🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

சத்தியத்தில் நிலைத்திருப்பதற்கான வழிமுறைகள்

 


சத்தியத்தில் நிலைத்திருப்பதற்கான வழிமுறைகள்




எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இறையருளும் சாந்தியும் இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!


ஒரு உண்மை முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய மேலான பண்பும் அவனுடைய உன்னதச் சிறப்பும் என்ன வெனில் இறைமார்க்கத்தில் உறுதியாக இருப்பதும் முஹம்மது (ஸல்) அவர்களின் நற்குணங்களைப் பேணு வதும் அவர்களைப் பின்பற்றி வாழ்வதும் தான்! இதில் எவ்விதத் தயக்கமும் இருக்கக் கூடாது. தற்காலிகமாக ஏற்படும் ஐயத்தினால் அல்லது கட்டுக்கடங்காத மன இச்சையினால் அல்லது பரவலான குழப்பத்தினால் தடம் புரண்டுவிடக் கூடாது. ஏனெனில் சத்தியத்திற்கும் அசத்தி யத்திற்கும் மத்தியில் தடுமாறுவதும் நிரூபணமான நபி வழியைக் கடைபிடித்த பின்பு கைவிடுவதும் நம்பிக்கை யாளர்களின் பண்பாக இருக்க முடியாது. மாறாக அது நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களின் பண்பாகும். இவர்கள் தமது சொல்லுக்கும் செயலுக்குமிடையில் முரண்படக்கூடியவர்கள் மட்டுமல்ல வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தடம் புறளக்கூடியவர்கள் என்று திருக் குர்ஆன் கூறுகிறது.


‎‫وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنۡيَا وَالآخِرَةَ ذَلِيْكَ اللَّهُوَ ﴾ [அல்லாஹ் : 7]‬‎


விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்கு பவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைத்தால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும் மறுமையிலும் அவன் நஷ்ட மடைந்து விட்டான். இதுவே தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)


உண்மையான வழிமுறையைப் பற்றிப் பிடிப்பதும் அதில் உறுதியாக இருப்பதும் மிக முக்கியமான விஷயங் களாகும். இவற்றைப் பேணிக் கொள்வதும் இதற்காகப் பாடுபடுவதும் ஒரு நம்பிக்கையாளனின் கடமையாகும். இவ்விரண்டும் மிகப் பெரிய அருட்கொடைகளாகும். மனிதன் அவற்றுக்கு நன்றி செலுத்தவும் அவற்றைப் பேணி நடக்கவும் கடமைப்பட்டுள்ளான்.


பற்றிப் பிடித்தல் என்பதன் கருத்து அல்லாஹ்வுக்கு அடிபணிவதையும் வழிபடுவதையும் பற்றிப் பிடித்தலாகும். மேலும் அவன் ஏவிய கடமைகளை நிறைவேற்றுவதும் அவன் விலக்கியவற்றிலிருந்து விலகியிருப்பதும் அதில் நிலைத்திருப்பதும் ஆகும்.


‎‫عَنْ سُفْيَانَ بۡنِ عَبْدِ اللهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهُ قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا عَنْهُ أَحَدًا بَعْدَكَ قَالَ قُلْ آمَنْتُ بِاللهِ ثُمَّ اسْتَقِمۡ (م/ ٣٨ ، حم / ١٤٨٦٦٦٦٦)‬‎


ஸுப்யான் பின் அப்துல்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள்- உங்களுக்குப் பிறகு யாரிடமும் அது பற்றி நான் கேட்க வேண்டியது வரக் கூடாது' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டேன் என்று கூறி, பிறகு அதில் உறுதியாக இரு" என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் (38), அஹ்மத் (14869)


இந்ந பிமொழியில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்)அவர்கள் ஏவியுள்ளார்கள். உறுதியாக இருத்தல் என்பது வழிபிறழாமல் குர்ஆன் மற்றும் நபிவழிக்கு மாற்றம் செய்யாமல் நேரான பாதையில் செல்வதாகும். பற்றிப் பிடித்தல் என்பதன் உண்மை நிலை இதுவேயாகும்.


