🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

அண்ணலாரின் பொன்மொழிகள் !


 அண்ணலாரின் பொன்மொழிகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...


அனஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள்.


"அல்லாஹ், தன் அடியானுக்கு நல்லதை நாடிவிட்டால், அவனுக்கு உலகத்திலேயே தண்டனையைத் தீவிரமாக்குவான். அல்லாஹ் தன் அடியானுக்கு தீமை செய்ய நாடிவிட்டால், அவனது குற்றம் காரணமாக, அவனை விட்டும் (சோதனையைத்) தடுப்பாள். இறுதியில் மறுமை நாளில் அவனுக்கு அதை நிறைவேற்றுவான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


"கூலியில் மகத்தானது. கடும் சோதனையுடன் உள்ளதாகும். நிச்சயமாக அல்லாஹ். ஒரு கூட்டத்தை நேசித்தால், அவர்களை சோதிப்பான். ஒருவள் அதில் திருப்தி அடைந்தால், அவனுக்கு அல்லாஹ்வின்) திருப்தி உண்டு. மேலும் ஒருவன் கோபம் அடைந்தால், அவனுக்கு (அல்லாஹ்வின்) கோபம் உண்டு" என்று நபி (ஸல்) கூறினார்கள்.


(திர்மிதீ:  )2396 )



முஆத் இப்னு ஜபல் (ரழி) அறிவிக்கின்றார்கள்.


"ஒருவர் கோபத்தை வெளிப்படுத்த சக்தி இருந்தும் அவர் அதை அடக்கினால், மறுமை நாளில் படைப்புகளில் தலைமையானவர்களுடன் அவரை அல்லாஹ் அழைப்பான், இறுதியாக. அவர் விரும்பிய 'ஹூருல் அய்ன்' பெண்களைத் தேர்ந்தெடுக்கச் சலுகை தருவான்" என்று நபி (ஸல்) கூறினார்கள்.


(அபூதாவூ 4777, திர்மிதீ:2021. இந்த ஹதீஸ் 'ஹஸன்' ஹதீஸ் என இமாம் திர்மிதீ கூறுகிறார்கள்)



 அபூஹுரைரா ரழி) அறிவிக்கின்றார்கள்:


நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், "எனக்கு உபதேசம் செய்யுங்கள்" என்று கேட்டார். "கோபம் கொள்ளாதீர்" என்று நபி (ஸல்) கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். "கோபம் கொள்ளாதீர்" என்றே நபி (ஸல்) கூறினார்கள்.


(கி:6116)


‎‫‬‎


 அபூஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள்.


"ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு, அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும். இறுதியாக அவர் சோதனை மூலம் மன்னிப்பு ஏற்பட்டதால்) குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார்" என நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதீ:2399. இந்த ஹதீஸ் 'ஹஸன் ஸஹீஹ்' என்று திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்)


 அபூதர் என்ற ஜூன்துப் இப்னு ஜூனாதா (ஏழி, (அபூஅப்துர் ரஹ்மான் என்ற முஆத் இப்னு ஜபல் (ரழி) இருவரும் அறிவிக்கின்றார்கள்.


"நீர் எங்கிருந்தாலும், அல்லாஹ்வை அஞ்சுவீராக! தீமையைச் செய்தால்) தொடர்ந்து நன்மையைச் செய்வாயாக! அது தீமையை அழித்துவிடும். அழகிய குணத்துடன் மக்களுடன் பழகுவாயாக!" என்று நபி (ஸல்) கூறினார்கள்.


(திர்மிதீ:1987. இது 'ஹஸன்' என்று திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்)


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள்.


