பெருமையடிக்காதீர்கள்
உங்களின் குறையைச் சுட்டுகிறபோது கண்ணாடி பெருமையடிப்பதில்லை. அது தன் கடமையைச் செய்து விட்டு கண்ணியமாய் ஒதுங்கிக் கொள்கிறது. நீங்கள் உங்களின் சகோதரருக்குக் கண்ணாடியாய் இருக்கிறீர்கள். கடமையைச் செய்துவிட்டு கண்ணியமாய் ஒதுங்கிக் கொள்ளுங்கள். பெருமை, கர்வம், ஆணவம் முதலிய வற்றை முற்றிலுமாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். பெருமை இறைவனுக்கு மட்டுமே உரியது என்பதை மனதில் வையுங்கள்.
“உன் முகத்தை மனிதர்களைவிட்டும் (பெருமையாக) திருப்பாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! கர்வம் கொண்டு ஆணவம் கொள்வோரை ஏக இறைவன் நேசிக்கவே மாட்டான். உன்னுடைய நடையில் நடு நிலையை மேற்கொள்! உன் குரலையும் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரல்தான்.”
திருக்குர் ஆன் 31:18,19
...கர்வமுடையோராய், வீண் பெருமை உடையோராய் இருப்பவர்களை ஏக இறைவன் நேசிப்பதே இல்லை.
திருக்குர்ஆன் 4:36
“தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில்) இழுத்துக் கொண்டு செல்கிறவரை அல்லாஹ் மறுமை யில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
“இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாய் இல்லா விட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறதே” என அபூ பக்ர்(ரலி) கூறினார்கள்.
“நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவித்தவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 5784, 3665.
“உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள்; வீண்விரயம் செய்யாதீர்கள்; தற்பெருமை கொள்ளாதீர்கள்" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
"விரயம் அல்லது தற்பெருமை ஆகிய இரண்டும் உன்னை அண்டாத வரை நீ விரும்பியதை உண்ணலாம்; நீ விரும்பியதை உடுத்தலாம்" என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
நூல்: ஸஹீஹ் அல் புகாரீ
“தன்னுடைய ஆடையைத் தற்பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவித்தவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 5783
பெருமைக்காரனுக்கு நரகம்தான் கதி என்பதை அறிந்து கொள்ளுங்கள். பெருமைக்காரனை நரகம் தன்னுள் வைத்துக் கொள்வதை பெருமையாகக் கருதுகிறது.
“சுவர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன.
"பெருமை அடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர் களுக்காகவும் நான் சொந்தமாய் ஆக்கப்பட்டுள்ளேன்” என நரகம் சொன்னது.
"எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைகிறார்கள்” என சுவர்க்கம் கூறியது.
“நீ என் அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்" என அல்லாஹ் சுவர்க்கத்திடம் கூறினான்.
"நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியார் களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்” என அல்லாஹ் நரகத்திடம் கூறினான்.
அவ்விரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப் படும். ஆனால், நரகமோ இறைவன் தன் காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது "போதும்! போதும்!” எனக் கூறும். அப் போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், அதில் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.
அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடை யோனுமான அல்லாஹ், சுவர்க்கத்திற்கு என்றே (புதிதாகச்) சிலரைப் படைப்பான்" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 4850.
பெருமைக்காரர்கள் இந்த உலகத்திலும் இறைவனால் தண்டிக்கப்படலாம். இதற்கு ஓர் முன்னுதாரணமே இருக்கிறது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடுமையான எச்சரிக்கையாய் இதைக் கூறினார்கள்.
"ஒரு மனிதன் தன் கீழாடையை தற்பெருமையினால் (தரையில்) இழுத்துக் கொண்டே நடந்தபோது, அவன் (பூமியில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான்" என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவித்தவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) நூல்: ஸஹீஹ் அல் புகாரீ, ஹதீஸ் எண்: 3485
பெருமை அணுவளவு ஒருவரின் இதயத்தில் குடி கொண்டாலும் அவருக்கு சுவர்க்கம் கிடைக்காது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
"தன் இதயத்தில் அணுவளவு பெருமையை வைத்திருப்ப வர் சுவர்க்கம் புகமாட்டார்...” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவித்தவர்: இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்: முஸ்லிம் 91
பெருமை இறைவனின் ஆடை; அதை அணிந்து கொள்ள நினைக்காதீர்கள். அதை நீங்கள் அணிந்து கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துபோவீர்கள். இப்லீஸ் இறைவனின் உவப்பைப் பெற்றான். உயர் வடைந்து வானவர்களுடன் இருந்தான். இப்லீஸ் இறை வவனை வணங்குவதில் குறை ஏதும் வைத்ததில்லை. ஆனால் அவன் பெருமைக்காரனாய் இருந்தான். அதன் காரணமாய் அவனை நிரந்தர நரகவாசியாய் இறைவன் ஆக்கிவிட்டான்.
"நிச்சயமாக களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்கப் போகிறேன்" என உம்முடைய இரட்சகன் வானவர் களிடம் கூறியதையும், "நான் அவரைச் செவ்வைப்படுத்தி, என் ஆவியிலிருந்து அவருக்குள் ஊதியதும் அவருக்குப் பணியுங்கள்" (எனக் கூறியதையும் நினைவு கூரும்).
அப்போது வானவர்கள் அனைவரும் கூட்டாகச் சிரம் பணிந்தனர்.
இப்லீஸைத் தவிர; அவன் பெருமையடித்து இறைமறுப் பாளர்களில் ஒருவனாய் ஆகிவிட்டான்.
"இப்லீஸே! நான் என் இரு கைகளால் படைத்தவருக்குப் பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது? நீ பெருமை யடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் ஆகி விட்டாயா?” என (இறைவன்) கேட்டான்.
"அவரைவிட நானே மேலானவன்; என்னை நீ நெருப் பிலிருந்து படைத்தாய். அவரையோ களி மண்ணி லிருந்து படைத்தாய்” என (இப்லீஸ்) கூறினான். "இதிலிருந்து நீ வெளியேறு! நிச்சயமாக நீ அருளை விட்டும் ஒதுக்கப்பட்டவன்” (என்றும் இறைவன்
கூறினான்).
“உன் மீது மறுமை நாள் வரை என் சாபம் நிச்சயமாய் இருக்கிறது” (என்றும் இறைவன் கூறினான்).
"இரட்சகனே! அவர்கள் (மீண்டும்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளிப்பாயாக" என (இப்லீஸ்) கேட்டான்.
“நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் உள்ளாய்" என (இறைவன்) கூறினான்.
"குறிப்பிட்ட காலத்தின் நாள்வரை (உனக்கு அவகாசம் உண்டு" என்றும் இறைவன் கூறினான்).
“உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாய் அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்" என (இப்லீஸ்) கூறினான்.
"அவர்களில் தூய உள்ளங்கொண்ட உன்னுடைய அடியார்களைத் தவிர” (என்றான்).
“அது உண்மை; உண்மையையே நானும் சொல்கிறேன்” என இறைவன் கூறினான்.
“உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின் பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நிரப்புவேன்.” (என இறைவன் கூறினான்)
திருக்குர்ஆன் 38:71-85
வானவர்கள் அளவிற்கு உயர்ந்த இப்லீஸையே பெருமை யடித்த ஒரே காரணத்திற்காக இறைவன் தூக்கி எறிந்து விட்டான் என்றால் நீங்கள் பெருமையடித்தால் உங்களின் நிலை என்ன ஆகும் என்பதை சற்று எண்ணிப்பாருங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!