அவ்வாறாயின் பற்றிப் பிடித்தல் என்பது அல்லாஹ்வின் மார்க்கத்தை வெளிப்படையிலும் அந்தரங்கத்திலும் பற்றிப் பிடித்து வாழ்வதாகும். அதாவது கொள்கை கோட் பாடுகளில், வணக்க வழிபாடுகளில், ஒழுக்கப் பண்பாடு களில், கொடுக்கல் வாங்கல்களில் இறை வரம்புகளை முழுமையாகப் பற்றிப் பிடித்தலாகும். இதுவே பரிபூரண மான பற்றிப் பிடித்தலாகும். பள்ளிவாசலில், தொழிலில்,கடைவீதியில், வீட்டில் என வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் இறைமார்க்கத்தைப் பற்றிப் பிடிக்க வேண்டும்.


‎‫قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَانِي اللَّهِ رَبِّ الْعَالَمِينَ ، لَا شَرِيَكَ لَا شَرِيَكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ ﴾ [الأنعام : ١٦٢، ١٦٣]‬‎


எனது தொழுகை, எனது குர்பானி, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் வுக்கே சொந்தமாகும். (அல்குர்ஆன் 6:162,163)


அடியான் பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றிப் பிடித்து வாழும்போது அவன் ஒரு புதிய வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டதாக உணர்கிறான். வீண் விளையாட்டுக்கள் நிறைந்த வாழ்க்கைக்கும், அல்லாஹ்வுக்கு மாறுசெய்யக்கூடிய, கட்டுப்பாடற்ற, வரம்பு மீறக்கூடிய வாழ்க்கைக்கும் அவன் விடை கொடுத்து விட்டதாகவும் மேலும் அல்லாஹ்வை நோக்கி அவன் வந்துவிட்டதாகவும் உணர்கிறான். எனவே புதிய வாழ்க்கைக்கு ஏற்றதொரு வாழ்க்கைச் சூழலைத் தனக்காக அவன் உருவாக்கிக் கொள்வதும் தனது வாழ்வின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியமாகும்.


அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விட்டு விட்டு இஸ்லாமியப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். அவன் வாசித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையைத் தூக்கி எறிந்து விட்டு இஸ்லாமியப் பத்திரிக்கையை வாங்கிப் படிக்க வேண்டும். அவன் கேட்டுக் கொண் டிருந்த பாட்டுக் கேஸட்டுகளுக்கும் வேறு பல கேஸட்டு களுக்கும் பதிலாக இஸ்லாமியக் கேஸட்டுகளைக் கேட்க ஆரம்பிக்க வேண்டும். தூக்கமும் அது போலத் தான். தாமதமாகத் தூங்கிக் கொண்டிருந்தால் அதை மாற்றி பஜர் தொழுகைக்கு விழிக்கின்ற வகையில் சீக்கிரமாகத் தூங்க ஆரம்பித்துவிட வேண்டும். தவறான பாதையில் தன்னுடன் வந்து கொண்டிருந்த நண்பர் களுக்குப் பகரமாக நேர்வழியில் செல்கின்ற, சாத்தியத் திற்குத் துணை நிற்கின்ற நண்பர்களை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறே மற்ற விஷயங்களிலும் நடந்து கொள்ள வேண்டும்.


இறைமார்க்கத்தை உறுதியாகக் கடைபிடிப்பது தான் நேரான பாதையில் உறுதியுடனும் சீராகவும் நடக்க விரும்பும் உண்மையான ஒவ்வொரு முஸ்லிமின் அடிப் படைத் தேட்டமாகும். அதிலும் குறிப்பாக குழப்பங்கள் அதிகமாகி, பாலுணர்வுகளைத் தூண்டக்கூடிய விஷயங்கள் பரவலாகி, வழிபிறழ்ந்தவர்களும் தீய வழிக்குத் திரும்பியவர்களும் பல்கிப் பெருகியிருக்கின்ற இந்தக் காலத்தில் இது மிக அவசியமாகும். சிலர் பயத்தால் வழிபிறழ்ந்துள்ளனர். இன்னும் சிலர் விரும்பி வழிபிறழ்ந்துள்ளனர். வேறு சிலர் அறியாமையால் வழி பிறழ்ந்துள்ளனர்.