நான் நபி (ஸல்) அவர்களின் பின்னே (குதிரையில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள். "சிறுவரே! நிச்சயமாக நான் உமக்கு சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளை நீர் பேணுவீராக! உம்மை அவள் பாதுகாப்பான். அல்லாஹ்வை நீர் நினைவுகூர்ந்து


‎‫


ரியாளுஸ்ஸாலிஹீன்


வருவீராக! உமக்கு முன்னே அவனை நீர் அறிவீர் நீர் கேட்டால் அல்லாஹ்விடம் கேட்பீராக! நீர் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவிதேடுவீராக! இந்த சமுதாயம், ஏதேனும் உமக்கு நன்மை செய்ய ஒன்று சேர்ந்தாலும், உமக்கு அல்லாஹ் எழுதி வைத்ததைத் தவிர எதையும் அவர்களால் கொடுக்க முடியாது. மேலும், ஏதேனும் உமக்கு தீமை செய்ய அவர்கள் ஒன்று சேர்ந்தாலும், உமக்கு அல்லாஹ் எழுதி வைத்திருந்தாலே தவிர, அவர்களால் உமக்கு தீங்கிழைக்க முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டது. பதிவு ஏடுகள் சுருட்டப்பட்டு விட்டது என்பதை நீர் அறிந்து கொள்வீராக!" என நபி (ஸல்) கூறினார்கள்.


(திர்மிதீ:2516. இந்த ஹதீஸ் 'ஹஸன் ஸஹீஹ்' என திர்மிதீ இமாம் குறிப்பிடுகிறார்கள்)


திர்மிதீ அல்லாத மற்ற அறிவிப்பில் பின்வருமாறு உள்ளது:


"அல்லாஹ்வின் கட்டளைகளை நீ பேணு உனக்கு முன்னே அவனைக் காண்பாய் செழிப்பான காலத்தில் அல்லாஹ்வை நீ நிளைவு கொள். கஷ்டமான காலத்தில் உம்மை அவன் அறிவான் உமக்கு எது தவறிவிடுகிறதோ. இது உன்னைச் சேர்ந்தது அல்ல! உனக்கு எது கிடைத்ததோ. அது உள்னை விட்டும் தவறிவிடக் கூடியதுமல்ல. நிச்சயமாக உதவி தேடுவது பொறுமையுடன் உள்ளது. நிச்சயமாக சந்தோசம், கஷ்டத்துடன் உள்ளது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் உள்ளது என்பதை நீர் அறிவீராக!"


அளஸ் ரழி அறிவிக்கின்றார்கள்:


"நீங்கள் சில செயல்களைச் செய்கிறீர்கள். உங்களின் கண்களிலே அது முடியை விட சாதாரணமானதாக உள்ளது. (ஆனால்) இவை (மனிதர்களை) அழித்துவிடக் கூடியது" என நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் கருதக்கூடியவர்களாக இருந்தோம். (புகாரி:6492)




அபூஹுரைரா ரழி அறிவிக்கின்றார்கள்:


"நிச்சயமாக, அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ் தடுத்துள்ளவற்றை மளிதன் செய்யும் போதுதான். அல்லாஹ்வுக்கு ரோஷம் ஏற்படுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


(புகாரி:5223. முஸ்லிம்:2761)அபூஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள்:


"இருள் நிறைந்த இரவு போல் (தொடரும்) குழப்பத்தை அஞ்சி, நீங்கள் நற்செயல் புரிய விரையுங்கள். ஒருவன் காலையில் முஃமினாக இருப்பான். மாலையில் காஃபிராக இருப்பான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பான் . காலையில் காஃபிராக எழுவான். உலக நோக்கங்களுக்காக தன் மார்க்கத்தையே விற்றுவிடுவான் " என்று நபி (ஸல்) கூறினார்கள்.


(முஸ்லிம்:118)அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பற்றி கடும் எச்சரிக்கை!


1. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்


'என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்


அறிவிப்பவர்: அலி(ரலி)


ஆதார நூல்கள்: புகாரி 106, முஸ்லிம் 2)


என் மீது, எவன் வேண்டுமென்றே பொய் சொல்கின்றானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதனால்தான் உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன் என்று அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அனஸ்(ரலி)


நூல்கள்: புகாரி 108, முஸ்லிம் 4


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என்மீது யார் வேண்டுமென்றே பொய்யுரைப்பானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.


