ஆக்கிடக்கூடும்"


[அல்குர்ஆன் 18:40]




எனவே, மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றைக் கண்டால் "மாஷா அல்லாஹ்" என்று கூற வேண்டும். இந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அடுத்தவர்கள் மீது பொறாமை கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர்களுக்கு எம்மால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் தேவை


பிறரது கண்வோறு எம்மீது படுவது போன்றே எமது கண்ணேறு எம்மீதோ எமது குழந்தைகள் மீதோ பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். சில தாய்மார்கள் பிள்னைக்கு விளையாட்டுக் காட்டி நன்றாக உண்ணக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சி தாங்க முடியாமல் இன்றைக்குப் பிள்ளை தல்லா ஒரு பீங்கான் சாப்பிட்டான் என்று கூறுவர். சிலபோது இவர்களது கண்ணே பிள்ளைக்குப் பட்டுவிடலாம்.


எனவே, பிறர் மீது சந்தேகம் கொள்வதை விட்டு விட்டு நாம் சில அடிப்படைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.


1. அல்லாஹ்வின் மீது தவக்குல்  வைப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் நடக்காது. கண்ணேறு நாக்குவதென்றால் கூட அல்லாஹ்வின் நாட்டத்திற்கு அது உட்பட்டது. என்ற நம்பிக்கையில் தளம்பல் ஏற்பட்டுவிடக் கூடாது  எமது தேவைகள், பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அல்லாஹ்விடம் முறையிட வேண்டும். அவனிடம் கையேந்த வேண்டும். இதில் தனர்வோ. சோர்வோ ஏற்பட்டுவிடக் கூடாது.




பொறாமைக்காரன் பொறாமைப் படும் போது நேரும் நீங்குகளை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன் என அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது கட்டாயமாகும். 


சூராக்களை தினமும் ஓதி வர வேண்டும்.


 கண்ணேறிலிருந்தும்   குழந்தை களைப் பாதுகாப்பதற்காக நபி)அவர்கள் துஆச் செய்து வந்துள்ளார்கள்.


"அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளைக் கொண்டு எல்லா ஷைத்தான் களிடமிருந்தும். விஷப் பிராணிகளிடமிருந்தும், தீய  எண்ணத்துடன் தீண்டும் கண்ணேறிலிருந்தும் அவனிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன் எனும் துஆ  மூலம் ஹஸன், ஹுஸைன் (அவர்களுக்காக நபியவர்கள் பாதுகாவல் தேடியுள்ளார்கள். இவ்வாறே இப்ராஹிம் (அவர்கள் தமது புதல்வர்களான இஸ்மாயில்  (இஸ்ஹாக் () ஆகிய இருவருக்காகவும் துஆச் செய்ததாகவும் கூறினார்கள்."


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி ) ஆதாரம் புஹாரி 3371)


இது போன்ற துஆக்களை ஓதி  அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடலாம்.


குழந்தைகள்  விடயத்தில்     விழிப்புணர்வு தேவை!


இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தாய் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில் அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (சுதத்திரமாக வெளியே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும் (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டிவிடுங்கள். அப்போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில் ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்கமாட்டாள் என நபி() அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஸ்() ஆதாரம் புஹாரி 3304)


எனவே, இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.


வீட்டினுள் நுழையும் போது பிஸ்மி கூறுதல், வீட்டில் அதிகமாக குர்ஆன் ஓதுதல், குறிப்பாக ஸு றதுல் பகரா ஓதுதல் போன்ற வழிமுறைகள் மூலம் ஆன்மீகரீதியான பாதுகாப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


கருத்துகள்