இந்தக் காலம் எத்தகையது எனில் இந்தக் காலத்தில் உண்மைகள் மாறிவிட்டிருக்கின்றன, கருத்துகள் தலை கீழாக மாறிவிட்டிருக்கின்றன. குழப்பங்கள் அதிகரித்து விட்டன. பாலுணர்வுகளைத் தூண்டக்கூடிய விஷயங்கள் தொடர்கதையாகி விட்டிருக்கின்றன, பாழ்படுத்தக்கூடிய வழிகள் எளிதாகிவிட்டிருக்கின்றன. இவ்வுலகம் தன் அற்பமான இன்பங்களால் மனித உள்ளங்களைக் கவரக் கூடியதாகி விட்டது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் காருண்ய நபியின் அந்த வழிகாட்டுதல் நமக்கு அதிகம் தேவையாக ஆகிவிட்டது! அதுதான் ஒரு முஸ்லிமை வழிபிறழ்தல்கள் மற்றும் தீய நடத்தைகளை விட்டும் தூரமாக்கும். "அல்லாஹ்வின் அடியார்களே! உறுதியுடன் இருங்கள்!" என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம் -2937)


‎‫.. يا عباد الله فاثبتوا ... م / ۲۹۳۷)‬‎


துன்பங்கள் மற்றும் சோதனைகளின் போதும் மாறி வரும் இவ்வுலகின் இன்பங்களும் பாலுணர்வுகளைத் தூண்டக்கூடிய விஷயங்களும் அதிகமாகும் போதும் உறுதியுடன் இருப்பது நேர்வழி பெற்ற அல்லாஹ்வின் அடியார்களின் அடையாளங்களில் ஒன்றாகும். உண்மையில் இந்தக் குழப்பங்கள் முஃமின்களைப் பொறுத்தவரையில் அவர்களைப் பக்குவப்படுத்தக் கூடியது என்பதையும், பராமுகமாகவும் அலட்சியமாகவும் இருப்பவர்களுக்கு சோதனை என்பதையும் நேர்வழி பெற்ற அந்த அடியார்கள் அறிந்தே வைத்துள்ளனர்.


இறைநம்பிக்கை கொண்ட மக்களின் இறைநம்பிக்கையை அத்துன்பங்கள் மாற்றிவிடாது. மாறாக அவர்கள் செல்கின்ற பாதை பாதுகாப்பானது என்ற திருப்தியையும் அவர்கள் செல்கின்ற வழிமுறையில் உறுதியுடன் இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு அதிகப் படுத்தவே செய்யும்.


‎‫الم ، أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا أَمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ، يُفْتَنُونَ، مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الكَاذِبِينَ: ﴾ [العنك‬‎


நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோ ரையும் அல்லாஹ் அறிவான். பொய் பேசுவோரையும் அறிவான். (அல்குர்ஆன் 29:2)


உறுதியாக இருப்பதன் கருத்து இது தான்: அதாவது மனிதன் தொடர்ந்து நேர்வழியில் நடைபோட வேண்டும். நற்செயல்களைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். மேலும் அவர்கள் இன்னும் அதிகம் செய்வதற்கு முனைப்பு காட்ட வேண்டும். அவனது இன்றைய தினம் நேற்றைய தினத்தை விடச் சிறந்ததாகவும் அவனது நாளைய தினம் இன்றைய தினத்தை விடச் சிறந்த தாகவும் இருப்பதற்கு அவன் தொடர்ந்து நல்லார்வம் காட்ட வேண்டும். அவனுடைய ஒவ்வொரு நாளும் அவனை மறுமையின் பக்கம் நெருக்கி வைக்கின்ற வகையிலேயே நகர வேண்டும். என்றாலும் சிறிது காலங்கள் கடந்த பிறகு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உற்சாகமும் உத்வேகமும் குறைவதென்பது, தவிர்க்க முடியாதது. ஆயினும் இறைநம்பிக்கையாளன் தனது மனத்துடன் தொடர்ந்து போராட வேண்டும். அவன் தொடர்ந்து நற்செயல்களைச் செய்வதிலும் மறுமையின் வெற்றிக்கும் ஈடேற்றத்திற்கும் முந்துவதிலும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.