அறிவிப்பவர்: அபூஹ ரைரா(ரலி)


நூல்கள்: புகாரீ 110, முஸ்லிம் 4


 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்


அறிவிப்பவர்: முகீரா(ரலி)


நூல்கள்: புகாரி 1291, முஸ்லிம் 

ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


புஹாரி: அபூஹூரைரா(ரலி)


அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர்(அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி(ஸல்)அவர்கள்


சென்றார்கள் உடனே அவரைக் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள் ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.


புஹாரி24: அப்துல்லாஹ் (இப்னு உமர்(ரலி)


23- இம்ரான் பின் ஹூஸைன்(ரலி)அவர்கள், நாணம் நன்மையை மட்டுமே தரும் என நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள்.


புஹாரிவா: இம்ரான் பின் ஹூஸைன்(ரழி)


எவரிடம் மூன்று தன்மைகளக் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுமையை உணர்ந்தவராவார்(அவை) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரிய வராவது. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல்


இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.


புஹாரி16: அனஸ்(ரலி)

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்


புஹாரி6ை9: அபூஹுரைரா(ரலி)


80- உங்ளில் ஒருவர் தமது இஸ்லாத்தை அழகாக்கிக் கொண்டால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும் அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அந்த தீமையின் அளவு போன்றே பதிவு செய்யப்படும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.


புஹாரி42: அபூஹுரைரா(ரலி)


81- (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள் அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும்(அவை இன்னின்னவை என நிர்ணயித்து)எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என


(மனத்தில்)எண்ணிவிட்டாலே அதை செயல்படுத்தாமல் விட்டாலும் சரி- அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால்,அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக எழுநூறு மடங்காக இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் தீமை செய்ய எண்ணி,(அல்லாஹ்வுக்கு அஞ்சி அதைச் செய்யாமல் கை விட்டால் அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழுநன்மையை அல்லாஹ் எழுதுகிறான் எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.


புஹாரி6491: இப்னு அப்பாஸ் (ரலி)


மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹயாத் என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக் ஆற்றின் பெயர் ஹயா என்று சந்தேகப்படுகிறார். அவ்வாறு அவர்கள் இந்த ஆற்றில் போடப்பட்டதும் பெறும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போலப் பொலிவடைவார்கள் அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


புஹாரி22: அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி)


- நபி (ஸல்) அவர்கள் (சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின் வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர் அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் அது நிரம்பியதைப் போன்று அவருக்குத் தோன்றும் உடனே அவர் திரும்பி வந்து என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன், என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள் என்று (மீண்டும்) சொல்வான் அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்கும் தோன்றும் ஆகவே அவர் திரும்பி


வந்து என் இறைவா! அது நிரம்பி இருக்கக் கண்டேன் என்று கூறுவார். அதற்கு அவன் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள் ஏனெனில் உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு அல்லது உலகத்தைப் போன்று பத்து மடங்கு (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு, என்று சொல்வான். அதற்கு அவர் அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா? அல்லது என்னை நகைக்கின்றாயா? என்று கேட்பார். இதைக் கூறிய போது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன் அறிவிப்பாளர் ஒருவர் கூறுகிறார். இவரே சொர்க்கவாசிகளில் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார் என்று கூறப்பட்டுள்ளது.


புஹாரி6571: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம், பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள் என்று கூறினார்கள் உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல் அசதீ (ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடு போட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து அல்லாஹ்பின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வே இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில்


உக்காஷா உம்மை முந்தி விட்டார் என்று சொன்னார்கள்


புஹாரிக42: அபூஹூரைரா(ரலி)


 பௌர்ணமி நிலவின் பிரகாசம் வேண்டுமா?


 நிச்சயமாக என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர். அல்லது ஏழு லட்சம் பேர் (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை-அவர்களின் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாதவரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்) அவர்களின் முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவின் வடிவத்தில் இருக்கும்.


புஹாரி6554: சஹ்ல் பின் சஅத்(ரலி)

கருத்துரையிடுக

0 கருத்துகள்