‎‫يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلْكُوا اللَّهَتُ)‬‎


‎‫[آل عمران: ۲۰۰]‬‎


நம்பிக்கை கொண்டோரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள்! பொறுமையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள். உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன் 3:200) سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ وَالْأَرْضِ ﴾ [الحديد: ٢١]‎


உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சொர்க்கத் திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. (அல்குர்ஆன் 57:21)


என்னதான் மனிதன் சோர்ந்து போனாலும் ஒரு குறிப் பிட்ட நிலையை விட்டு அவன் கீழே இறங்கிவிடுவதை அல்லது அதில் குறைபாடு செய்வதை ஏற்க முடியாது. பாவங்களில் அவனது பாதம் சருக்கி விட்டால் உடனே அவன் அதிலிருந்து மீண்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டும்.


முஸ்லிம் தனது வாழ்க்கையில் சத்தியத்தில் நிலை குலையாதிருப்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழக்கூடிய வகையில் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளை அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். இந்தப் பிரச்சனையின் முக்கி யத்துவத்தை முஸ்லிம் உணர்ந்து கொள்ள வேண்டும் உன்பதற்காகத்தான். சான்றோர்களான நபித்தோழர்கள் மற்றும் தாபிஈன்களின் உயர்ந்த வாழ்க்கை நிலை நோக்கி மீண்டு வருவதற்காக முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அவற்றை அல்லாஹ் கூறியுள்ளான். இறைமார்க்கத்திலும் நல்லறம் புரிவதிலும் உறுதியுடன் நிலைகுலையாதிருப்பதன் முக்கி யத்துவம் பின்வரும் விஷயங்களில் அமைந்துள்ளது.


முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்கால சமூகச் சூழ்நிலை, விதவிதமான குழப்பங்கள், பாலுணர்வு களைத் தூண்டும் விஷயங்கள், இவற்றின் நெருப்பைக் கொண்டு தங்களுக்குத் தாங்களே சூடு போட்டுக் கொள் கிறார்கள்! வகை வகையான சந்தேகங்களும் மன இச்சைகளும்; இவற்றின் காரணமாகத் தான் இறை மார்க்கம் அந்நியமாகிப் போயுள்ளது! அதைக் கடைப் பிடித்து வாழ்வோர் ஆச்சியத்திற்குரிய நிலையை உவமையை அடைந்துள்ளனர். நபி (ஸல்)அவர்கள் கூறியது போல: ‎‫عَنْ أَنَسِ بۡنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ الله ﷺ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانُ الصَّابِرُ دِينِهِ كَالْقَابِضِ عَلَى الْجَمْرِ (ت/ ٢٢٦٠)‬‎


அதாவது "மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது மார்க்கத்தைப் பேணுவதில் பொறுமையாய் இருப்பவர் நெருப்புக் கங்கைக் கையில் பிடித்திருப்பவரைப் போல் ஆகிவிடுவார்." (திர்மிதி 2260)


கடந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விட இன்றைய முஸ்லிம்களுக்குத்தான் சத்தியத்தில் நிலைத் திருப்பதற்கான வழிமுறைகள் அதிகம் தேவைப்படு கின்றன என்பதில் அறிவுடையோர் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இவ்வுறுதியைப் பெறுவதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. காரணம் காலம் கெட்டுக்கிடக்கின்றது. உண்மையான சகோதரர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள். உதவக்கூடிய வர்கள் பலவீனமாகவும் ஒத்துழைக்கக்கூடியவர்கள் குறைவாகவும் இருக்கிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்